“நம்முடைய இளமைக் காலத்தில் கச்சிதம் குறித்த மாயை மீது காதலுறுகிறோம். எதிலும் கச்சிதத்தை எதிர்பார்க்கிறோம். வயதாக ஆக, அந்த மாயை விலகுகிறது. எது ஒருவனை மனிதன் ஆக்குகிறதோ அதன்மீதே பிரியம் கொள்கிறோம். இன்னல்களையும் தடைகளையும் மன வலிமையுடன் கடந்த நெகிழ்ச்சிக் கதைகள், மூப்படைவதனால் ஏற்படக்கூடிய பலகீனங்கள், கர்ம வினைகளைத் துணிவுடன் சந்தித்த தனிமனிதரின் போராட்டங்கள், சூழலுக்கேற்பத் தன்னைத் தகவமைத்துக்கொண்டு சமரசத்துக்கு இணங்கிய பிழைப்பின் பாடுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்கிறோம்.
நமது ஆற்றல் வடிந்து, வலிமை குன்றி, வாழ்க்கை தரும் படிப்பினைகளின் முன் நிராயுதபாணியாக நிற்கப் பழகுகிறோம். அந்தக் கையறு நிலையிலேயே ஒருவரையொருவர் கண்டடைகிறோம். நேசக் கரம் நீட்டுகிறோம். அப்போது நாம் காயங்களைக் கண்டு அஞ்சுவதில்லை, அருவருத்து முகம் விலக்குவதில்லை. ஒருகாலத்தில் அசிங்கமான வடுக்கள் எனத் தோன்றியவை நாம் முழுமையாக வாழ்ந்ததற்கான சாட்சியங்களாக மாறுகின்றன.”
- ஜெஃப் பிரவுன்.
No comments:
Post a Comment