அலெக்சாந்தரின் இளவயது நண்பர்கள் இருவர் டாலமி மற்றும் செலூக்கஸ். அவர்களின் நட்பு இளமை பருவத்திலேயே தொடங்கியது. இருவரும் அலெக்சாண்டரின் தந்தையான பிலிப்பின் அரண்மனையில் வளர்ந்தனர். அங்கு அவர்கள் ஒன்றாக விளையாடியதோடு, இராணுவ பயிற்சியையும் பெற்றனர்.
அலெக்சாந்தர் படையுடன் கிளம்பியபோது, இருவரும் உடன்சென்று பல வெற்றிகளை ஈட்டினார்கள். பஞ்சாபில் மன்னர் புருஷோத்தமன் எனும் போரஸுடன் நடந்த போரில், கிட்டத்தட்ட அலெக்சாந்தரின் குதிரை கொல்லபட்டு, அலெக்சாந்தர் பிடிபடும் அல்லது கொல்லபடும் தருணம். புயலென அங்கே குதிரைப்படையுடன் பாய்ந்து அலெக்சாந்தரை அள்ளி எடுத்துக்கொன்டு போனார் செலூக்கஸ். அதன்பின்னும் போர் நிற்காமல் செலுக்கஸ் தலைமையில் நடந்தது. அங்கே கிடைத்த மாபெரும் வெற்றியால் நிகேடார் (வெற்றியாளர்) எனும் பட்டம் அவருக்கு வழங்கபட்டது
அதன்பின் பாபிலோனில் அலெக்சாந்தர் மரணமடைய, கிரெக்கம் முதல் பஞ்சாப் வரை பரந்து விரிந்திருந்த பேரரசை என்ன செய்வது என குழப்பம் ஏற்பட்டது.
டாலமி எகிப்து சென்று எகிப்தின் மன்னராக தன்னை அறிவித்துக்கொன்டார். கிரேக்கம் பெர்காமன் எனும் தளபதியின் வசம். துருக்கி முதல் பஞ்சாப் வரை இருந்த மிகப்பெரும் பகுதி செலுக்கஸ் நிகேடர் வசம் வந்தது
ஆனால் அப்போது இந்தியாவில் மவுரியர்கள் ஆட்சி மலர்ந்தது. சந்திரகுப்த மவுரியர் பஞ்சாப் மேல் படை எடுத்தார். செலுக்கஸ் உடனே படைகளை திரட்டிக்கொண்டு பஞ்சாப் செல்லும் நிலை. இரு படைகளும் அணிவகுத்து எதிரெதிர் நின்றன
அதுநாள் வரை அப்படி ஒரு போரை இந்திய துணைக்கண்டம் பார்த்தது இல்லை என்பது மாதிரியான போர் நடந்ததது. பல லட்சம் பேர் கலந்துகொன்ட, அன்றைய உலகின் மிகப்பெரும் வல்லரசுகள் இரண்டு நடத்திய போர். சந்திரகுப்தருக்கு மாபெரும் வெற்றி
ஆனால் இருவரும் சமாதான உடன்படிக்கை செய்துகொள்ள முடிவெடுத்தார்கள். இன்றைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பலூசிஸ்தான் ஆகியவை சந்திரகுப்தருக்கு வழங்கப்ட்டன. இன்றைய இரானின் எல்லையில் இருந்து துருக்கி வரை இருந்த பகுதிக்கு செலுகஸ் ஆட்சியாளர். தன் மகளை சந்திரகுப்தருக்கு திருமணம் செய்து கொடுத்து, மெகஸ்தனிஸ் எனும் தூதரை அரசவைக்கு அனுப்பினார். பதிலுக்கு 500 யானைகளை பரிசாக பெற்றார்
பண்டைய இந்தியாவின் மேற்கெல்லைகள் தீர்மானமாக காரணம் இந்த போர் என சொல்லலாம். ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும், பலூசிஸிதானும் பாரசிக பேரரசிடம் இருந்து பிரிந்து இந்தியாவில் சேர்ந்தன. இன்றும் இந்த பகுதிகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எனும் இரு துணைக்கண்ட நாடுகளாக உள்ளன. மெகஸ்தனிஸ் தான் இந்திய வரலாற்றை மேற்கே எடுத்து சொன்னவர்
அடுத்த 200 ஆண்டுகள் செலுக்கஸின் வாரிசுகள் இரான், இராக், துருக்கியை ஆண்டார்கள்.
#History_is_his_story
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment