ஒரு ஆதிவாசியாக இருப்பது என்றால் என்ன? “ஒருமுறை பார்தி பழங்குடிப் பெண் ஒருவரை எங்கள் நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேற்றிருந்தோம். பயணச் சீட்டோடு கொஞ்சம் பணமும் அவருக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு புதிய புடவை வாங்கி அணிந்துகொண்டு ரயில் ஏறியிருக்கிறார். சில மணி நேரங்களில் மும்பைக் காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டனர். ‘உனக்கு எப்படிப் புதிய புடவை கிடைத்தது? திருடினாயா? எங்கிருந்து?’ என்று அவரைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தன் புதிய சேலையையும் தன்மானத்தையும் அவர் இழக்க நேர்ந்தது. திரௌபதி ஒரு புராணப் பாத்திரம் என்று யார் சொன்னது?” --- மருதன் , ” இந்து தமிழ் திசை ”
No comments:
Post a Comment