நல்ல பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால் அதை நினைவூட்டக் கூடிய விஷயங்கள் கண்ணில் படும்படி இருக்க வேண்டும். இதை ஜேம்ஸ்க்ளியர் முதல் விதியாகச் சொல்கிறார் (Cue- Make it obvious) . அதுவும் நாம் தினமும் அல்லது அடிக்கடி எதிர்கொள்ளும் சூழலாக இருக்க வேண்டும். ஒவ்வொரு இரண்டாம் சனிக்கிழமையும் வாக்கிங்க் போவேன் என்று வைத்துக் கொண்டால் மாதம் ஒரு முறைதான் போவோம். அதே நேரம் கெட்ட பழக்கங்களிலிருந்து விலகவும் இதே விதியை மாற்றி அமைப்பது உதவும். அரிதாக நடக்கும் ஓர் நிகழ்வோடு தேவையில்லாத பழக்கத்தைக் கண்டிஷனிங்க் பண்ணி வைத்துக் கொண்டால் அதை அடிக்கடிச் செய்ய மாட்டோம். RCB (ஆண்கள்) அணி ஐ பி எல் கோப்பையை வெற்றி பெற்றால் மட்டுமே மது அருந்துவேன் என்று வைத்துக் கொண்டால் குடிப்பழக்கத்தில் இருந்து எளிதில் விடை பெறலாம்.
-ராமானுஜம்
No comments:
Post a Comment