Sunday, 16 June 2024
மனிதனின் தனித்தன்மை அவனது நம்பிக்கை (trust, faith, hope). இறை, பக்தி போன்ற அருவமான விஷயங்கள் மீதான நம்பிக்கையைப் பற்றிச் சொல்லவில்லை. சக மனிதர்கள் மீதும் உறவுகள் மீதும் அவன் வைத்திருக்கும் பற்று. எத்தனை ஆயிரம் முறை நொறுக்கப்பட்டாலும் புதிய உறவுக்கும் ஆளுக்கும் அவன் மனத்தில் எப்போதும் இடமிருக்கிறது. ஓர் உறவால், பிரிவால், துரோகத்தால் மனம் கசந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையே வெறுப்பதாகப் பாவனை செய்தாலும் தனித்து ஒடுங்கிச் சுருண்டாலும் கழிவிரக்கம் கொண்டாலும் மறுபடியும் ஓர் உறவு தழைப்பதற்கான வெளியை (space) மனம் பொத்திப் பாதுகாக்கிறது. ‘அப்படியில்லை’ என நம்ப விரும்புவது சுய ஏமாற்று மட்டுமே. மனிதனின் விசேஷ குணம் இது. அந்த மனவெளி பிரபஞ்சம் அளவுக்கே விசாலமானது. மனிதனை மனிதனாக்குவது.-கோகுல் பிரசாத்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment