திமிங்கிலங்கள் பாலூட்டிகள் என்பது நமக்கு தெரியும் . ஆனால், குட்டி திமிங்கிலங்கள் எப்படி அதைக் குடிக்கும் என்பது பலருக்குத் தெரியாது.
நிலத்தில் வாழும் பாலூட்டிகள் வாய் வைத்து பால் குடிப்பதைப் போல இல்லை. பெண் திமிங்கிலங்கள் தங்கள் குட்டிகள் அருகில் இருக்கும்போது தண்ணீரில் தங்கள் பாலை பீய்ச்சி அடிக்கின்றன. இந்த பால் மிகவும் கெட்டியாகவும், பசை போல, 50% கொழுப்புச் சத்துடன் இருப்பதால், தண்ணீரில் கரைவதில்லை. இது குட்டி திமிங்கிலம் எளிதாக அதை உறிஞ்சிக் குடிக்கும். விண்வெளியில் மிதக்கும் நீர் உருண்டைகளை விண்வெளிப் பயணிகள் குடிப்பது போல!
இயற்கைதான் எவ்வளவு வினோதங்களை தன்னகத்தே கொண்டுள்ளது!
Photo by Mike Korostelev / UPY 2021.
No comments:
Post a Comment