Sunday, 18 August 2024

எட்டையபுரம் மன்னரின் சபையில் பாரதி அரசவைக் கவிஞராக இருந்தார். மீசை வைத்துக்கொள்ள ஆசைப்பட்ட பாரதி, மீசை வளர்த்தார். ஒருநாள் முறுக்கு மீசையுடன் அரண்மனையில் நுழைந்த பாரதியைப் பார்த்த மன்னர் முகம் சுளித்தார். பாரதியின் சித்தப்பாவிடம், பாரதி மீசையை எடுக்காவிட்டால் அவருக்கு வழங்கப்படும் மானியம் நிறுத்தப்படும்' என்றார் மன்னர். சித்தப்பா மூலம் இதைக்கேள்விப்பட்ட பாரதி மன்னரிடம் சென்று, 'ஐயா, இத்தனை நாள் என் கவித்திறமைக்காக மானியம் வழங்கப்பட்டு வந்தது என்று நினைத்தேன். இப்போதுதான் என் மீசைக்காக மானியம் வழங்கப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன் மீசைக்கான காசு எனக்கு வேண்டாம்' என்று அந்தப் பணியை உதறிவிட்டார்.#manipmp

No comments:

Post a Comment