Friday, 14 June 2024

great wall of india


சீன பெருஞ்சுவர் தெரியும், இந்திய பெருஞ்சுவர் (Great wall of India) தெரியுமா?

ராஜஸ்தானில் 15ம் நூற்றாண்டில் ராணா கும்பாவால் உதய்பூர் அருகே கட்டபட்டது தான் கும்பல்கர் (Kumbhalgarh) எனும் இந்த கோட்டைப் பெருஞ்சுவர். சுமார் 33 கிமி நீளமான சுவர் என்பதால் உலகின் நீண்ட சுவர்களில் ஒன்றாக கருதபடுகிறது. யுனெஸ்கோ பாதுகாக்கபட்ட கலாசார குறீடாகவும் அறிவிக்கபட்டுள்ளது. இந்த கோட்டையில் பிறந்தவர் தான் மகாராணா பிரதாப் சிங். அதனால் ராஜஸ்தான் வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கிறது இந்த கோட்டை.

இதன் அகலம் 15 மீட்டர். எட்டு குதிரைகள் அருகருகே நடக்கமுடியும்.

கிபி 1535ல் சித்தூர் முற்றுகையிடபட்டபோது,. அதன் இளவரசன் உதய் இங்கே தான் கொண்டுவரபட்டார். சுமார் ஐம்பது ஆண்டுகள் இந்த கோட்டை மேல் பல தாக்குதல்கள் நடந்தும், இதை வீழத்தவே முடியவில்லை.

ஆனால் கிபி 1578ம் ஆண்டு, கோட்டைக்கு நீர் வரும் பகுதி அக்பரின் தளபதி ஷபாச்கானால் கண்டுபிடிக்கபட்டு, நீர் வரத்து அடைக்கபட்டு கோட்டை வீழ்ந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே ராணா பிரதாப் சிங் இதை மீன்டும் மீட்டுவிட்டார். அதன்பின் பெரியதாக இங்கே போர்கள் நடைபெறவில்லை. இந்த கோட்டையை பிடிக்க முடியாது என கருதியே விட்டு இருக்கலாம்.

ப்ரிட்டிஷார் ஆட்சியில் 1818ல் சில சாதுக்கள் கோட்டையை பிடித்து புரட்சி செய்தார்கள். ஆனால் ப்ரிட்டிஷார் பேசி அவ்ர்களை சரணடைய செய்துவிட்டார்கள்.

No comments:

Post a Comment