Friday 30 August 2024

காலம் சில சமயங்களில் பறவையைப் போல பறக்கிறது, சில சமயங்களில் நத்தையை போல மெதுவாக ஊர்ந்து செல்கிறது, ஆனால் அது வேகமாக அல்லது மெதுவாக செல்கிறதா என்று கூட கவனிக்காத கணங்களில் தான் மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறான்.-இவான் துர்கனேவ்.

மினிமலிசம்



கடந்தகாலத்தை பற்றி நினைப்பதால் வருவது டிப்ரசன்

எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளால் வருவது anxiety

குழந்தைகளுக்கு இந்த இரண்டும் இல்லை. ஏனெனில் அவை இந்த நிமிடம் என்ன விளையடலாம் என மட்டுமே யோசிக்கின்றன.

இதை power of now என அழைக்கிறார்கள்.

நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வது power of now.

எதிர்காலத்தை பற்றி திட்டமிட தனியாக ஒரு அரைமணி நேரம் ஒதுக்குங்கள்.

நாளின் பிற 23:50 மணிநேரத்தை நிகழ்காலத்துக்கு ஒதுக்குங்கள்.

காலை ஒரு கோப்பை தேநீரை பருகுகையில் நேற்றைய தோல்விகளும் நாளைய சவால்களும் உங்கள் மனதில் இல்லாமல் இருக்கட்டும்.

அப்போது தான் அந்த கோப்பை தேநீரை அனுபவித்து பருக முடியும். ஒரு கோப்பை தேநீரை ரசித்து பருகவும் power of now தேவைப்படுகிறது.

கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். அது ஒரு சிறை. 

கடந்தகால நிகழ்வுகளுக்காக பழிவாங்கும், வருந்தும் எண்ணத்தை கைவிட்டு நிகழ்காலத்துக்கு நகர்கையில் நீங்கள் ஒருவரை மனச்சிறையில் இருந்தும், தாங்க முடியாத மன அழுத்ததிலும் இருந்து விடுவிக்கிறீர்கள். அவர் 👇🏻

—> நீங்கள் தான்

-மினிமலிசம்

நிலம் தோண்டிப் புகுந்துகொள்ளவில்லை வானில் ஏறிச் செல்லவில்லை கடல் மேல் நடந்து செல்லவில்லை நாடு நாடாக, ஊர் ஊராக வீடு வீடாகத் தேடினால் கிடைக்காமலா போவார் காதலர்? -வெள்ளிவீதியார்(சுஜாதாவின் குறுந்தொகை அறிமுகத்தில்)

Thursday 29 August 2024

பூமியும் வானமும்


நெப்டியூன், சூரிய மண்டலத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவான கிரகம் ஆகும். அது சூரியனிலிருந்து பூமிக்கு உள்ள தூரத்தை விட 30 மடங்கு விட அதிகமாக உள்ளது!

நெப்டியூன், பூமியை விட 17 மடங்கு அதிகமான நிறை கொண்டது. இதன் அர்த்தம், நீங்கள் பூமியில் 100 கிலோ எடை கொண்டிருந்தால், நெப்டியூனில் 1700 கிலோ எடையுடன் இருப்பீர்கள்.

நெப்டியூனில் இறங்கினால் "தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு" என்ற பாட்டை உடனே பாடவேண்டி இருக்கும். காரணம் நெப்டியூனில் காற்று அடிக்கும் வேகம் அப்படி. அதாவது நெப்டியூனில் புயல் காற்று வீசும் வேகம் ஒலியை விட வேகமானது. சூப்பர்சானிக் சூறாவளி.

அங்கே மணிக்கு 2,100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இது பூமியில் ஏற்படும் சுனாமிகளின் வேகத்திற்கு நிகரானது. நெப்டியூனில் இறங்கினால் ஒவ்வொரு நிமிடமும் சுனாமி தான்

நெப்டியூன், சூரிய மண்டலத்தின் மிக குளிர்ந்த கிரகம் ஆகும். அதன் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் மைனஸ் 214 டிகிரி செல்சியஸ் ஆகும். இதில் அதிசயம் எதுவும் இல்லை தான். ஆனால் சூரிய மண்டலத்தில் மிகவும் குளிர்ந்த கிரகமாக இருந்தாலும், நெப்டியூனின் வளிமண்டலம் ஆச்சரியமான அளவு வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. 

அதாவது நெப்டியூனின் வளிமண்டலத்தில் காற்று மிக அதிகம். நெப்டியூன், மற்ற வாயுக் கோளங்களைப் போல, ஈர்ப்பு சுருக்கம் என்ற செயல்பாட்டின் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. அதன் ஈர்ப்புவிசை வெப்பமாக மாற்றப்படுகிறது. அதனால் நெப்டியூனின் வளிமண்டலத்தில் வெப்பநிலை சுமார் 5,000 டிகிரி செல்சியஸ் (9,000 டிகிரி பாரன்ஹீட்) ஆகும். இது சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலைக்கு நிகரானது!

நெப்டியூனில் பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் அளவை விட சுமார் 50,000 மடங்கு கூடுதல் நீர் பனிக்கட்டியாக உள்ளது. இது மிக கொடூரமான குளிருடன் சூப்பர் அயனியாக் பனிக்கட்டி என்ற வகை நீராக உள்ளது.

வரும்காலத்தில் எதாவது விபத்து நிகழ்ந்து, உதாரணமாக நெப்டியூனின் வளிமண்டலத்தின் மீது ஒரு சிறிய கிரகம் மோதி அதன் வளிமண்டல வெப்பத்தை அதிகரித்தால், அது சூப்பர் அயனியாக் பெருங்கடல்களை உருக்கி, கிரகத்தின் மேற்பரப்பில் மாபெரும் சமுத்திரங்களை திரவநிலையில் உருவாக்கலாம். இது நடக்காது என எல்லாம் சொல்ல முடியாது. இப்படி நடந்தால், புதிய கடற்பரப்பு கடலில் உயிரின் தோற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கலாம். ஆனால் இப்போதைக்கு இது சும்மா சயன்ஸ் பிக்சக்ன் கதைகளுக்கு தான் உதவும். 

சுனாமி, வளிமண்டல வெப்பம், மாபெரும் சமுத்திரம் என மிக வித்தியாசமான நிலவியல் நெப்டியூனுடையது.

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

நான் செயல்புரியும் அனைவருக்கும் சொல்வது இதுவே. செயலின் பயன் என்பது அதைச்செய்யும் நிறைவுதான். அதன் வழியாகப் பொருள் கொள்ளும் வாழ்வுதான். அதை அளித்து பதிலுக்கு நாம் பெற்றுக்கொள்ளும் ஒன்றும் இல்லை. நாம் இங்கே எதன்பொருட்டும் செயலாற்றக்கூடாது. நம் இயல்பினால் செயலாற்றவேண்டும், எது நமக்கு நிறைவளிக்கிறதோ அதன்பொருட்டு.- ஜெயமோகன்

Wednesday 28 August 2024

நியாண்டர்


2014

ஒலிம்பியா எனும் ஆஸ்திரேலிய பெண் தொழில் முனைவோர். கோழிப்பண்ணை வைக்கலாமா என யோசிக்கிறார்

ஆனால் கோழித்தீவன செலவு கட்டுபடி ஆகாமல் இருப்பதால், கோழிதீவனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார்

மேகாட் எனப்படும் பூச்சிகளை வளர்த்தால் என்ன என தோன்றுகிறது. இருட்டான ஒரு அறையில், உணவுகழிவுகளை போட்டு, அவற்றின் மேல் மேகாட் பூச்சிகளின் முட்டைகளை போட்டால் போதும். 14 நாளில் அவை வளர்ந்து கொழுத்துவிடும்

மேகாட் பூச்சிகள் சாப்பிடாத உணவு என எதுவுமே உலகில் இல்லை. இலைகள், தழைகள், மீதமான ஓட்டல் உணவுகள், புல்...என அனைத்தையும் சாப்பிடும். மெக்டானல்ட்ஸ் மற்றும் சில மால்களுடன் பேசி, அவற்றின் உணவுக் கழிவுகளை கொட்ட கன்டெய்னர்களை கொடுத்து, கன்டெய்னர்களை ஏற்றி வந்து பூச்சிகளை வளர்த்தார்

அதில் வந்த லாபத்தை பார்த்துவிட்டு, கோழிப்பண்ணை வைக்கும் ஐடியாவையே கைவிட்டு விட்டார். முழுமையாக மேகாட் பூச்சிகளை வளர்த்து கோழித்தீவனமாக விற்பனை செய்தார்

அதன்பின் மேலும் ஒரு ஐடியா தோன்றியது. உணவுகழிவுகள் இலவசம் தான். ஆனால் அவற்றை லாரிகளில் ஏற்றி கொன்டு வரும் செலவும் சற்று கூடுதலாக தான் இருக்கிறது. உணவு கழிவுகளை பண்ணை இருக்குமிடத்துக்கு கொண்டுவருவதை விட, உணவகம் இருக்கும் இடத்துக்கு பண்ணைகளை நகர்த்தினால் என்ன?

மெக்டானல்ட்ஸுடன் பேசினார். அவர்களின் உணவகத்தில் பூச்சிகள் இருக்கும் கன்டெய்னர் ஒன்று நிறுத்தபட்டது. மெக்டானல்ட்ஸின் மீதமாகும் பர்கர்கள், பிரெஞ்சு பிரை, கொகோகோலா..எல்லாவற்றையும் அவர்கள் ஒரு குழாயில் ஊற்றுவார்கள். அது கன்டெய்னருக்குள் வரும். அதனுள் இருக்கும் ரோபாட், அதை நசுக்கி, உருண்டையாக்கி, மாகட் பூச்சிகள் இருக்கும் அலமாரிகளில் விடும். பூச்சிகள் அதை உண்ணும். அவற்றின் முட்டைகள் தனியாக சேகரிக்கபடும். அவற்றின் கழிவுகளும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு உரமாகும். பூச்சிகள் அதன்பின்  பண்ணைகளுக்கு அங்கிருந்தே பார்சல் ஆகும். 15 நாளுக்கு ஒரு லாரி வந்து பூச்சிகளையும், உரத்தையும் எடுத்துக்கொண்டு போகும்.

மெக்டானல்ட்ஸ் கம்பனியிடம் இதை சொன்னபோது அவர்கள் "இலவசமாக எங்கள் மீதமான உணவை கொடுப்பது மட்டுமல்ல. இதற்கு மாதா, மாதம் குப்பைகளை அகற்ற ஆகும் செலவையும் உங்களுக்கே சந்தா மாதிரி கொடுத்துவிடுகிறோம்" என்றார்கள்

இப்படியே சில மால்கள், உணவகங்களிடமும் பேசி, அங்கேயும் சந்தா முறையில் மாகட் பூச்சிகளை வளர்த்து, நல்ல லாபம் சம்பாதிக்கிறார் ஒலிவியா

ஆக இப்படி மீதமான உணவை மறுசுழற்சி செய்து, உணவகங்களின் குப்பைகள், மலிவு விலை கோழித்தீவனம், சுற்றுசூழல் பிரச்சனை என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதால் தான் இவர் #பிசினஸ்_பிஸ்தாக்கள் ஆகிறார்

~ நியாண்டர் செல்வன்

Tuesday 27 August 2024

கடப்பவர் நினைவில் கொள்ளும்அழகான வழிப்போக்கராகஇருந்துவிடுங்கள்!-நாடன் சூர்யா

ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவரிடம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட்டில் சிறந்த அணிகளாக இருந்த போதும், அதெப்படி ஆஸ்திரேலியா நிறைய முக்கியமான மேட்ச்களில் ஜெயிக்கிறது, இந்தியா முக்கியமான மேட்ச்களில் தோற்கிறது? என்று கேட்டனர்.அதற்கு அவர், "இந்தியாவில் ஒரு சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அவனது அம்மா, நீ எத்தனை ரன் அடிச்ச? என்று கேட்பார். ஆனா, ஆஸ்திரேலியாவில், ஆஸ்திரேலிய சிறுவனின் அம்மா, "உன்னோட டீம் வின் செய்ததா?" என்று கேட்பார்.இரண்டுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தியாவில் அணியை விட தனி நபர் சாதனைகள் கொண்டாடப்படுகின்றன. ஆனால் ஆஸ்திரேலியாவில் அணியின் வெற்றி கொண்டாடப்படுகிறது" என்று கூறுவார்.😔

பாலூட்டி திமிங்கலம்


திமிங்கிலங்கள் பாலூட்டிகள் என்பது நமக்கு தெரியும் . ஆனால், குட்டி திமிங்கிலங்கள் எப்படி அதைக் குடிக்கும் என்பது பலருக்குத் தெரியாது. 

நிலத்தில் வாழும் பாலூட்டிகள் வாய் வைத்து பால் குடிப்பதைப் போல இல்லை. பெண் திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகள் அருகில் இருக்கும்போது தண்ணீரில் தங்கள் பாலை பீய்ச்சி அடிக்கின்றன. இந்த பால் மிகவும் கெட்டியாகவும், பசை போல, 50% கொழுப்புச் சத்துடன் இருப்பதால், தண்ணீரில் கரைவதில்லை. இது குட்டி திமிங்கிலம் எளிதாக அதை உறிஞ்சிக் குடிக்கும். விண்வெளியில் மிதக்கும் நீர் உருண்டைகளை விண்வெளிப் பயணிகள் குடிப்பது போல!

இயற்கைதான் எவ்வளவு வினோதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது! 

Photo by Mike Korostelev / UPY 2021.

ஒரு ஆதிவாசியாக இருப்பது என்றால் என்ன? “ஒருமுறை பார்தி பழங்குடிப் பெண் ஒருவரை எங்கள் நிகழ்ச்சிக்காக மும்பையிலிருந்து வரவேற்றிருந்தோம். பயணச் சீட்டோடு கொஞ்சம் பணமும் அவருக்கு அனுப்பியிருந்தோம். அவர் ஒரு புதிய புடவை வாங்கி அணிந்துகொண்டு ரயில் ஏறியிருக்கிறார். சில மணி நேரங்களில் மும்பைக் காவலர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டுவிட்டனர். ‘உனக்கு எப்படிப் புதிய புடவை கிடைத்தது? திருடினாயா? எங்கிருந்து?’ என்று அவரைத் துன்புறுத்தியிருக்கிறார்கள். தன் புதிய சேலையையும் தன்மானத்தையும் அவர் இழக்க நேர்ந்தது. திரௌபதி ஒரு புராணப் பாத்திரம் என்று யார் சொன்னது?” --- மருதன் , ” இந்து தமிழ் திசை ”

அமைதி, அளவறிந்து பேசும். கர்வம், அட்டகாசம் செய்யும். ஆரவாரம்தான் மிகப் பெரிய எதிரி. தன் பேச்சு குறித்த ஒரு கவன உணர்ச்சி, ஒரு மனிதருக்கு நிச்சயம் வேண்டும்.-பாலகுமாரன்

வெற்றுப்படகு

வெற்றுப் படகு..... (empty boat)

ஜென் துறவி "லீன்ஸீ" படகில் பயணம் செய்வதில் மிகுந்த நாட்டம் உடையவர்!! அவரிடம் சீடர்களால் வழங்கப்பட்ட ஒரு படகு இருந்தது. மடத்திற்கு அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் பயணம் செய்வார்!!சில வேளைகளில் தியானம் செய்வது கூட, அந்த படகில் இருந்தபடிதான்!!

ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்தபோது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு அதிர்ச்சியினால் சற்று கோபம் ஏற்பட்டது. யாரோ அலட்சியமாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தன் படகில் மோதி தனது தியானதிற்கு இடையூறு செய்துவிட்டதாக எண்ணி, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டார்.

என்ன ஆச்சர்யம்!! அங்கு பார்த்தால் காலிப் படகு ஒன்றுதான்[ அவர் படகின் அருகில் மிதந்து நின்று கொண்டிருந்தது "என் கோபத்தை அந்த காலிப்படகின் மீது காட்டிப் பயன் இல்லை.....

மௌனமாகத்தான் நான் ஞானம் பெற்றேன்!! அந்த வெற்றுப் படகு (empty boat) எனக்கு குருவாக இருந்தது!! இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ, மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன், இந்தப் படகும் காலியாகத்தான் இருக்கிறது!! என்று எனக்குள் கூறிக்கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது".... என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

அனைத்தும் அதனதன் சுயத்திலிருந்தே இயங்குகின்றன!! ஆழமாகப் பார்த்தால் யாரும் யாருக்கும் எதிரிகள் அல்ல!!

குரு லீன்ஸீ கூறியது போல் இங்கு அனைவருமே "வெற்றுப் படகுகள்தான்"!!
ஒருவகையில் அறியாமையும் இன்பம்தான்!! அங்குதான் கடந்து செல்வதற்கு பாதை மிச்சம் இருக்கும்!!படகு கரையில் நிற்பது பாதுகாப்பானது!! ஆனால் படகுகள் அதற்காக உருவாக்கப் படுவதில்லை!! படகின் இருப்பு பயணம் செய்வதற்காகத்தான்....

தொடர்ந்து பயணம் செய்யுங்கள்.... எப்பொழுது வேண்டுமானாலும் "வெற்றுப் படகுகள்" நம் படகின் மீது இடிக்கலாம் என்கிற எண்ணத்துடனேயே!!

~~ஓஷோ

மனிதனின் தனித்தன்மை அவனது நம்பிக்கை (trust, faith, hope). இறை, பக்தி போன்ற அருவமான விஷயங்கள் மீதான நம்பிக்கையைப் பற்றிச் சொல்லவில்லை. சக மனிதர்கள் மீதும் உறவுகள் மீதும் அவன் வைத்திருக்கும் பற்று. எத்தனை ஆயிரம் முறை நொறுக்கப்பட்டாலும் புதிய உறவுக்கும் ஆளுக்கும் அவன் மனத்தில் எப்போதும் இடமிருக்கிறது. ஓர் உறவால், பிரிவால், துரோகத்தால் மனம் கசந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையே வெறுப்பதாகப் பாவனை செய்தாலும் தனித்து ஒடுங்கிச் சுருண்டாலும் கழிவிரக்கம் கொண்டாலும் மறுபடியும் ஓர் உறவு தழைப்பதற்கான வெளியை (space) மனம் பொத்திப் பாதுகாக்கிறது. ‘அப்படியில்லை’ என நம்ப விரும்புவது சுய ஏமாற்று மட்டுமே. மனிதனின் விசேஷ குணம் இது. அந்த மனவெளி பிரபஞ்சம் அளவுக்கே விசாலமானது. மனிதனை மனிதனாக்குவது.-கோகுல் பிரசாத்

ஒரு நல்ல விவாதம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது தெரியுமா?தனது கருத்தை ஆழமாகச் சொல்வதில் இல்லை. அடுத்தவன் கருத்தை ஆழமாக உள்வாங்குவதில்....!!!-ராஜ்சிவா

அவநம்பிக்கையின் நிழல் நம் மீது கவியும்போதெல்லாம் எங்கிருந்தோ ஒரு ஒளிக்கீற்று பாயத்தானே செய்கிறது.-சக்திவேல்

இந்த உலகில் பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கும் விளம்பரத் துறையின் ஒரே நோக்கம் உங்களை குறைவுபட்டவர்களாய் உணர வைப்பதே. விளம்பரதாரர்களின் தொழில் மக்களை மகிழ்ச்சியாய் உணர வைப்பது இல்லை; ஏனெனில் நீங்கள் நிறைவானவர்களாய் உங்களை உணரத் தொடங்கினால் அவர்கள் உங்களிடம் விற்க நினைப்பதை நீங்கள் வாங்க மாட்டீர்கள்.- Andrew Oswald (பொறாமை குறித்து டவுன் டூ எர்த்தில்)

"உண்மைக்கு பல்வேறு வடிவங்கள் உள்ளன. நாம் உண்மையையும் ஒரு டெம்ப்ளேட்டாக ஆக்கிவிட்டோம். அந்த டெம்ப்ளேட்டுக்குள் செட் ஆனால்தான் உண்மை என நம்புவோம். உண்மையையே உண்மை என நம்ப வைக்க கொஞ்சம் பொய்யையும் அலங்காரத்தையும் கலந்து சொல்லவேண்டியுள்ளது".-அராத்து

'வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்'நம்முடைய நல்வினைப்பயனாக இந்த உயர்ந்த மனிதப் பிறவியாகி இப்பிறப்பு கிடைத்துள்ளது. இதனை மதித்துச் செயல் பட வேண்டும் நாம். இப்பிறப்பின் நோக்கமே அதுதான்.-அப்பர்

அமெரிக்கர்கள்தான் ‘சுருக்கங்களை’ அதாவது குறியீடுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கொலை செய்யப்பட்டவரை சோதனை பண்ணிவிட்டு, டாக்டர் ‘O’ அல்லது ‘Q’ என்று எழுதுவார். ‘O’ என்றால் பிணத்தின் வாய் O மாதிரி திறந்து இருக்கிறது என்று அர்த்தம். Q என்றால், நாக்கு வெளியே தொங்கியவாறு இருக்கிறது என்று அர்த்தம்!

Monday 26 August 2024

பழனம் என்றால் விளைச்சல் தரும் வயல் வெளி என்று பொருள்.அவ்வயல் வெளிகளுக்கு நடுவே இருந்த ஊர் என்பதால் பழனி என்று பெயர்.#அப்ப பழம் நீ- பழநி இல்லையா

Sympathy vs EmpathySympathy என்பது ஐயோ பாவம் என்று இரக்கப்படுவது.இது ஒரு போதும் ஒருவரின் துன்பத்தை மாற்றாது.அதை மாற்ற முயலுவதுதான் Empathy.கருணையை செயலாக மாற்றுவது.இந்த Empathy யை தான் அதிகம் வளர்த்துக் கொள்ள வேண்டும்

Peer reviewsநாம் ஒரு அறிவியல் இதழுக்கு ( Journal) ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பும் போது நம் பெயரை எடுத்துவிட்டு அதை ஓரிரு நிபுணர்களுக்கு அனுப்புவார்கள். யார் எழுதியது என்று தெரியாமலேயே அதை விமர்சிக்க வேண்டும். இவர்தான் எழுதியிருந்தார் எனத் தெரிந்தால் bias ஆகிவிடுவோம். விமர்சிப்பவர் யாரென்று author க்கும் தெரியாது.இதுதான் peer review.புகழ்பெற்ற எழுத்தாளர், உளவியல் பேராசிரியர் Adam Grant இப்படி ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்பிய போது அவருக்கு முகம் தெரியா விமர்சகர் அனுப்பிய பதில் " இக்கட்டுரை சாதாரணமாக இருக்கிறது. போய் Adam Grant எழுதிய கட்டுரைகளைப் படிக்கவும்"( Ref : Think again - book by Adam Grant )கண்ணதாசன் ஒரு முறை ஒரு கல்லூரியில் தான் எழுதிய கவிதையை அக்கல்லூரி மாணவன் ஒருவன் எழுதியதாகச் சொல்லி அம்மாணவனையே வாசிக்க வைத்தாராம் . பெரிய கைதட்டல்கள் இல்லை. பின் அம்மாணவன் எழுதிய கவிதையைக் கண்ணதாசன் வாசித்தாராம். கரகோஷம் விண்ணைப் பிளந்ததாம். பின்னர் கண்ணதாசன் உண்மையைச் சொன்னாராம்.இதுதான் Bias எனும் முன்சாய்வுஇதுபோல் peer review நம் ஊர் இலக்கியங்களிலும் கடைப்பிடித்தால் எப்படி இருக்கும்?- டாக்டர் ஜி ராமானுஜம்

Sunday 25 August 2024

ஆழமான அல்லது ஆழமற்ற சிந்தனைக்குப் பின் வெளிப்படும் எண்ணங்களே கருத்து.விளைவை நோக்காத, போகிறபோக்கில் சொல்லப்படும் கருத்துகள் பொறுப்பில்லாதவை ஆகின்றன.கருத்துக்களை அவசரமாக பொதுமைப்படுத்துதலில்(Hasty generalisation) இன்றைய தலைமுறையினர் அதிகம் ஈடுபடுகின்றனர்-சுஜாதா

வாழை review

வாழை விமர்சனம்
*மணி

ஒரு படம் வருவதற்கு முன் எதிர்பார்ப்பாகவும், வந்தபின் அதிக பேசு பொருளாகவும் இருக்கிறது வாழை.மக்கள் மறந்த அல்லது கடந்து சென்ற ஒரு விபத்தை துல்லியமாக, எளிமையாய், உணர்வுரீதியாய் மனதை கனப்படுத்தும் விதத்தில் சொல்லிய படம் வாழை

கதை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கணவனை இழந்த மனைவி மகள், மகன் சிவனைந்தனும் வாழ்ந்து வருகின்றது ஒரு குடும்பம்.கிராமமே வாழை தார் அறுத்து லோடு ஏற்றும் கூலிகளாய் வாழ்ந்து வருகின்றனர்.வாங்கிய கடனை அடைக்க விடுமுறை நாளில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களும் இந்த வேலை செய்ய வேண்டும்.
விடுமுறையில் வேலை செய்யாமல் இருக்க பல்வேறு திட்டமிடுகின்றனர் சிவனைந்தனும் அவன் கூட்டாளி சேகரும்.

   கூலி உயர்வு கேட்கும் கனி, முதலாளியின் சாதுர்யம் போன்றவை சினிமாத்தனம் இல்லாமல் படம் நகர்கிறது.ஒருகட்டத்தில் விடுமுறை நாளில் சிறுவன் பள்ளியிக்கு செல்லும் சூழல்?, வாழை எடுக்க வேலைக்கு போகனும்? என்ன செய்வது? என்ன ஆனது என்பது மீதிக்கதை

#ப்ளஸ்

*பள்ளியில் முதல் மதிப்பெண் மாணவன்,டீச்சர் விமலா சேகரிடம் ஈர்ப்பு,அக்காவின் காதலுக்கு தூதுவன், தாய்ப்பாசம் என அனைத்து இடங்களிலும் ரஜினி ரசிகரான சிறுவன் ஸ்கோர் அள்ளுகிறார்.

*கமல் ரசிகரான கூட்டாளி சேகரின் நடிப்பு.. நடிப்பென்று  சொல்ல இயலாது.நான் குணா கமல், டீச்சர் அடிச்சாலும் வலிக்காதுடானு சொல்வது ரசனை.கமல் டாலர், ரஜினி டாலர், என அந்நாளின் நினைவுகளை படரவிட்டிருப்பார் 

*நான் இல்லனாலும் வாழனும் அவனுக்கு உழைப்பை கத்துக் கொடுக்கிறேன்..உழைச்சு தான் வாழனும், கொடுப்பதற்கு உழைப்பைத்தவிர என்னிடம் என்ன இருக்குனு சொல்லும் வசனம் இதம் பதம்

*கிராமிய இளைஞனுக்கே உரிய தோற்றத்தில் கனி கலையரசன். தந்தையின் கம்யூனிஸ்ட் அட்டையை கனிக்கு கொடுக்கும் சிறுவன்.. தன் தந்தையின் வீரத்தை கனியிடம் காண்கிறான்

*நெல்லையின் இயற்கையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.இசையும் படத்தொகுப்பும் நன்று. பஞ்சுமுட்டாய் பாட்டு சிச்சுவேசன் சாங்

*90களில் இருந்த பாடபுத்தகம், நூறு ரூபாய் நோட்டை எண்ணிக் கொடுப்பது, ராமராஜன் போட்டியிட்டதை சொல்லும் சுவர் விளம்பரம்,பள்ளிச்சூழல் என கலை இயக்குநர் உழைப்பு பாராட்டுக்குரியது.

*எல்லாவற்றையும் சாமியிடம் வேண்டிக் கொள்ளும் சிறுவன்.. இறுதியாக துயரத்தை பார்த்து நிற்பது போலவும் காட்டியிருப்பார்.

முதல் பாதியில் இடைவேளைக்கு பதில் அம்மா இளைப்பாறுகிறாள் என்று இருப்பது பாராட்டு. இறுதியில் அத்தனை துயருக்கு நடுவில் வரும் பசி..ஜெயகாந்தனின் ஒரு பிடிச் சோறு படிக்கும் போது வரும் வலியை உண்டாக்கும். ஆனால் அதில் சாப்பிடுவார். இதில் சாப்பிடுவதில்லை.அந்தக் கதையின் தாய் உயிருடனிருந்தால் இந்த தாயை நினைவூட்டுவார்

வாழை சுகமான சுமை

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 24 August 2024

பூமி சுற்றுவதை நிறுத்திவிட்டால் என்ன ஆகும்? சூரியனில் விழ ஆரம்பிக்கும். அப்படி ஒரு நிலைமை வந்தால்... சூரியனில் போய் ‘தொப்’பென்று விழுந்து, பூமி சாம்பலாவதற்கு 91 நாள், 7 மணி, 26 நிமிடங்கள், 24 விநாடிகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணக்குப் போட்டிருக்கிறார்கள்!-மதன்

உங்கள் தவறுகளை மட்டும்எதிர்பார்த்துக் காத்திருக்கிறதுஓர் உலகம்.ஒரு வேட்டை நாய் இரைக்குக் காத்திருப்பதைப் போல..உங்கள் வெற்றியின் போதே அந்த நாயை காண முடிவதே இல்லை அருகில்-சேரவஞ்சி

எண்ணிப் பார்த்து மகிழ்வதற்கும்,எண்ண விரும்பாமல் கலங்கிக் கரைவதற்கும் எல்லோருக்கும் ஏதோ சில காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன-பா.ரா

எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் ஒருவர் படுத்துக் கிடந்தார். என்னாயிற்று அவருக்கு?'என்னை எவரும் அசைக்க முடியாது' என்று சொல்லிக் கொண்டிருந்த அவரை, தரையில் கிடந்த வாழைப் பழத் தோல் ஒன்று அசைத்து விட்டதாம். இனி, அவர் அசைவதற்கு எவ்வளவு நாள் ஆகுமோ, யாருக்குத் தெரியும்?-தென்கச்சியார்

Friday 23 August 2024

நாய் குணம், பூனை குணம்


பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம்.

நாய் இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், கொஞ்சுகிறார், என்னை கவனிப்பவர் ராஜா போன்றவர், இவரை நான் மகிழ்விக்க வாலாட்டுவேன், இவருக்காக காத்திருப்பேன், இவரோடு விளையாடுவேன்.

நாய்க்கு அன்பு கொடுக்க கொடுக்க, அது உயிரையே கொடுக்கும் தன் எஜமானருக்கு, சோர்ந்து போகும் அன்பில்லாவிடில். நாய் ஒரு Team player

பூனை இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், தூக்கி வைத்து கொஞ்சுகிறார், உணவளிக்கிறார், இவ்வளவு கவனம் கிடைக்கிறது என்றால் நான் ராஜா போன்றவன்.

பூனைக்கு அன்பு கிடைக்க கிடைக்க, அது தன்னைப்பற்றி மிகையான பிம்பம் வளர்த்துக்கொள்ளும். நீங்கள் சேவை செய்ய கடமைப்பட்டவர் என நினைக்கும். பூனை ஒரு Solitary Hunter.

மனிதர்களுள் நாய்குணம் உடையவரும் உண்டு, பூனை குணம் உடையவரும் உண்டு.

நாம் என்ன குணம் என்பதை நம்மை சார்ந்தோரை கேட்டு அறியலாம்

அமெரிக்கர்கள்தான் ‘சுருக்கங்களை’ அதாவது குறியீடுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். கொலை செய்யப்பட்டவரை சோதனை பண்ணிவிட்டு, டாக்டர் ‘O’ அல்லது ‘Q’ என்று எழுதுவார். ‘O’ என்றால் பிணத்தின் வாய் O மாதிரி திறந்து இருக்கிறது என்று அர்த்தம். Q என்றால், நாக்கு வெளியே தொங்கியவாறு இருக்கிறது என்று அர்த்தம்!

ஒரு கழுகு பெரும் வேகத்துடன் எளிதாகப் பறப்பதற்கு, அது தகர்த்தெறிய வேண்டிய ஒரே முட்டுக்கட்டை காற்று மட்டும்தான். ஆனால், அந்தக் காற்று முழுவதும் உறிஞ்சப்பட்டிருக்கும் வெற்றிடத்தில் அந்தப் பெருமைமிகு பறவை பறக்க நேருமானால், அது அக்கணமே கீழே விழுந்துவிடும். எந்தப் பொருள் பறப்பதற்குத் தடையாக உள்ளதோ, அதே பொருள்தான் பறப்பதற்கேற்ற சூழலாகவும் அமைகிறது.-இனிய காலை

Thursday 22 August 2024

'வாய்த்தது நம் தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்'நம்முடைய நல்வினைப்பயனாக இந்த உயர்ந்த மனிதப் பிறவியாகி இப்பிறப்பு கிடைத்துள்ளது. இதனை மதித்துச் செயல் பட வேண்டும் நாம். இப்பிறப்பின் நோக்கமே அதுதான்.-அப்பர்

20 நபர்களிடையே ஒரு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.ஒரு கோப்பையில் விலையுயர்ந்த ஒயினும் இன்னொரு கோப்பையில் விலை மலிவான ஒயினும் அதன் price tag உடன் அருந்துவதற்காக வழங்கப்படுகிறது. அவர்கள் அனைவருமே விலையுயர்ந்த ஒயினை மிகுந்த சுவையானதாக உணர்கின்றனர். அவர்களுடைய மூளையை ஸ்கேன் செய்யும் (fMRI) கருவிகளும் விலையுயர்ந்த ஒயினைப் பருகும்போது அவர்களின் மகிழ்ச்சியை உணரும் மூளையின் பகுதிகள் அதிகம் தூண்டப்படுவதைப் பதிவு செய்கின்றன.உண்மையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டு கோப்பைகளில் இருந்த ஒயினும் ஒன்றுதான்.இப்படித்தான் நமக்கு விலையுயர்ந்த ஐபோன்களும் ஆடிக் கார்களும் அதிக மகிழ்ச்சியைத் தருகின்றன.மேலே இருக்கும் ஆய்வு Buy – Ology (Truth and Lies about why we buy) புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Wednesday 21 August 2024

நியாண்டர்


அலெக்சாந்தரின் இளவயது நண்பர்கள் இருவர் டாலமி மற்றும் செலூக்கஸ். அவர்களின் நட்பு இளமை பருவத்திலேயே தொடங்கியது. இருவரும் அலெக்சாண்டரின் தந்தையான பிலிப்பின் அரண்மனையில் வளர்ந்தனர். அங்கு அவர்கள் ஒன்றாக விளையாடியதோடு, இராணுவ பயிற்சியையும் பெற்றனர்.

அலெக்சாந்தர் படையுடன் கிளம்பியபோது, இருவரும் உடன்சென்று பல வெற்றிகளை ஈட்டினார்கள். பஞ்சாபில் மன்னர் புருஷோத்தமன் எனும் போரஸுடன் நடந்த போரில், கிட்டத்தட்ட அலெக்சாந்தரின் குதிரை கொல்லபட்டு, அலெக்சாந்தர் பிடிபடும் அல்லது கொல்லபடும் தருணம். புயலென அங்கே குதிரைப்படையுடன் பாய்ந்து அலெக்சாந்தரை அள்ளி எடுத்துக்கொன்டு போனார் செலூக்கஸ். அதன்பின்னும் போர் நிற்காமல் செலுக்கஸ் தலைமையில் நடந்தது. அங்கே கிடைத்த மாபெரும் வெற்றியால் நிகேடார் (வெற்றியாளர்) எனும் பட்டம் அவருக்கு வழங்கபட்டது

அதன்பின் பாபிலோனில் அலெக்சாந்தர் மரணமடைய, கிரெக்கம் முதல் பஞ்சாப் வரை பரந்து விரிந்திருந்த பேரரசை என்ன செய்வது என குழப்பம் ஏற்பட்டது. 

டாலமி  எகிப்து சென்று எகிப்தின் மன்னராக தன்னை அறிவித்துக்கொன்டார். கிரேக்கம் பெர்காமன் எனும் தளபதியின் வசம். துருக்கி முதல் பஞ்சாப் வரை இருந்த மிகப்பெரும் பகுதி செலுக்கஸ் நிகேடர் வசம் வந்தது

ஆனால் அப்போது இந்தியாவில் மவுரியர்கள் ஆட்சி மலர்ந்தது. சந்திரகுப்த மவுரியர் பஞ்சாப் மேல் படை எடுத்தார். செலுக்கஸ் உடனே படைகளை திரட்டிக்கொண்டு பஞ்சாப் செல்லும் நிலை. இரு படைகளும் அணிவகுத்து எதிரெதிர் நின்றன

அதுநாள் வரை அப்படி ஒரு போரை இந்திய துணைக்கண்டம் பார்த்தது இல்லை என்பது மாதிரியான போர் நடந்ததது. பல லட்சம் பேர் கலந்துகொன்ட, அன்றைய உலகின் மிகப்பெரும் வல்லரசுகள் இரண்டு நடத்திய போர். சந்திரகுப்தருக்கு மாபெரும் வெற்றி

ஆனால் இருவரும் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் ஆகியவை சந்திரகுப்தருக்கு வழங்கப்ட்டன. இன்றைய இரானின் எல்லையில் இருந்து துருக்கி வரை இருந்த பகுதிக்கு செலுகஸ் ஆட்சியாளர். தன் மகளை சந்திரகுப்தருக்கு திருமணம் செய்து கொடுத்து, மெகஸ்தனிஸ் எனும் தூதரை அரசவைக்கு அனுப்பினார். பதிலுக்கு 500 யானைகளை பரிசாக பெற்றார்

பண்டைய இந்தியாவின் மேற்கெல்லைகள் தீர்மானமாக காரணம் இந்த போர் என சொல்லலாம். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும், பலூசிஸிதானும் பாரசிக பேரரசிடம் இருந்து பிரிந்து இந்தியாவில் சேர்ந்தன. இன்றும் இந்த பகுதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் இரு துணைக்கண்ட நாடுகளாக உள்ளன. மெகஸ்தனிஸ் தான் இந்திய வரலாற்றை மேற்கே எடுத்து சொன்னவர்

அடுத்த 200 ஆண்டுகள் செலுக்கஸின் வாரிசுகள் இரான், இராக், துருக்கியை ஆண்டார்கள். 

#History_is_his_story

~ நியாண்டர் செல்வன்

Tuesday 20 August 2024

book-20


Reading_Marathon2024
#24RM050

Book No:20/100+
Pages:132

திரைப்பாடம்
-ஆர்.கார்த்திகேயன்

உலக சினிமாவை பார்த்ததைவிட படித்ததே அதிகம். முதன்முறையாக திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தான் உலக திரைப்பட விழாவினை எனக்கு அறிமுகம் செய்தது. அந்த படங்களை பார்த்து வியந்து உலக திரைப்படம் குறித்து படிக்க ஆரம்பித்தேன். அதற்கு அச்சாணியாக விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா புத்தகம் சிவப்பு கம்பளம் இட்டு உலக சினிமாவின் பால் ஈர்த்தது.
 அந்த வகையில் இந்த புத்தகத்தில் 31 திரைப்படங்களுக்கான கதையும் விமர்சனமும் மிகவும் நேர்த்தியாக உள்ளது.தி இந்து நாளிதழில் தொடராக வந்த தொகுப்பு தான் இந்த புத்தகம்.

18 வயது பையன் அவன் தந்தை கொன்றதாக முடிவு பெறாத வழக்கு. 12 பேர் கொண்ட ஜூரியின் முன் விடப்படுகிறது.
ஒரே அறையில் 12 பேர் கூடி ஒரு வழக்கை விசாரிக்கிறார்கள். அதில் 11 பேர் அவனுக்கு எதிராக வாக்களித்து மரண தண்டனை கிடைக்கும் தருவாயில் கதாநாயகன் மட்டும் ஆதரவாக வாக்களிக்கிறான். நாயகன் அவர்களிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் மெல்ல மெல்ல அவர்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதாக இத்திரைப்படம் இருந்தது. ஒரு பிரச்சனையை திறந்த மனதுடனும் எவ்வித சார்புமின்றியும் பார்க்கும் நாயகன் இதில் பிரம்மிப்பாய் தெரிகிறான்.(12, ஆங்ரி மென்)

The song of sparrows ஈரானிய இயக்குனர் மஜீத் மஜ்தியின் இப்படம் நடுத்தரம் குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வு. கதையின் நாயகன் கரீம் கிராமத்தில் நெருப்புக்கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்க்கிறார் .மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் அவரின் ஒரு மகனின் காது கேட்கும் கருவி தொலைந்து விடுகிறது. குடும்பமே தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் கரீம் பராமரிப்பிலிருந்து நெருப்புக்கோழி காணாமல் போய்விடுகிறது. இதனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக நகரத்துக்கு வேலை தேடிச் செல்கிறார். அங்கு எதிர்பாராத விபத்தில் அவரின் கால் உடைந்து விட நொறுங்கிப் போகிறான். பிறகு நெருப்புக்கோழி கிடைத்துவிட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது குடும்பம். எத்தனை கஷ்டம் வந்தாலும் அன்பின் மீதான பிடிப்பினை இந்த திரைப்படம் எளிமையான கருத்துக்களால் கவரப்பட்டுள்ளது.

முதலாளி பணித்ததால் பெட்டியை தேடும் இரு கூலிப்படையினர், விடுதியை கொள்ளையிட வரும் இரு காதலர்கள், குத்துச்சண்டைகள் தோற்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு எதிரியை கொன்று பணத்துடன் உயிருக்கு பயந்து காதலியுடன் ஓடும் ஒருவன்.. இப்படி நான்கு கதைகள் உள்ள படம்தான் பல் ஃபிஷன்.

To sir with love இரண்டாம் உலகப்போர் முடிந்து வேலையில்லாத திண்டாட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொறியாளராக ஆசைப்படும் நாயகன் வேறு வழி இன்றி ஆசிரியர் பணிக்கு வருகிறான். அங்கு ஏற்படும் இன்னல்களும் அதனை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதும், மாணவர் இடத்தில் புதுமையை புகுத்திய அந்த ஆசிரியரின் கதை இறுதியில் மீண்டும் பொறியாளர் வேலை கிடைக்கும் போது போகக்கூடாது என்று மாணவர்கள் தடுக்கின்றனர்.. படம் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது .தமிழில் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பிரச்சனையை மையப்படுத்திய திரைப்படத்துக்கு முன்னுதாரணமாக இருப்பது இந்த படம் தான். 1967-ம் ஆண்டு வந்தது.

Bicycle thieves  திரைப்படத்தை பலரும் பார்த்திருக்கக்கூடும் இருப்பினும் இது எனக்கு மிகவும் பிடித்ததால் பகிர்கிறேன் இத்தாலியில் கடும் வேலையில்லாத திண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, போஸ்டர் ஒட்டும் வேலைக்கு சைக்கிள் வைத்திருந்தால் தான் வேலை என்ற நிபந்தனையுடன் படம் துவங்குகிறது. மனைவியின் நகைகளை பொருட்களை அடகு வைத்து பணம் வாங்கி சைக்கிள் ஒன்றை வாங்கி வேலைக்கு கிளம்புகிறான். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் போது மிதிவண்டி காணாமல் போகிறது அதன் பின் என்ன ஆனது என்பதே கதை. இறுதியில் மகனும் தந்தையும் இருக்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானது.

மும்பை டப்பாவாலாக்கள் அந்நாளில் மிகவும் பிரபலம் .விருப்பமில்லாத கணவனுக்காக மனைவி சமைத்து தரும் உணவு ஒரு நாள் மாறிப் போகிறது. மாறிப்போன உணவை சாப்பிடும் ஓய்வு பெறும் வயதில் உள்ள சாஜன் பெர்னாண்டஸ் அந்த உணவினை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கி சமைத்த இலாவுக்கு கடிதம் எழுதுகிறார். அதற்குப்பின் என்ன ஆனது தி லஞ்ச் பாக்ஸ் கதை.

குடும்பப் பிரச்சினைகளால் தனிமையில் வாழும் காரல். நண்பனின் வற்புறுத்தலால் எஸ் பட்டறைக்கு செல்கிறான். அங்கு பேசும் தலைவரின் பேச்சில் மயங்கி வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் எஸ் சொல்ல வேண்டும் நோ சொல்லக்கூடாது என சபதம் ஏற்கிறார். அன்று முதல் ஒவ்வொரு விஷயங்களுக்கும் எஸ் சொல்ல வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் காவலரிடம் ஒரு பிரச்சனையில் மாட்ட இந்த பயிற்சியை பற்றி கூறுகிறான். கல்யாணத்துக்கு விருப்பமில்லாமல் ஒரு பெண் இவரை மனம் புரிய வேண்ட இவரும் எஸ் சொல்லி சம்மதிப்பதை நினைத்து காதலி மனமடைந்து போகிறாள். இறுதியில் கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் எஸ் சொல்ல வேண்டியதில்லை. மனமுவந்து புது அனுபவங்களை ஏற்க தயாராக வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் சாரமாக இருக்கிறது எஸ் மேன் கதை.

பீஸ்ஃபுல் வாரியர்- பிடிவாதமும் அவசரகமும் நிறைந்த அமெரிக்க இளைஞனின் கனவு  ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது. தினசரி காலை ஓட்ட பயிற்சியின்போது வயதான முதியோர் ஒருவரை காண்கிறான். துறவி போல் இருப்பதால் அவரைச் சாக்ரடீஸ் என அழைக்கிறான். அவரிடம் உள்ள விசேஷத் திறமை இவனை கவருகிறது. அவருடைய பேச்சு மன அமைதியை ஏற்படுத்துகிறது .தொடர்ந்து அவரிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் போது தன்னுடைய முன்கோபத்தால் அவரிடமிருந்து விலகுகிறான் .அதன் பின் நடக்கும் விபத்தில் அவனுக்கு கால் முறிவு ஏற்பட்டு போட்டியில் கலந்து கொள்ளவே முடியாத நிலை. இருப்பினும் சாக்ரடீசின் உதவியால் மீண்டும் போட்டியில் பங்கேற்கிறான். இறுதிப் போட்டிக்கு செல்கிறான். வெற்றியும் பெறுகிறான். அப்போது அந்த நிகழ்வுக்கு முன்னர் வயதான முதியவரான சாக்ரடீஸ் மறைந்து போகிறார். அவர் பேசுவது போல் இவனுக்கு கேட்கிறது. எங்கு இருக்கிறாய்? இங்கு!" என்ன நேரம் இப்போது? இப்பொழுது!" நீ யார்? இந்த கணம்! இந்த கணத்தில் வாழ் எனும் ஜென் தத்துவத்தின் அடிப்படையில் இந்த கதை முடிகிறது.

இது போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் சுவாரசியமாய் சொல்லப்பட்டு அதில் தான் ரசித்த வசனங்களையும் ஆசிரியர் இதில் சொல்லி இருப்பார். ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் ஒன்றரை பக்கங்களே சொல்லி இருப்பதால் நாம் அந்த 31 திரைவிமர்சனங்களையும் ஒரே மூச்சில் படித்து விட இயலும். இதில் ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே நான் பார்த்ததால் அதனை பகிரவில்லை. இன்னும் பகிராத படங்களும் இதில் உள்ளன‌. இந்த படங்களை பார்க்கும் ஆர்வமும் இந்த புத்தகத்தின் மூலம் ஏற்பட்டது எனில் அது மிகையில்லை 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday 19 August 2024

Into the wild - உலகில் அதிகம் பேசப்பட்டு அதிகளவில் பகிரப்பட்ட புகைப்படம் !ஒரு திரைப்படமாகத்தான் இதை பார்த்தேன். ஆனால், உண்மைக்கதை என்று தெரிந்ததும் கலங்கிவிட்டேன். தான் செல்லும் ஒவ்வோர் இடத்திலும் தன் சுவட்டை பதிக்கிறான். அவனது 2 வருட பயணத்தில் தான் எதிர்கொள்ளும் அத்தனையையும் தன் டயரியில் பதிகிறான். அவனது இறுதிமூச்சிலும் தனது டயரியை எடுத்து " மகிழ்ச்சி என்பது பிறருடன் பகிர்ந்துகொள்ளும்போதே நிறைவடைகிறது " என்று தான் கண்டறிந்த உண்மையை எழுதிவைத்துவிட்டு சிரித்துக்கொண்டே மரணத்தை எதிர்கொள்ள தயாராகும் நொடிகள் அற்புதமானவை !

ஒரு பொருள் உங்களை முதலில் மகிழ்வித்தது போன்று மீண்டும் மகிழ்விக்க முடியாது. காரணம் மனது சலித்து விடுகின்றது.முதன் முறை பூஜ்யத்தில் துவங்கும் திருப்தி..இரண்டாம் முறை பூஜ்யத்தில் துவங்காமல் ஏற்கனவே வளர்ந்த நிலையில் துவங்குவதால் அதிருப்தி தருகிறது.Law of diminishing marginal utility

நேற்று இன்று நாளைஇ-அண்மையைச் சுட்டுவது. அன்று என்பது அற்றை, இன்று என்பது இற்றை.நாள் என்பதிலிருந்து நாளை. நாளாக இனிமேல் வரப்போவது.நெருநல் என்பதிலிருந்து நேற்று. நெருநற்று என்பது பின்னர் நேற்று என வழங்கப்பட்டது-மகுடேசுவரன்

நியாண்டர்


மனிதனுக்கு செவ்வாய் கிரகத்தை பற்றி தெரிந்ததை விட அண்டார்டிகா கண்டம் பற்றி தெரிந்தது குறைவு என்றால் வியப்பாக இருக்கும்

அண்டார்டிகா என நீங்கள் மேப்பில் பார்ப்பது அண்டார்டிக் பனிப்பாறையைத்தான். இது சுமார் ஐந்து கிமி கிலோமீட்டர் தடிமன் கொண்டதாக இருக்கும். பனிப்பாறையை ஐந்து கிமி கீழே துளைத்து சென்று ஆராய்ந்தால் தான் அண்டர்டிகாவின் நிலப்பரப்பே கண்ணில் தென்படும். எந்த மனிதனும் அதை பார்த்தது கூட கிடையாது என்பது மட்டுமல்ல, அதன் நிலபரப்பில் 90% இன்னும் ஆராய்ச்சி செய்யபடவே இல்லை

காரணம் அண்டார்டிகா என்பது பரப்பளவில் ஒட்டுமொத்த ஐரோப்பாவை விட சற்று பெரிய கண்டம். அதன் மேலே பறந்தபடி விமானங்கள் ரேடாரை கீழே அனுப்பும்.  ரேடார் அலைகள் பனிக்கட்டியைத் துளைத்து, நிலத்தை அடைந்து எதிரொலிப்பதன் மூலம், அந்த பகுதியின் நில அமைப்பு பற்றிய தகவல்களைப் பெற முடியும். இப்படி 10% நிலபரப்பு மட்டுமே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இன்னும் 90% நிலபரப்பு ஆராயபடவே இல்லை

அண்டார்டிகாவின் பனிக்கட்டியை முழுவதும் அகற்றினால்,  கீழே ஏராளமான எரிமலைகள், ஆறுகள், ஏரிகள் காணப்படும். அண்டார்டிகாவின் பனிக்கட்டியின் கீழே உலகின் மிகப்பெரிய மலைத்தொடர்களில் ஒன்றான டிரான்ஸ்டென்டிக் மலைகள் அமைந்துள்ளன. இவை ஹிமாலய மலைகளை விட உயரமானவை. அண்டார்டிகாவின் ஒரு பகுதியான மேற்கு அண்டார்டிக் எரிமலை மற்றும் பிளவு மண்டலம்  என்பது பசிபிக் தீவளையத்தின் ஒரு பகுதியாகும். அதனால் அன்டார்டிகாவின் பனிக்கு கீழே எரிமலைகளின் சூட்டால், பனிக்கட்டி உருகி, ஆறுகள் உருவாகி, பனிப்பாறைக்கு கீழே ஆறுகள் ஓடி, கடலில் நீரை சேர்க்கின்றன என்பது வியப்பான தகவலாகும். இதேபோல அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியே திரவடிவில் நீர் இருக்கும் மிகப்பெரும் ஏரிகளும் உள்ளன.

அண்டார்டிகாவின் பனிப்பாறைக்கு அடியில் திரவ நிலையில் நீர் நிரம்பிய மிகப்பெரிய ஏரிகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமானது லேக் வோஸ்டாக் (Lake Vostak). மதிப்பீடுகளின்படி, இது சுமார் 15,690 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருக்கும். இது ஒரு சிறிய நாட்டின் அளவுக்கு சமம். இது பல லட்சம் ஆண்டுகளாக பனிக்கட்டியின் கீழ் உள்ளது.

ஐந்து கிமி பனிப்பாறைக்கு கீழே பல லட்சம் ஆண்டுகளாக இருப்பதால், இங்கே உயிர்கள் ஏதேனும் இருக்குமா என்பதே சந்தேகமாக இருந்தது. அத்தனை கிமி ஆழத்துக்கு சூரிய வெளிச்சம் போகாது. சூரிய ஒளிச்செர்க்கை நடைபெறாது. ஆனால் ரஷ்ய நாட்டு விஞ்ஞானிகள் அங்கே சில நுண்ணுயிரிகள் வசிப்பதை உறுதி செய்தனர்.

அதன்பின் பனியால் மூடப்பட்ட அண்டர்டிகாவின் எராபஸ் மலையில், குகைகள் இருப்பதும், அது எரிமலை என்பதால், குகைக்குள் நல்ல வெப்பம் இருப்பதும், 25 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில், குகை ஜம் என உயிர்கள் வாழ தகுதியாக இருப்பதும், அங்கே திரவ வடிவில் நீர் இருப்பதும் தெரிய வந்தது. ஒளிசேர்க்கை தேவைபப்டாத கெமோசிந்தசிஸ் மூலம் உயிர்கள் உருவாகலாம்

ஆக, நாம் வாழும் பூமிக்கு அடியிலேயே முற்றிலும் புதிய வகையிலான உயிர்கள் வாழகூடும் என்பதே வியப்பளிக்கிறது. அண்டார்டிகா போல பல கிரகங்கள், நிலவுகளில் பனியால் மூடப்ட்ட திரவநிலை சமுத்திரங்கள், ஏரிகள் உள்ளன. அங்கேயும் இதுபோல மிக புதிய வகை உயிர்கள் வாழலாம். #பூமியும்_வானமும் இடையே எத்தனை அதிசயங்கள், விந்தைகள்

~ நியாண்டர் செல்வன்

Sunday 18 August 2024

எட்டையபுரம் மன்னரின் சபையில் பாரதி அரசவைக் கவிஞராக இருந்தார். மீசை வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட பாரதி, மீசை வளர்த்தார். ஒருநாள் முறுக்கு மீசையுடன் அரண்மனையில் நுழைந்த பாரதியைப் பார்த்த மன்னர் முகம் சுளித்தார். பாரதியின் சித்தப்பாவிடம், பாரதி மீசையை எடுக்காவிட்டால் அவருக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும்' என்றார் மன்னர். சித்தப்பா மூலம் இதைக்கேள்விப்பட்ட பாரதி மன்னரிடம் சென்று, 'ஐயா, இத்தனை நாள் என் கவித்திறமைக்காக மானியம் வழங்கப்பட்டு வந்தது என்று நினைத்தேன். இப்போதுதான் என் மீசைக்காக மானியம் வழங்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன் மீசைக்கான காசு எனக்கு வேண்டாம்' என்று அந்தப் பணியை உதறிவிட்டார்.#manipmp

Saturday 17 August 2024

“நீங்கள் ஒரு நல்ல மனிதர் என்பதால் உலகம் உங்களை நியாயமாக நடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது நீங்கள் சைவ உணவு உட்கொள்பவர் என்பதால் எருது உங்களைத் தாக்கக்கூடாது என்று எதிர்பார்ப்பதைப் போன்றது.” -டெனிஸ் ஹோலி

books+-19


Reading_Marathon2024
#24RM050

Book No:19/100+
Pages:144

காரான்
-மு.காமுத்துரை

எழுத்து என்பது வித்தை எல்லாம் இல்லை நிகழ்வுகளை தொகுத்துப் பார்த்துச் சொல்லத் தெரிந்தாலே போதும் என காமுத்துரை சொன்னதாக கல்யாண்ஜி சொல்லியிருப்பார். ஒரு சிறுகதை ஆசிரியருக்கு தேர்ந்த கதை சொல்லல், உக்தி இருப்பவர்கள் தான் நல்ல கலை படைப்புகளையும் படைக்க முடியும். எளிதான மொழிகள் எந்த பகட்டும் இல்லாமல் இருப்பதை உள்ளவாறு.. மேலும் அழகுற இருப்பதை சீர்கெடுக்காமல் சொன்னாலே அது ஒரு நல்ல சிறுகதையாக வருவதற்கான முழு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் இந்த தொகுப்பில் உள்ள பல கதைகள் மனதிற்கு நெருக்கமாக உள்ளன. சில கதைகளை வார இதழ்களில் படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும்போது என்ன மனதுக்கு நெருக்கமாய் இருக்கிறது. 

மாடு கன்று வைத்திருப்பவர்கள் தான் பெரிய ஆட்கள் என்று நம்பிக்கொண்டிருந்த போது என் அம்மா ஊரில் எருமை வளர்த்த கதையைச் சொல்லி இருப்பார். அந்த கதையோடு தொடர்பு படுத்தி தான் காரான் கதையை படிக்க முடிந்தது. அதில் உள்ள சிறுவனுக்கும் அவன் வளர்க்கும் எருமைக்கும் இடையிலான பந்தம் தான் அக்கதை."குருவம்மாவின் நோவால் வீடே மந்தித்து கிடந்தது" என்ற வரிகளே நம்மை அந்த கிராமத்து வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறது.

"எருமைதான் நம்மள மாதிரி சம்சாரி போங்குக்கு ஏத்தது. எதை போட்டாலும் கழிக்காமல் தின்னுட்டு சிவனேன்னு படுத்து எந்திரிக்கும் ஆடைக்கும் கோடைக்கும் அதுபாட்டுக்கு திரியும் .பெருசா பண்டிதம் பார்க்க வேண்டியதில்லை என எருமை வளர்ப்பின் முக்கியத்துவத்தை ஏழைகளுக்கு புரியும்படி சொல்லி இருப்பார்.

ஊனு கம்பு கதையில் தலைமுறை தலைமுறையாக பணியில் இருக்கும் ஒரு தொழிலாளி தன்னுடைய முதலாளிக்கு காட்டும் விசுவாசத்தினை அவரின் பிள்ளையிடமும் எப்படி காட்டுகிறார் என்பதை இயலாமையின் வெளிப்பாடாக கதையில் கொண்டு வந்திருப்பார்

40 ரூபாய்க்கு சர்ட்டுகள் 150 ரூபாய்க்கு ஜீன்ஸ் பேண்டுகள். டெய்லர்கள் தூக்கிய தொங்கிய தீபாவளி அந்த வருஷம் தான் அரங்கேறியது என்பதனை டைலர் கடை வைத்திருக்கும் கமலக்கண்ணனின் கதையின் வாயிலாக நம் கண் முன்னே நிறுத்தி விடுகிறார். ஒரு பால்பாயிண்ட் பேனா தான் இங்க் பேனாவின் இறுதி வரலாற்றை எழுதியது என்பது போல ரெடிமேடு ஆடைகள் பல டெய்லர்களின் வாழ்க்கையினை சூறையாடிவிட்டது என்பதையும் நாம் கண்கூடாக உணர வைக்கும் காலத்தை நம் கண் முன்னே காட்டுகிறார். புதுத்துணியே தைத்துக் கொண்டிருந்தவருக்கு பழைய துணியை தைக்கும் வலி எவ்வளவு பாரமானது என்பதனை இக்கதை நமக்கு படித்தவுடன் கணக்க வைக்கிறது.

சகோதரியை பெண் பார்க்க வரும்போது சகோதரனும் மாப்பிள்ளை தோரணைக்கு மாறுகிறான் என்ற கருவை வைத்துக் கண்டு தன்னுடைய சகோதரியை பெண் பார்க்க வரும்போது தன்னை எவ்வாறெல்லாம் ஒரு சகோதரன் வெளி உலகினருக்கு வெளிக்காட்டிக்கொள்கிறான் ,எவ்வாறெல்லாம் தன்னை பொய்களை கட்டமைத்து தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறான் என்பதனை பெண்பார்க்கும் படலம் கதை சொல்கிறது

ஒரு பொன்வண்டினை பிடித்து வைத்துக்கொண்டு ராசு வாத்தியாரின் வகுப்பறையில் அல்லாடும் மாணவர்களின் மனநிலையும், ஆசிரியரின் கண்டிப்புள்ள அந்த ஒரு காலகட்டத்தையும், ஒரு வகுப்பறை சூழலில் நிலவும் அமைதியையும் ஏக்கத்தையும் பொன்வண்டு காலம் கதை நமக்குச் சொல்கிறது.

வெள்ளை வெயில் கதை படிக்கும் போது மு.வவின் குறட்டை ஒலி கதை தான் நினைவுக்கு வருகிறது. ஒரு நாய்க்குட்டியிடம் ஒரு தாய் காட்டும் வாஞ்சையை கதை சொல்லி இருப்பது போல இதில் பூனை குட்டிகள் பசியால் வாடும் போது எவ்வாறு நம் இளகிய மனம் நம்முடைய வளர்ப்பு உயிரினங்களுக்கு உதவுகிறது என்பதனை இக்கதை படிக்கும் போது அறிய முடிகிறது. தான் கடன் வாங்கி வைத்திருந்த காப்பியை பூனைக்கு கொஞ்சம் ஊற்றும் போது "வெள்ளை வெயில் நிறம் மாறி பூத்தது "என்ற இறுதி வாக்கியத்துடன் கதை கவித்துவத்தோடு நிறைவு பெறுகிறது.

அறியாமையில் உண்டான அன்றைய பயத்துக்கும் இன்றைக்கு எட்டியுள்ள பட்டறிவு மற்றும் ஏட்டறிவால் கிட்டியுள்ள பார்வைக்கும் எத்தனை வேறுபாடு உண்டு. என்ற அழகிய வார்த்தைகள் தோய்ந்த கதை தான் காட்டில் பெய்யும் நிலாக்கள். ஊரடங்குக்கு பின்னான பேருந்து பயணத்தில் ஒரு குடிகாரருக்கும் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் கலகத்தை ஒரு திருநம்பி தீர்த்து வைக்கிறார் .இறுதியில் அந்த குடிகாரரை பேருந்தை விட்டு இறக்கிச் சென்று விட இருக்கும் போது என்ன நடந்தது என்பது தான் இக்கதை. பேருந்துகளைப் பற்றிய வர்ணனைகளை ரசித்து படித்தேன். 'குழந்தைகள் ஜன புழுக்கத்தில் நெளிந்து சிணுங்களானார்கள் '.ஆனாலும் சிலர் எந்த பிரக்னஞயும் இன்றி வாய்ப்பிழந்த உறக்கத்தில் கிடந்தனர். கண்ணெட்டும் தூரம் வரை படுதா போட்டு மூடியது போல ஒரே இருட்டு என்பன போன்ற ரசனை மிக்க வார்த்தைகளால் கதை பயணப்பட்டது.

ஊரில் இருக்கும் பெரியவர்களிடம் போனில் பேசும்போது நமக்கு ஒரு நிமிடம் ஆகும் ஆனால் அந்த ஒரு நிமிடத்தையும் ஒவ்வொரு நிமிடங்களும் நினைத்துக் கொள்வார்கள் பெரியவர்கள் அப்படித்தான். ஊருக்கு வரும்போது சொல்லிவிட்டு வாருங்கள் என்று சொன்னதை கேட்டு கலவரம் அடைந்த மகாலிங்கம் இனி பேசவே கூடாது எனும் முடிவுக்கு வருகிறார் .வீண் கோபங்கள் எப்போதும் குழந்தைத்தனமானது என்பதனை உணர வைக்கும் இறுதிக்காட்சியில் எதிர் வீட்டுக்காரரின் வீடியோ காலில் வரும் பேரனை பார்க்க மனைவிகிளம்பும்போது, சாய்வு நாற்காலி நிமிரும் ஓசை கேட்டது என்ற வரியோடு அந்த கதை நம்மையும் அந்த பெரியவரை மனநிலையை நினைக்க வைப்பதாக கதை முடிகிறது.

எம்பிஏ முடித்துவிட்டு சேல்ஸ்மேன் ஆக வேலை பார்க்கும் மாறனுக்கு ஏற்படும் சங்கடங்களும் தொல்லைகளும் குடும்ப உறவுகள் எவ்வாறு அதனை பார்க்கிறார்கள் அவனுக்கு நம்பிக்கை தருகிறார்கள் என்னும் கதை தான் "நாளைக்கு அம்மா சில டப்பாக்களை வாங்குவார்கள்" எனும் கதை. அம்மா பெண் ஜாதகம் கொண்டு வரும் தரகரிடம் அவனது வயசை ஒவ்வொரு வருஷம் குறைத்துச் சொல்லிக் கொண்டிருந்தார் எனும் வரியை படிக்கும் போது வேலையில்லாத அல்லது வயது முதிர்ந்த வாரிசுகளின் தாயின் மனநிலை உணர முடிகிறது. எந்த நேரத்திலயும் நம்மை தாழ்த்திக்கிறதோ நம்முடைய இயலாமையை பிறர்கிட்ட ஒப்பிக்கிறதோ பிரச்சினையை தீர்க்காது. வீக்கான பக்கம் இருக்கிறாப்ல ஸ்ட்ராங்கான இன்னொரு பக்கமும் இருக்கும் அதை கண்டுபிடி எல்லா வேலையும் சுலபமாகும் என அண்ணனுக்கு அட்வைஸ் செய்யும் ரமேஷ் என ஒவ்வொரு கதாபாத்திரமும் நேர்நிலை மனப்பான்மையுடன் இருக்கிறார்கள்.

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Thursday 15 August 2024

ஆங்கிலத்தில் Games, Sports என்ற இரண்டையும் தமிழில் விளையாட்டு என்கிறோம். ஆனால் இதன் அர்த்தம் விளையாட்டு, திறனறி போட்டி எனலாம். விளையாட்டில் யார் வேண்டுமானாலும் பங்கு பெறலாம்.திறனறியில் பயிற்சி பெற்றவர்களே பங்கு பெற முடியும்#info

அரிஸ்-கலீலில்யோ


ஓர் உயரமான இடத்திலிருந்து கீழே போடப்படும் ஒரு பொருள் எவ்வளவு கனமானதாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவாக அது நிலத்தில் வந்து விழும் என்று அரிஸ்டாட்டில் கூறியதைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வந்துள்ளனர்.

 அரிஸ்டாட்டில் எல்லாக் காலங்களிலும் மிகச் சிறந்த சிந்தனாவாதி என்று கருதப்பட்டவர். எனவே, நிச்சயமாக அவரது கூற்று தவறாக இருக்காது. ஆனால், அதைச் சோதித்துப் பார்க்க, ஒரு துணிச்சலான மனிதன் ஒரு கனமான பொருளையும் ஒரு லேசான பொருளையும் எடுத்துக் கொண்டுபோய், ஒரு பெரும் உயரத்திலிருந்து இரண்டையும் கீழே போட்டிருந்தால், கனமான பொருள் முதலில் தரையைத் தொட்டதா இல்லையா என்பதைக் கண்கூடாகப் பார்த்துத் தெளிவடைந்திருக்கலாம்.

 ஆனால், அரிஸ்டாட்டில் இறந்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள்வரை யாரும் அதற்கு முன்வரவில்லை. 1589 இல், கற்றறிந்த பேராசிரியர்கள் சிலரைப் பீஸா கோபுரத்தின் அடியில் வந்து நிற்குமாறு கலீலியோ கேட்டுக் கொண்டார். 

பிறகு, அவர் கோபுரத்தின்மேல் ஏறிச் சென்று, பத்துப் பவுண்டுகள் கனம் கொண்ட ஓர் எடையையும், ஒரு பவுண்டு கனம் வாய்ந்த ஓர் எடையையும் அங்கிருந்து கீழே தள்ளினார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன. ஆனால், தாங்கள் கண்கூடாகப் பார்த்ததை மறுக்கும் அளவுக்கு அப்பேராசிரியர்கள் தாங்கள் கேள்விப்பட்டு வந்துள்ள பொதுவான அறிவில் நம்பிக்கை கொண்டிருந்தனர். 

அவர்கள் தொடர்ந்து அரிஸ்டாட்டில் கூறியதுதான் சரி என்று கூறி வந்தனர்.

உண்மைகளை விட கேள்விப்பட்டதையே நாம் அதிகம் நம்புகிறோம்

Sunday 11 August 2024

வேலைக்கான ஒரு விண்ணப்பத்தில், "நீங்கள் எப்போதேனும் கைது செய்யப்பட்டுள்ளீர்களா?" என்று ஒரு கேள்வி இருந்தது. அக்கேள்விக்கு, "இல்லை" என்று விண்ணப்பதாரர் பதிலளித்தார். முதல் கேள்வியின் தொடர்ச்சியாக, இரண்டாவது கேள்வி, "ஏன்?" என்று இருந்தது. இதற்கு விடையளிக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்திராத அந்த "நேர்மை"யான, வெகுளியான விண்ணப்பதாரர். "ஏனென்றால், நான் ஒருபோதும் பிடிபடவில்லை என்று நினைக்கிறேன்," என்று எழுதினார்.

“ஆகட்டும். நான் கற்பிக்கிறேன். சென்று ஒரு அத்திப்பழத்தை எடுத்து வா!” என்றார் தந்தை. அவன் சென்று எடுத்து வந்தான். “அதை நறுக்கிப் பார். என்ன தெரிகிறது?”“மிகச்சிறிய விதைகளை காண்கிறேன். எள்ளினும் சிறிய விதைகள்.”“அதை நறுக்கு.” அதை நறுக்கினான். “என்ன தெரிகிறது””ஏதுமில்லை எனலாம். வெள்ளையாய் ஏதோ மிகவும் கொஞ்சமாக…”“அத்தி மரம் எங்கிருந்து வருகிறது மகனே?”“அதிலிருந்துதான்.”“எனில் இதுதான் அத்தி மரமாகிறதா?”“ஆம்.”“ அதுவே நீ என் மகனே. எது கண்ணுக்குப் புலப்படாததோ, ஆயினும் இதெல்லாமாக ஆவதோ, அதுவே நீ.”நித்ய சைதன்ய யதி

Saturday 10 August 2024

நியாண்டர்


மற்ற நாடுகளில் பல் வரிசை சீராக இருக்கவேண்டும் என சொல்லி பல் மருத்துவரிடம் போய் கம்பி கட்டிக்கொண்டு பல்லை சீர்படுத்திக்கொண்டு வருவார்கள்

ஆனால் ஜப்பானில் பெண்களுக்கு தெற்றுப்பல் இருந்தால் தான் அழகு என்ற கருத்தாக்கம் உண்டு. வாழ்நாள் முழுக்க தெற்றுப்பல்லுடன் இருப்பவர்கள் ஜப்பானுக்கு போனால் பலரும் "தெற்றுப்பல் சூப்பர்" என பாராட்டுவார்கள். அவர்களும் "என்னங்கடா, கிண்டல் எதாச்சும் பண்றாங்களா"னு கன்பியூஸ் ஆகிடுவாங்க

தெற்றுப்பல் தான் இயற்கை, இளமை, குறும்புத்தனம் என ஜப்பானில் சொல்கிறார்கள். இந்த ஸ்டைலை "யயேபா (Yaeba)" என சொல்வார்கள். பல்வரிசை சீராக இருக்கும் ஜப்பான் பெண்கள் போலி பற்களை பொருத்திக்கொண்டு பல்லை தெற்றுப்பல் ஆக்கிகொள்வது உண்டு. சிலர் டென்டிஸ்டிடம் போய் அறுவை சிகிச்சை எல்லாம் செய்து நல்ல பல்லை தெற்றுப்பல் ஆக்கிக்கொள்வார்கள். 

இரானியர்களுக்கு அது போல மூக்கு மிக முக்கியம். பல இரானியர்களுக்கும் மூக்கு புடைப்பாக இருக்கும். அதை நேராக, சீராக, சின்னதாக ஆக்கிக்கொள்ள மெனகெடுவார்கள். உலகின் மூக்கு சர்ஜரியில் முதலிடத்தில் இருக்கும் நகரம் டெஹ்ரான் தான். மூக்கு சர்ஜரி செய்தபின் மூக்கின் மேல் பிளாஸ்திரி ஒட்டிக்கொள்வது இரானில் ஸ்டேட்ட்ஸ் சிம்பல். ஏழைகள் சர்ஜரி செய்யாமலே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வருவதுண்டு

யூதர்களுக்கும் அதேபோல கூர் மூக்கு தான். ஆனால் "கூர் மூக்கு" என்பது யூதர்களை ஸ்டிரியோடைப் செய்ய பயன்படுத்தப்பட, கூர் மூக்குடன் பிறக்கும் யூதர்கள் சில சர்ஜரி செய்து அதை சரிப்படுத்திக்கொள்வதும் வழக்கம். 

நைஜிரியாவில் பல பழங்குடிகள் உண்டு. ஒருவர் இன்ன இனம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதனால் பிறந்தவுடன் அந்த இனத்தின் அடையாளத்தை முகத்தில் கீறலாக போட்டு, தழும்பு வரும்படிக்கு செய்துவிடுவார்கள். சாலையில் போனாலே "இவன் இன்ன இனம்" என கண்டுபிடித்துவிடலாம். நகரத்தில் பிறந்து தழும்பு போடாமல் எஸ்கேப் ஆகிறவர்களுக்கு பெண் கிடைக்காது. சிலர் கல்யாணம் ஆகவேண்டுமெனில் தழும்பு போட்டே ஆகவேண்டும் என்பதற்காக, கல்யாணத்துக்கு முன் வேண்டா வெறுப்பாக தழும்பு போட்டுக்கொள்வார்கள்.

பச்சை குத்துவது பல பூர்வகுடிகளின் வழக்கம். ஆனால் யூதர்கள் காலத்தில் அவர்களை சுற்றியிருந்த பிலிஸ்தினியர்கள் அவர்களின் கடவுளரின் உருவங்களை பச்சை குத்திக்கொள்ள ஆரம்பித்ததும், யூதர்கள் டக் என பச்சை குத்திக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். அவர்களின் புனித நூலான தனக்கில் இந்த தடை உள்ளது. பின்னாளில் கிறிஸ்தவ்ர்களும் அதை பின்பற்றி பச்சை குத்தாமல் இருந்தார்கள். ஆனால் ரோமானிய பேரரசில் போர்களில் இறந்தவர்களுக்கு எந்த முறையில் சவ அடக்கம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முகம் சிதைந்து எல்லாம் மரணம் நிகழும். யார் எந்த மதம் என எப்படி கண்டுபிடிப்பது? 

அதனால் கிறிஸ்தவ்ர்கள் சிலுவையை பச்சைகுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் இன்னும் சில கிறிஸ்துவ பிரிவுகளில் பச்சை குத்துவது ஒப்புக்கொள்ளபடவில்லை. அமெரிக்கா உருவானபின் உலகெங்கும் போன அமெரிக்க வீரர்கள், மாலுமிகள் அங்காங்கே ஸ்டைலான உருவங்களை பச்சை குத்திக்கொன்டு வர, அமெரிக்காவில் மீண்டும் பச்சை குத்துதல் பிரபலமானது. அங்கே கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகள் மூலமும் பச்சை குத்துதல் பரவியது

மூக்கு, பல்லு, சூடு, பச்சைன்னு என்ன கொடுமை இது எல்லாம்? ஆண்டவன் நம்மை எப்படி படைச்சானோ, அப்படியே இருக்கலாம்னு பலருக்கும் தோன்றுவது இல்லை

#History_is_his_story

~ நியாண்டர் செல்வன்

Friday 9 August 2024

ஜாகுவார்


ஜாகுவார் என்பது அமெரிக்கக் கண்டங்களில் வாழும் ஒரு பெரிய பூனை இனமாகும். இது பூனை குடும்பத்தில் மிகவும் சக்திவாய்ந்த உறுப்பினர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

ஒரு பெரிய ஆண் ஜாகுவார் 100 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். ஒரு ஜாகுவார் சுமார் ஆறு முதல் ஏழு அடி நீளம் இருக்கும். சிங்கம், புலிக்கு அடுத்தபடியாக பூனைக்குடும்பத்தில் மூன்றாவது வலிமை படைத்த மிருகம் ஜாகுவார்

எடை, உயரத்தில் தன் பெரியண்ணன்கள் சிங்கம், புலியை விட குறைவாக இருந்தாலும், கடி என வந்தால் ஜாகுவாரை அசைத்துக்கொள்ள முடியாது. சிங்கங்களே வேட்டையாட தயங்கும் முதலையின் தோலை கிழிக்கும் வலிமை படைத்தது ஜாகுவார். தென்னமெரிக்காவின் அமெசான் காடுகளில் ஆமைகளின் ஓடுகள் கூட ஜாகுவாரின் கடியில் சில்லாக உடையும்.

பெயருக்கேற்ப சிங்கம், புலி போல வேகமாக மணிக்கு 80 கிமி வேகத்தில் ஓடும். ஆனால் இதன் வேட்டையாடும் உத்தி சிங்கம், புலியில் இருந்து மாறுபட்டது. ஆபிரிக்க சவானாவில் சிங்கங்கள் குழுவாக வாழும், வேட்டையாடும். ஆனால் தென்னமெரிக்கா, மற்றும் மத்திய அமெரிக்காவில் அடர்ந்த காடுகள் மற்றும் மாபெரும் அமெசான் நதிப்பரப்பில் வாழும் ஜாகுவாருக்கு வேகமாக ஓடுவது அவசியமில்லை. கொரில்லா தாக்குதல் தான் பலனளிக்கும். குழுவாக வாழ்வதும் இல்லை. அவை தனியாக தான் வாழும்

ஜாகுவார் மரங்களில் பதுங்கி இருந்து இரையை தாக்கும் கொரில்லா உத்தியை பயன்படுத்தும். தவிர முக்கியமாக அமெசான் நதியின் வெள்ளபெருக்கில் ஏராளமான மீன்கள், முதலைகள், ஆமைகள் வரும். பொதுவாக பூனைகளுக்கு தண்ணீர் பிடிக்காது. நாள் முழுக்க உட்கார்ந்து உடலை நக்கி சுத்தம் செய்துகொள்ளுமே ஒழிய தன்ணீரில் இறங்காது. ஆனால் ஜாகுவார் மட்டும் இதற்கு விதிவிலக்கு

அமெசான் நதியின் ஆழமான பகுதிக்கு கூட தன்ணீரில் மீனை போல நீந்திசென்று மீன்கள், ஆமைகள், முதலைகளை கூட வேட்டையாடும். 20 நிமிடம் நீரில் முச்சை அடக்கி மூழ்கும் தன்மை கொன்டது. அமெசான் முதலைகளை நீருக்குள் சென்று வேட்டையாடும் சக்தி படைத்த ஒரே மிருகம் ஜாகுவார் தான். அதுவும் முதலையின் நடுத்தலையில் ஒரே கடி கடித்து தரைக்கு இழுத்து வந்து கொன்று உண்ணும்

ஜாகுவார்கள் தங்கள் கூர்மையான நகங்களைப் பயன்படுத்தி மரங்களில் எளிதாக ஏறும் திறன் கொண்டவை. இந்த திறன் மேலிருந்து இரையைத் தாக்க உதவுகிறது. அமெசான் காடுகளில் நடக்கையில் மேலே மரங்களை பார்த்துக்கொன்டே தான் பழங்குடிகள் பீதியுடன் நடப்பார்கள். மேலிருந்து வீழ்ந்து அவர்களை தாக்கும் மிருகங்கள் அங்கே இரண்டு. ஒன்று ஜாகுவார், இன்னொன்று அனகோண்டா. ஜாகுவாரை வேட்டையாடும் ஒரே உயிரினம் அமெசான் காடுகளில் அனகோண்டா மட்டும் தான்

அமெரிக்காவின் பல பழங்குடி கலாச்சாரங்களில், ஜாகுவார் என்பது வலிமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் மர்மம் ஆகியவற்றைக் குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த சின்னமாகும். இது பெரும்பாலும் இரவு மற்றும் பாதாள உலகம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.

மாயா மற்றும் அஸ்டெக் போன்ற பல்வேறு பழங்குடி குழுக்களின் புராணங்களில் ஜாகுவார்கள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன. அவை பெரும்பாலும் தெய்வங்கள் அல்லது ஆன்மீக குறியீடுகளாக சித்தரிக்கப்படுகின்றன.

ஆக புவியியலை பொறுத்து தன் இயல்பை ஜாகுவார் மாற்றிக்கொண்டு வெற்றிகண்டதால் தான் #geography_is_destiny

~ நியாண்டர் செல்வன்

கிளி


தனியாக வாழும் பெண் கிளி வளர்க்க ஆசைப்பட்டாள். ஆகவே பேசும் கிளி ஒன்றினை வாங்கினாள்.

ஒரே ஒருநாள் மட்டுமே அந்தக் கிளியைத் தன்னோடு வைத்துக் கொண்டுவிட்டு, மறுநாள் அந்தக் கடைக்குத் திரும்பிச் சென்று, “இந்தக் கிளி இன்னும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. இது எனக்குப் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவிட்டது,” என்று அந்தக் கடைக்காரரிடம் புலம்பினாள்.

 ”முகம் பார்க்கும் கண்ணாடி ஏதேனும் உங்கள் வீட்டில் இருக்கிறதா? தம்மைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது கிளிகளுக்கு மிகவும் பிடிக்கும்,” என்று அந்தக் கடைக்காரர் கூறினார். எனவே, அப்பெண் ஒரு கண்ணாடியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள்.

மறுநாள் மீண்டும் அவள் அக்கடைக்கு வந்து, தன்னுடைய பறவை இன்னும் பேசவில்லை என்று கூறினாள். “ஒரு சிறிய ஏணி அதற்கு இருக்கிறதா? ஏணியில் ஏறி இறங்குவது கிளிகளுக்குப் பிடித்தமான ஒரு பொழுதுபோக்கு,” என்று அக்கடைக்காரர் பதிலளித்தார். எனவே, இம்முறை அவள் ஓர் ஏணியை வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள். 

மூன்றாவது நாளும் அதே புகாருடன் அவள் அக்கடைக்குத் திரும்பி வந்தாள். “உங்கள் கிளிக்கு ஊஞ்சல் ஏதேனும் இருக்கிறதா? ஊஞ்சலில் ஆசுவாசமாக இருப்பது கிளிகளுக்குப் பிடிக்கும்,” என்று அக்கடைக்காரர் கூறினார். எனவே, அவள் ஓர் ஊஞ்சலை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

 மறுநாள் அவள் மீண்டும் அந்தக் கடைக்கு வந்து, தன்னுடைய பறவை இறந்துவிட்டதாகத் தெரிவித்தாள். “உங்கள் கிளி இறந்தது குறித்து நான் வருந்துகிறேன். தான் இறப்பதற்கு முன்பாக அது ஏதேனும் கூறியதா?” என்று அந்தக் கடைக்காரர் கேட்டார்.

 ”ஆமாம். ‘அந்தக் கடையில் சாப்பாடு எதுவும் விற்பனை செய்யப்படுவதில்லையா?’ என்று அது கேட்டது,” என்று அவள் கூறினாள்.

வெறுமனே மாற்றத்திற்காக மாறுவது உங்களுக்கு உதவப் போவதில்லை.

Wednesday 7 August 2024

புத்தகம்-18


Reading_Marathon2024
#24RM050

Book No:18/100+
Pages:240

ஆனைமலை
-பிரசாந்த் வே

கோவை புத்தகத் திருவிழாவில் வாங்கிய நாவல் இது. பழங்குடியினர் பற்றிய ஆராய்ச்சியில் இருப்பதால் இந்த நாவல் மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது.இந்தியாவில் பழமையான பழங்குடியினரான காடர்கள் வசிக்கும் பகுதி ஆனைமலை.புத்தகத்தை தோழர் பரமசிவம் அவர்களுக்கு சமர்ப்பித்ததை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். .ஆனைமலை பகுதியில் பழங்குடியினர் பற்றி ஆராய வேண்டும் என்றால் இவர்தான் நமக்கு வழிகாட்டியாக இருப்பார் .நண்பர் அருண் பாலாஜி மூலம் அவரிடம் இரண்டு மூன்று முறை அலைபேசியில் பேசியுள்ளேன். நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிட்ட வில்லை. பழங்குடியினர் நலனுக்காக போராடும் இடதுசாரி போராளி இவர் இனி நாவலை பற்றி பார்ப்போம்.

மனுஷங்களும் விலங்குகளும் ஒண்ணா வளர்வது சாத்தியமே இல்லை என படித்தவர்கள், என் ஜி ஓ கள் இயற்கை ஆர்வலர்கள் ஆகியோரின் வழியே இந் நாவல் தொடங்குகிறது. ஆனைமலை புலிகள் காப்பகமாக மாற்றப்பட்ட பிறகு புலிகளின் நல்வாழ்வுக்காக பழங்குடியினரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் கலந்து கொள்ளும் புதிய வன பாதுகாப்பு அதிகாரியான இளன் காடுகள் குறித்து அறிந்திருந்தாலும் களத்தில் அவரின் அனுபவம் குறைவு. களத்தில் நேரடியாக காடர்களை சந்திக்கும் போது அவர்களை வாழ்வியல் பற்றி தெரிந்து கொள்ளும்போது ஆனைமலையின் உண்மையான வரலாறு விலங்குகள் அழிப்பும் காடுகளின் அழிப்பும் பற்றி தெரிந்து கொள்ளும்போது நம்மை புது உலகத்திற்கு நாவல் வழிகாட்டுகிறது.

புலிகள் கணக்கெடுப்புக்கு செல்லும் இளன் காடுகள் குறித்து ஒவ்வொன்றாக தெரிந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் காட்டில் யானைகளால் இளன் தாக்கப்பட நேரும் போது காட்டு ராசா யானை மிரட்டி இலைகளைக் கொண்டு யானை மொழியில் பேசி யானையை விரட்டுகிறார் அப்போது காட்டு ராசாவின் மேல் இளனுக்கு அன்பு பிறக்கிறது. காட்டு ராசா விலங்குகளின் அனைத்து உத்திகளையும் காடுகளின் நுட்பத்தையும் அறிந்தவன். மலையின் கீழ் இருக்கும் கவுண்டர் தோட்டத்தில் வேலைக்கும் செல்பவன். யானைகளை விரட்ட தெரிந்த ஒரு சில காடர்களில் காட்டு ராசாவும் ஒருவன். அவன் சுந்தரியை மணந்து காட்டில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான்.

ஆனைமலை காடுகளில் தேக்கு மரங்களுக்கு வித்திட்டவர் ஹ்யூகோ வுட் என்னும் ஆங்கிலேயர் அதற்கு முன் இருந்த வில்லியம்சின் கொடுமைகளை அனுபவித்த காடர்கள் இவரின் வருகைக்குப் பிறகு மகிழ்ச்சியாய் இருந்தனர் உயிர்களை காப்பாற்றுதல் காடுகளை மேம்படுத்தல் என பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். உலகப் போரில் கூட கப்பல் செய்ய மரங்களைக் கேட்டபோது பிடிவாதமாய் மறுத்து விட்டார் இவையெல்லாம் வுட்டின் மீது நமக்கு இருக்கும் நன்மதிப்பை அதிகப்படுத்துகிறது.

ஆழியாறு, பரம்பிக்குளம் அணை கட்டுவதில் பழங்குடியினரின் இடமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது அணைக்கட்டுலின்போது அவர்கள் பட்ட துன்பங்கள் என்னென்ன‌.. காடுகளை விட்டு சமவெளிக்கு வந்த வானம்மா கூறும் கதைகள் காடுகளை விட்டு வரக்கூடாது என்ற எண்ணத்தை காட்டு ராசாவின் மனதில் விதைத்தது.

அமைதியாகச் செல்லும் காட்டு ராசாவின் வாழ்க்கையில் திடீர் திருப்பம் ஒன்று வந்து சேர்கிறது. காடு அழிப்பு புலிகள் படுகொலை போன்றவைகளால் பழங்குடியினர் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகின்றனர் என்பதும் உண்மையின் தன்மை இன்றி அப்பாவியான பழங்குடியினர் பல சமயங்கள் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றனர் என்பதும் காட்சி வடிவில் நமக்கு நாவல் உணர்த்துகிறது.

இறுதியில் வனத்துறையினர் எவ்வாறு பழங்குடியினருக்கு எதிராய் இருக்கின்றனர், பழங்குடியினரின் வாழ்வியலில் எந்த ஒரு ஒளி வெளிச்சமும் இல்லாமல் இருளில் அவர்கள் செய்வதறியாத திகைத்து நிற்கும் போது நம்மையும் திகைத்து நிற்கச் செய்து விடுகின்றார்கள் .காட்டு ராசாவின் மனநிலையும் பழனிச்சாமியின் கண்ணீருடன் இந்த நாவலை முடிக்க வேண்டி இருந்தது.

#ரசித்தது

*புலிகள் கணக்கெடுப்பு மே மாதமும் டிசம்பர் மாதமும் நடக்கும். 

*க்ளோஸ் என்கவுண்டர் என்பது எதிர்பாராத வகையில் வனவிலங்குகளால் காட்டில் தாக்கப்படும் நிகழ்வு

*வீடுகளை மலசர்கள் சாளை என்று அழைப்பது வழக்கம்

*காடு காரிருளை போர்த்தி படுத்திருந்தது. தூக்க கலக்கத்தில் இருக்கும் குழந்தை தூங்கி தூங்கி விழிப்பது போல சோலார் விளக்குகள் விட்டுவிட்டு எரிந்தன

*யானை விரும்பி உண்ணும் புல் வகை யானை புற்கள் டெமிடாஸ் இன்பெரியா எனப்படுகிறது 

*மற்ற பறவைகளை தங்களது இடத்திலிருந்து துரத்துவதில் குறியாகவும், எப்போதும் சண்டையிட தயாராகவும் இருக்கும் பறவை மைனா

*காடுகளுக்கு இடையே தீ பரவாமல் இருக்க குறிப்பிட்ட அகலத்துக்கு செடி, கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தலுக்கு தீ தடுப்பு கோடுகள் என்று பெயர்.

*ஆனைமலையில் தங்கியிருந்த இளவரசரு வேட்டைக்காக செல்வதற்கு வால்பாறை சாலைகளை போட்டார் இந்த சாலையும் குதிரை போகிற மாதிரி வளைந்து வளைந்து போகும்

*பரம்பிக்குளம் சுற்றுலா செல்லும் ஒவ்வொருவரும் காணக்கூடிய ஒரு மரம் தன் கன்னிமாரா எனும் தேக்கு மரம். நான் ஒரு ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த மரத்தின் வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது.

*என்ன அடிச்சு கொன்னு போட்டா கூட எங்க கொடி அரைக்கம்பத்தில் பறக்குமே தவிர ,கொடியை எடுக்கிற பேச்சுக்கே இடமில்லை என நிதானமாகவும் உறுதியாகவும் தோழர் பரமசிவன் சொன்னார்.

*காட்டு விலங்குகள் மேல காட்டுற அக்கறையை கூட மனுசங்க நம்ம மேல யாரும் காட்டுறது இல்ல

நாவலின் எந்த ஒரு இடத்திலும் தொய்வின்றி ஆராய்ச்சி உணர்வுடன் ஒவ்வொரு அத்தியாயமும் புதிய புதிய தகவல்களையும் வனம் குறித்த செய்திகளையும் நமக்குச் சொல்லி இருந்தது. .ஆழ்ந்த இலக்கிய நடை போன்று இல்லாமல் சாதாரண பாமர மக்கள் பேசும் மொழியினை உரைநடையாக எழுதிக் கொடுத்திருப்பார் ஆசிரியர் பிரசாந்த். இயற்கைக்கு எதிராக போராடுவதா அல்லது அரசாங்க வனத்துறையினரை எதிர்த்து போராடுவதா எனும் கேள்விக்கு விடை தெரியவில்லை. இதில் சூழலியலாளர்கள் பறவைகள் விலங்குகள் பக்கமும், பழங்குடியின செயல்பாட்டாளர்கள் பழங்குடி மக்கள் பக்கம் இருப்பதால் இருவரிடமும் கருத்து வேறுபாடுகள் மிகுந்து உள்ளது. ஆகவே இது பொது தன்மையுடன் வனங்களின் மக்களாகிய பழங்குடியினரை துன்புறுத்தல் இன்றி வனத்தையும், வனத்தை நம்பி வாழும் பழங்குடியினரையும் பாதுகாப்பது அனைவரின் கடமையாகும்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

"நமது பெரும் இலக்குகள் எட்டப்படாததற்குக் காரணம், இரண்டாம் நிலையிலுள்ள விஷயங்களை நாம் முதலில் செய்வதற்கு நம் நேரத்தைச் செல்விடுவதுதான்," - ராபர்ட் ஜே. மெக்

Tuesday 6 August 2024

துயரங்களால் தூய்மையடைதல் —- துயரங்களால் தூய்மைப்படுத்தபடுதல் என்ற சொற்சேர்க்கை இன்று அதிகாலை என்னைப் பீடித்தது. பாரசீகக் கவிஞர் ஃப்ரீத் அபு தாலிப் மொஹம்மது இபின் இப்ரஹிம் எழுதிய ‘பறவைகளின் நாடாளுமன்றம்’ ( Parliament of birds) நூலில் தங்கள் அரசனைக் கண்டுபிடிக்க எல்லா பறவைகளும் கிளம்புகின்றன . பல பறவைகள் அரசனைக் கண்டுபிடிக்காமலேயே இறந்துவிடுகின்றன. துயரங்களால் தூய்மைப்படுத்தப்பட்ட முப்பது பறவைகள் மட்டும் மலையுச்சியை அடைந்து தரிசனம் பெறுகின்றன. அந்த தரிசனம் எப்படியிருக்கிறதென்றால் ஒவ்வொருவரும், அனைவரும், தனியாகவும் மொத்தமாகவும் அரசனாய் இருக்கிறார்கள்.-எம்.டி முத்துகுமாரசாமி

Saturday 3 August 2024

பூமியும் வானமும்


பிலிப்பைன்ஸின் தகர கூரைகள் கொண்ட குடிசைகள் ஏராளம். அக்கம் பக்கம் நெரிசலான, இட நெருக்கடியில் சேரி பகுதியில் இவை அமைந்துள்ளன. அதனால் பிலிப்பைன்ஸ் நல்ல வெயில் அடிக்கும் நாடு என்றாலும், வீடுகளுக்குள் பகலில் கூட வெளிச்சம் வராது. மின்விளக்குகளை பகலில் போட்டுக்கொன்டு இருந்தார்கள்.

ஒரு எளிய தொழில்நுட்பம் மூலம் இதை மாற்றி மாதம் சில நூறு ரூபாய்கள் மின்கட்டணத்தை இக்குடும்பங்களுக்கு சேமித்து கொடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் பெப்ஸி, கோக் பாட்டிலில் நீரை நிரப்புவார்கள். அதனுள் கிருமிகள் போகாமல் இருக்க இரு ஸ்பூன் ப்ளீச்சை போடுவார்கள். அதன்பின் மூடி போட்டு மூடிவிடுவார்கள்

தகர கூரையில் ஓட்டைபோட்டு பெப்ஸி பாட்டில் பாதி கூரைக்கு மேலும், பாதி கூரைக்கு கீழும் இருக்கும்படி வைப்பார்கள். அதன்பின் பாட்டிலை சுற்றி ஓட்டை உள்ள இடத்தில் மழைநீர் புகாமல் அடைக்கபடும்.

இப்போது சூரிய வெளிச்சம் பாட்டிலில் மேற்புறத்தில் உள்ள நீரில் பட்டு, கீழே வீட்டுக்குள் பிரகாசமாய் பாட்டில் ஒளிர்ந்து ஒளிகொடுக்கும். சுமார் 55 வாட்ஸ் பல்புக்கு சமமான வெளிச்சம் இதில் கிடைக்கிறது. பகலில் இதனால் ஏராளமான மின்சாரம் மிச்சமாகிறது. இரவில் மட்டும் மின்விளக்குகளை போட்டுக்கொண்டால் போதும்

பள்ளிகள், ஆபிஸிகள், கராஜ், கோடவுன்கள் என பல இடங்களில் இந்த பெப்ஸி பாட்டில் விளக்குகள் பயனாகின்றன

எளிய தொழில்நுட்பம். இங்கேயும் செய்து பார்க்கலாம்

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

Friday 2 August 2024

கொள்ளிடம்


கொள் + இடம் = கொள்ளிடம்.

எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அது தாங்கும், ஏற்றுக்'கொள்ளும்' அதனால் அதன்பெயர் 'கொள்ளிடம்'

கடந்த 5 ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 1 கி.மீ அகலமுள்ள கொள்ளிடம் ஆற்றில் நீர் கரைபுரண்டோடுகிறது.

காவிரியின் இயற்கையான நீர் வடிகால் கொள்ளிடம் ஆறு.

திருச்சிக்கு மேலே முக்கொம்பு எனும் இடத்தில் காவிரி ஆறு இரண்டாக பிரிகிறது. (கல்லணையின் தொழில்நுட்பத்தில் வியந்த பிரிட்டிஷ் பொறியாளர் சர்.ஆத்தர் காட்டன் திருச்சியை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க மேலணையை முக்கொம்பில் கட்டினார்.

இதுதான் கொள்ளிடத்தின் பிறப்பிடம். இங்கு இரண்டாக பிரியும் காவிரி ஆறு கொள்ளிடம் என்ற பெயரில் ஸ்ரீரங்கத்திற்கு வடக்கேயும், காவிரியாக ஸ்ரீரங்கத்திற்கு தெற்கேயும் ஓடுவதால் ஸ்ரீரங்கம் தனித் தீவாகிறது.

முக்கொம்பிற்கு வரும் அதிகப்படியான வெள்ள நீர் கொள்ளிடத்தில் திருப்பிவிடப்படுவதால் திருச்சி நகரம் வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறது.

இதனை கடந்து வரும் காவிரியிலும் அதிகமான தண்ணீர் வந்தால் காவிரி டெல்டா பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்க கல்லணையிலிருந்து வெள்ளநீர் உள்ளாறு என்ற கால்வாய்மூலம் கொள்ளிடத்தில் மடைமாற்றி விடப்படும்.

வெள்ளத்திலிருந்து தஞ்சையையும், காவிரி பாசன பகுதிகளையும் பாதுகாக்கத்தான் சோழர்கள் காவிரியில் கல்லணையை கட்டினார்கள்.

கடந்த இரு தினங்களாக அதிகப்படியாக வந்த 40,000 கனஅடி தண்ணீர் திருச்சி முக்கொம்பிலிருந்தே நேரடியாக கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டதால் கொள்ளிடத்தில் கரைபுறண்டோடுகிறது தண்ணீர்.கல்லணையிலிருந்து கொள்ளிடத்திற்கு 7000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

இந்த கொள்ளிடம் நீர் நேரடியாக கடலுக்கு போவதில்லை. கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள அணைக்கரையில் தேக்கப்பட்டு அங்கிருந்து வடவாற்றில் திருப்பிவிடப்படும். வடவாற்றுக்கு போக மீதம் உள்ள தண்ணீர்தான் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு நேரடியாக கடலுக்கு போகும்.

கொள்ளிடக்கரையிலிருக்கும் பெரிய நகரம் சிதம்பரம். சிதம்பரத்தை கடந்து பரங்கிப்பேட்டை அருகே கொள்ளிடம் கடலோடு கலக்கிறது.

வடவாற்றிக்கு போகும் நீர் வீராணம் ஏரியை நிரப்புகிறது. வீராணம் ஏரியை நிரப்பியதும் கடலூர் மாவட்டத்தின் இன்னொரு பெரிய ஏரியான பெருமாள் ஏரியையும் நிரப்பும்.

கொள்ளிடம் நதியால் ஒரு லட்சம் ஏக்கர் பாசனம் நடைபெறுகிறது. அதன் பிறகுதான் கடலோடு கலக்கிறது. கொள்ளிடம் கடலோடு கலக்கும் இடத்தில் மீன்வளம் மிக அதிகம்.

அலையாத்தி காடுகள் எனப்படும் 'மேங்குரோவ் காடுகள்' கொள்ளிட நதியின் கழிமுகத்தில்தான் உள்ளது. சுனாமியிலிருந்து இந்த பகுதியை பாதுகாத்தது இந்த அலையாத்தி காடுகள்.

நதி நிலத்திற்கும் கடலிற்குமான தொப்புள் கொடி........

-படித்தது