Sunday, 11 August 2024

“ஆகட்டும். நான் கற்பிக்கிறேன். சென்று ஒரு அத்திப்பழத்தை எடுத்து வா!” என்றார் தந்தை. அவன் சென்று எடுத்து வந்தான். “அதை நறுக்கிப் பார். என்ன தெரிகிறது?”“மிகச்சிறிய விதைகளை காண்கிறேன். எள்ளினும் சிறிய விதைகள்.”“அதை நறுக்கு.” அதை நறுக்கினான். “என்ன தெரிகிறது””ஏதுமில்லை எனலாம். வெள்ளையாய் ஏதோ மிகவும் கொஞ்சமாக…”“அத்தி மரம் எங்கிருந்து வருகிறது மகனே?”“அதிலிருந்துதான்.”“எனில் இதுதான் அத்தி மரமாகிறதா?”“ஆம்.”“ அதுவே நீ என் மகனே. எது கண்ணுக்குப் புலப்படாததோ, ஆயினும் இதெல்லாமாக ஆவதோ, அதுவே நீ.”நித்ய சைதன்ய யதி

No comments:

Post a Comment