பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம்.
நாய் இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், கொஞ்சுகிறார், என்னை கவனிப்பவர் ராஜா போன்றவர், இவரை நான் மகிழ்விக்க வாலாட்டுவேன், இவருக்காக காத்திருப்பேன், இவரோடு விளையாடுவேன்.
நாய்க்கு அன்பு கொடுக்க கொடுக்க, அது உயிரையே கொடுக்கும் தன் எஜமானருக்கு, சோர்ந்து போகும் அன்பில்லாவிடில். நாய் ஒரு Team player
பூனை இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், தூக்கி வைத்து கொஞ்சுகிறார், உணவளிக்கிறார், இவ்வளவு கவனம் கிடைக்கிறது என்றால் நான் ராஜா போன்றவன்.
பூனைக்கு அன்பு கிடைக்க கிடைக்க, அது தன்னைப்பற்றி மிகையான பிம்பம் வளர்த்துக்கொள்ளும். நீங்கள் சேவை செய்ய கடமைப்பட்டவர் என நினைக்கும். பூனை ஒரு Solitary Hunter.
மனிதர்களுள் நாய்குணம் உடையவரும் உண்டு, பூனை குணம் உடையவரும் உண்டு.
நாம் என்ன குணம் என்பதை நம்மை சார்ந்தோரை கேட்டு அறியலாம்
No comments:
Post a Comment