Monday, 28 September 2026

68-ஒற்றை வைக்கோல் புரட்சி


ஒற்றை வைக்கோல் புரட்சி இயற்கை வேளாண்மை (The One-Straw Revolution) -மசானபு ஃபுகுவோகா

ஜப்பானிய இயற்கை விவசாயியும் தத்துவவாதியுமான
 ஃபுகுவோகா  அவர்கள் இளமையில் தாவர நோய்கள் குறித்த நுண்ணுயிரியல் நிபுணராகவும் வேளாண்மை ஆராய்ச்சி விஞ்ஞானியாகவும் பணியாற்றினார். பின்னர் இயற்கை குறித்த ஆழமான தெளிவுக்குப் பிறகு, தன் பணியைத் துறந்து கிராமத்திற்குத் திரும்பி, சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது பண்ணையில் இயற்கை விவசாய முறைகளை நடைமுறைப்படுத்தி ஆராய்ந்தார்.

நவீன விவசாயத்தில் செய்யப்படும் தேவையற்ற கடின உழைப்புகளையும் இரசாயனப் பயன்பாடுகளையும் தவிர்த்து, இயற்கையின் போக்கிலேயே விவசாயம் செய்யும் எளிய தத்துவத்தை இவர் ஒன்றுமே செய்யத் தேவையில்லாத வேளாண்மை"என்று முன்வைக்கிறார்

இயற்கை வேளாண்மையின் நான்கு அடிப்படைகளாக பிரிக்கிறார்.

*உழவு செய்யாமலிருப்பது: நிலத்தை உழுவதோ திருப்புவதோ தேவையில்லை; தாவர வேர்களும் நுண்ணுயிரிகளுமே மண்ணை இயல்பாகப் பதப்படுத்தும்

*செயற்கை உரங்களை தவிர்த்தல்
வேதியியல் உரங்களோ தனியாகத் தயாரிக்கப்படும் தழையுரங்களோ தேவையில்லை

*களைக்கொல்லிகள் தவிர்வு: களைகளை முற்றிலும் அழிக்காமல், வைக்கோல் பரப்புதல் மற்றும் மூடு பயிர்கள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துதல்

*பூச்சிக்கொல்லிகள்  வேதியியல் பூச்சிக்கொல்லிகள் இன்றி, இயற்கைச் சமநிலையின் மூலம் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்

எளிய தொழில்நுட்பங்கள்: விதைகளைக் களிமண் உருண்டைகளாக்கி (seed balls) விதைத்தல், அறுவடைக்குப் பின் வைக்கோலை வயலிலேயே மூடாக்காகப் பரப்புதல் போன்ற முறைகள் மூலம் நவீன இரசாயன விவசாயத்திற்கு நிகரான மகசூலைப் பெற முடியும் என்பதை இவர் நிரூபித்தார்

*வயலில் நேரடியாக விதைகளைத் தூவும்போது எலிகள், பறவைகள், சுவர்க்கோழிகள் மற்றும் நத்தைகள் விதைகளைத் தின்றுவிடுகின்றன. மேலும், மழை பெய்து வயல் சகதியாக இருக்கும்போது நிலத்தில் இறங்கி வேலை செய்ய இயலாது. காரட் போன்ற சில காய்கறி விதைகள் எளிதில் முளைப்பதில்லை. இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விதைகளைப் பாதுகாத்து, அவை சரியாக முளைப்பதைத் உறுதிசெய்ய ஃபுகுவோகா களிமண் உருண்டை முறையைப் பயன்படுத்தினார்

*நெல் விதைகள் மட்டுமின்றி, பார்லி, கோதுமை, சோயாபீன்ஸ் மற்றும் காரட் போன்ற பல்வேறு தானியங்கள் மற்றும் காய்கறி விதைகளுக்கும் இக்களிமண் உருண்டை முறை பயன்படுத்தப்படுகிறது

*மசானபு ஃபுகுவோகா அவர்களின் இயற்கை வேளாண்மையில் வைக்கோல்  (Straw Mulching) என்பது நிலத்தின் வளத்தைப் பாதுகாக்கவும் உழைப்பைக் குறைக்கவும் பயன்படும் மிக முக்கியமான அடிப்படையாகும்

வைக்கோலை எந்திரங்களைக் கொண்டு துண்டாக்காமல், முழு வைக்கோலாகவே வயலில் பரப்ப வேண்டும். நிலத்திலிருந்து அறுவடை செய்யப்படும் தானியம் தவிர்த்து, எஞ்சிய வைக்கோல் அனைத்தையும் மீண்டும் நிலத்திற்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும். வைக்கோல் மூடாக்கு மண்ணின் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்துக் கொள்வதால், அடிக்கடி நீர்ப்பாசனம் செய்ய வேண்டிய தேவையை நீக்குகிறது

ரசித்தவை

*இயற்கையை ஆக்கிரமித்து மனிதன் அதை 'மேம்படுத்துவது'  நோக்கமல்ல; மாறாக இயற்கையோடு முழுமையாக ஒத்துழைப்பதே அவரது கொள்கையாகும். 

*மனிதன் பகுப்பாய்வு அறிவியலின் மூலம் இயற்கையைத் துண்டு துண்டாகப் புரிந்து கொள்ள முயல்வது ஒரு குறுகிய பார்வை என்றும், அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது ஆத்மாவற்ற, நாசம் செய்யப்பட்ட ஒரு எலும்புக் கூடு போன்றது என்றும் அவர் சாடுகிறார்.

*வேளாண்மை என்பது வெறும் பயிர்களையும் உணவையும் உற்பத்தி செய்வது மட்டும் அல்ல; "மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே அதன் இறுதி லட்சியமாகும்"

வேளாண்மை என்பது வெறும் பயிர்களை வளர்ப்பது மட்டுமல்ல; மனித இனத்தை வளர்த்து முழுமையடையச் செய்வதே அதன் இறுதி லட்சியம் என்று ஃபுகுவோகா வலியுறுத்துகிறார். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பு, ஆரோக்கியமான உணவு முறை மற்றும் மனித மனநிலை குறித்த ஆழமான பார்வைகளை இந்நூல் வழங்குகிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment