Sunday, 2 June 2024

நியாண்டர்


ஒரு மொழியில் அந்த மக்களின் வரலாறும் ஒளிந்துள்ளது

ஆங்கிலத்தில் Handicapped என்ற வார்த்தை உண்டு

அதன்பொருள் "கையில் தொப்பி" என்பதாகும். முன்பு உடல் ஊனமுற்றவர்கள் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தி தெருக்களில் நின்று பிச்சை எடுத்தார்கள். அதனால் அவர்கள் பெயரே Handicpaped என வந்துவிட்டது. இன்றும் மேலைநாடுகளில் தொப்பியை பிச்சைபாத்திரமாக பயன்படுத்தும் வழக்கம் உண்டு. 

 Piss Poor என்ற சொல்லும் அதுபோல் தான். முன்பு மிக கொடிய வறுமையில் இருந்தவர்கள் தினமும் நிறைய தன்ணீரைக் குடித்து, சிறுநீர் கழித்து, அதை பாத்திரத்தில் பிடித்துக்கொன்டு போய், தோல் பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு விற்பார்கள். சிறுநீரில் அம்மோனியா உன்டு. தோலை பதபடுத்த பயனாகும். அதனால் piss poor என்ற சொல் வழக்கில் வந்தது.

அதேபோல இங்கிலாந்தில் பேய்மழை கொட்டுகையில், பூனைகள், நாய்கள் எல்லாம் பயந்துபோய் வீட்டு கூரை மேல் ஏறி ஒளிந்துகொள்ளும், கூரையே தகரும் வண்ணம் மழை பெய்தால், அவை வீட்டுக்குள் விழும். அதனால் பெருமழைக்கு வந்த பெயர் "It rains cats and dogs"

சாத்துக்குடி பழத்தின் பெயர்காரணம் சாத்தான்குடி வணிகர்கள் அறிமுகபடுத்தியதால் சாத்துக்குடி என கூறப்படுகிறது

சீனாவில் இருந்து இறக்குமதி ஆன வெண்சர்க்கரை சீனி சக்கரை

பெட்ரோமாக்ஸ் என்பது ஜெர்மானிய கம்பனி பெயர். அந்த கம்பனி நிறுவனர் கண்டுபிடித்த விளக்கின் பெயர் ஆங்கிலத்தில் Paraffin lamp

Parrafin lamp என 60ஸ், 70ஸ் கிட்ஸ் எல்லாம் புத்தகங்களில் படித்திருப்பார்கள். மின்சாரம் எல்லாம் பரவாத காலகட்டத்தில் இரவில் மக்கள் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஏந்திகொன்டு ஊர்வலம், சவ அடக்கம், கல்யானம் மாதிரி விசயங்களுக்கு போவார்கள்.

வழக்கில் இருந்து மறைந்திருக்கவேண்டிய இந்த பெயர் வைதேகி காத்திருந்தாள் படத்தில் கவுண்டமணி "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா" என கேட்ட டயலாக்கால் பிரபலமாகி, அது அகராதியிலும் ஏறிவிட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்கை வாழ்நாளில் பார்த்திராத தலைமுறைகள் இன்று அதன் பொருள் தெரியாமல் "பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? பேரழகே டார்ச்சுலைட்டு கசக்குமா" என பாட்டுபாடுகிறார்கள். அந்த பெயரில் திரைப்படங்கள் வருகின்றன

வடிவேலு புண்ணியத்திலும் இப்படி அக்ராதியில் ஏறிய சொற்கள் ஏராளம்

பெட்ரோமாக்ஸ் கம்பனி பல கை மாறி, இன்று அந்த பிராண்டின் உரிமையாளர் நோக்கியா

வரலாறு விசித்திரமானது. அதனால் தான் #history_is_his_story

~ நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment