Monday, 26 August 2024

Peer reviewsநாம் ஒரு அறிவியல் இதழுக்கு ( Journal) ஆய்வுக் கட்டுரைகள் அனுப்பும் போது நம் பெயரை எடுத்துவிட்டு அதை ஓரிரு நிபுணர்களுக்கு அனுப்புவார்கள். யார் எழுதியது என்று தெரியாமலேயே அதை விமர்சிக்க வேண்டும். இவர்தான் எழுதியிருந்தார் எனத் தெரிந்தால் bias ஆகிவிடுவோம். விமர்சிப்பவர் யாரென்று author க்கும் தெரியாது.இதுதான் peer review.புகழ்பெற்ற எழுத்தாளர், உளவியல் பேராசிரியர் Adam Grant இப்படி ஒரு ஆய்வுக் கட்டுரையை அனுப்பிய போது அவருக்கு முகம் தெரியா விமர்சகர் அனுப்பிய பதில் " இக்கட்டுரை சாதாரணமாக இருக்கிறது. போய் Adam Grant எழுதிய கட்டுரைகளைப் படிக்கவும்"( Ref : Think again - book by Adam Grant )கண்ணதாசன் ஒரு முறை ஒரு கல்லூரியில் தான் எழுதிய கவிதையை அக்கல்லூரி மாணவன் ஒருவன் எழுதியதாகச் சொல்லி அம்மாணவனையே வாசிக்க வைத்தாராம் . பெரிய கைதட்டல்கள் இல்லை. பின் அம்மாணவன் எழுதிய கவிதையைக் கண்ணதாசன் வாசித்தாராம். கரகோஷம் விண்ணைப் பிளந்ததாம். பின்னர் கண்ணதாசன் உண்மையைச் சொன்னாராம்.இதுதான் Bias எனும் முன்சாய்வுஇதுபோல் peer review நம் ஊர் இலக்கியங்களிலும் கடைப்பிடித்தால் எப்படி இருக்கும்?- டாக்டர் ஜி ராமானுஜம்

No comments:

Post a Comment