2014
ஒலிம்பியா எனும் ஆஸ்திரேலிய பெண் தொழில் முனைவோர். கோழிப்பண்ணை வைக்கலாமா என யோசிக்கிறார்
ஆனால் கோழித்தீவன செலவு கட்டுபடி ஆகாமல் இருப்பதால், கோழிதீவனத்துக்கு என்ன செய்யலாம் என யோசிக்கிறார்
மேகாட் எனப்படும் பூச்சிகளை வளர்த்தால் என்ன என தோன்றுகிறது. இருட்டான ஒரு அறையில், உணவுகழிவுகளை போட்டு, அவற்றின் மேல் மேகாட் பூச்சிகளின் முட்டைகளை போட்டால் போதும். 14 நாளில் அவை வளர்ந்து கொழுத்துவிடும்
மேகாட் பூச்சிகள் சாப்பிடாத உணவு என எதுவுமே உலகில் இல்லை. இலைகள், தழைகள், மீதமான ஓட்டல் உணவுகள், புல்...என அனைத்தையும் சாப்பிடும். மெக்டானல்ட்ஸ் மற்றும் சில மால்களுடன் பேசி, அவற்றின் உணவுக் கழிவுகளை கொட்ட கன்டெய்னர்களை கொடுத்து, கன்டெய்னர்களை ஏற்றி வந்து பூச்சிகளை வளர்த்தார்
அதில் வந்த லாபத்தை பார்த்துவிட்டு, கோழிப்பண்ணை வைக்கும் ஐடியாவையே கைவிட்டு விட்டார். முழுமையாக மேகாட் பூச்சிகளை வளர்த்து கோழித்தீவனமாக விற்பனை செய்தார்
அதன்பின் மேலும் ஒரு ஐடியா தோன்றியது. உணவுகழிவுகள் இலவசம் தான். ஆனால் அவற்றை லாரிகளில் ஏற்றி கொன்டு வரும் செலவும் சற்று கூடுதலாக தான் இருக்கிறது. உணவு கழிவுகளை பண்ணை இருக்குமிடத்துக்கு கொண்டுவருவதை விட, உணவகம் இருக்கும் இடத்துக்கு பண்ணைகளை நகர்த்தினால் என்ன?
மெக்டானல்ட்ஸுடன் பேசினார். அவர்களின் உணவகத்தில் பூச்சிகள் இருக்கும் கன்டெய்னர் ஒன்று நிறுத்தபட்டது. மெக்டானல்ட்ஸின் மீதமாகும் பர்கர்கள், பிரெஞ்சு பிரை, கொகோகோலா..எல்லாவற்றையும் அவர்கள் ஒரு குழாயில் ஊற்றுவார்கள். அது கன்டெய்னருக்குள் வரும். அதனுள் இருக்கும் ரோபாட், அதை நசுக்கி, உருண்டையாக்கி, மாகட் பூச்சிகள் இருக்கும் அலமாரிகளில் விடும். பூச்சிகள் அதை உண்ணும். அவற்றின் முட்டைகள் தனியாக சேகரிக்கபடும். அவற்றின் கழிவுகளும் தனியாக பிரித்து எடுக்கப்பட்டு உரமாகும். பூச்சிகள் அதன்பின் பண்ணைகளுக்கு அங்கிருந்தே பார்சல் ஆகும். 15 நாளுக்கு ஒரு லாரி வந்து பூச்சிகளையும், உரத்தையும் எடுத்துக்கொண்டு போகும்.
மெக்டானல்ட்ஸ் கம்பனியிடம் இதை சொன்னபோது அவர்கள் "இலவசமாக எங்கள் மீதமான உணவை கொடுப்பது மட்டுமல்ல. இதற்கு மாதா, மாதம் குப்பைகளை அகற்ற ஆகும் செலவையும் உங்களுக்கே சந்தா மாதிரி கொடுத்துவிடுகிறோம்" என்றார்கள்
இப்படியே சில மால்கள், உணவகங்களிடமும் பேசி, அங்கேயும் சந்தா முறையில் மாகட் பூச்சிகளை வளர்த்து, நல்ல லாபம் சம்பாதிக்கிறார் ஒலிவியா
ஆக இப்படி மீதமான உணவை மறுசுழற்சி செய்து, உணவகங்களின் குப்பைகள், மலிவு விலை கோழித்தீவனம், சுற்றுசூழல் பிரச்சனை என ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிப்பதால் தான் இவர் #பிசினஸ்_பிஸ்தாக்கள் ஆகிறார்
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment