Tuesday, 20 August 2024

book-20


Reading_Marathon2024
#24RM050

Book No:20/100+
Pages:132

திரைப்பாடம்
-ஆர்.கார்த்திகேயன்

உலக சினிமாவை பார்த்ததைவிட படித்ததே அதிகம். முதன்முறையாக திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்தான் உலக திரைப்பட விழாவினை எனக்கு அறிமுகம் செய்தது. அந்த படங்களை பார்த்து வியந்து உலக திரைப்படம் குறித்து படிக்க ஆரம்பித்தேன். அதற்கு அச்சாணியாக விகடனில் செழியன் எழுதிய உலக சினிமா புத்தகம் சிவப்பு கம்பளம் இட்டு உலக சினிமாவின் பால் ஈர்த்தது.
 அந்த வகையில் இந்த புத்தகத்தில் 31 திரைப்படங்களுக்கான கதையும் விமர்சனமும் மிகவும் நேர்த்தியாக உள்ளது.தி இந்து நாளிதழில் தொடராக வந்த தொகுப்பு தான் இந்த புத்தகம்.

18 வயது பையன் அவன் தந்தை கொன்றதாக முடிவு பெறாத வழக்கு. 12 பேர் கொண்ட ஜூரியின் முன் விடப்படுகிறது.
ஒரே அறையில் 12 பேர் கூடி ஒரு வழக்கை விசாரிக்கிறார்கள். அதில் 11 பேர் அவனுக்கு எதிராக வாக்களித்து மரண தண்டனை கிடைக்கும் தருவாயில் கதாநாயகன் மட்டும் ஆதரவாக வாக்களிக்கிறான். நாயகன் அவர்களிடம் கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் மெல்ல மெல்ல அவர்களின் கண்ணோட்டங்களை மாற்றுவதாக இத்திரைப்படம் இருந்தது. ஒரு பிரச்சனையை திறந்த மனதுடனும் எவ்வித சார்புமின்றியும் பார்க்கும் நாயகன் இதில் பிரம்மிப்பாய் தெரிகிறான்.(12, ஆங்ரி மென்)

The song of sparrows ஈரானிய இயக்குனர் மஜீத் மஜ்தியின் இப்படம் நடுத்தரம் குடும்பம் ஒன்றில் நடக்கும் நிகழ்வு. கதையின் நாயகன் கரீம் கிராமத்தில் நெருப்புக்கோழி பண்ணை ஒன்றில் வேலை பார்க்கிறார் .மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் அவரின் ஒரு மகனின் காது கேட்கும் கருவி தொலைந்து விடுகிறது. குடும்பமே தேடியும் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில் கரீம் பராமரிப்பிலிருந்து நெருப்புக்கோழி காணாமல் போய்விடுகிறது. இதனால் குடும்பச் சூழ்நிலை காரணமாக நகரத்துக்கு வேலை தேடிச் செல்கிறார். அங்கு எதிர்பாராத விபத்தில் அவரின் கால் உடைந்து விட நொறுங்கிப் போகிறான். பிறகு நெருப்புக்கோழி கிடைத்துவிட மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறது குடும்பம். எத்தனை கஷ்டம் வந்தாலும் அன்பின் மீதான பிடிப்பினை இந்த திரைப்படம் எளிமையான கருத்துக்களால் கவரப்பட்டுள்ளது.

முதலாளி பணித்ததால் பெட்டியை தேடும் இரு கூலிப்படையினர், விடுதியை கொள்ளையிட வரும் இரு காதலர்கள், குத்துச்சண்டைகள் தோற்பதற்காக பணம் வாங்கிக்கொண்டு எதிரியை கொன்று பணத்துடன் உயிருக்கு பயந்து காதலியுடன் ஓடும் ஒருவன்.. இப்படி நான்கு கதைகள் உள்ள படம்தான் பல் ஃபிஷன்.

To sir with love இரண்டாம் உலகப்போர் முடிந்து வேலையில்லாத திண்டாட்டம் நடைபெறும் காலகட்டத்தில் பொறியாளராக ஆசைப்படும் நாயகன் வேறு வழி இன்றி ஆசிரியர் பணிக்கு வருகிறான். அங்கு ஏற்படும் இன்னல்களும் அதனை அவர் எவ்வாறு கையாண்டார் என்பதும், மாணவர் இடத்தில் புதுமையை புகுத்திய அந்த ஆசிரியரின் கதை இறுதியில் மீண்டும் பொறியாளர் வேலை கிடைக்கும் போது போகக்கூடாது என்று மாணவர்கள் தடுக்கின்றனர்.. படம் நிகழ்ச்சியுடன் முடிவடைகிறது .தமிழில் இது போன்ற ஆசிரியர்கள் மாணவர்கள் பிரச்சனையை மையப்படுத்திய திரைப்படத்துக்கு முன்னுதாரணமாக இருப்பது இந்த படம் தான். 1967-ம் ஆண்டு வந்தது.

Bicycle thieves  திரைப்படத்தை பலரும் பார்த்திருக்கக்கூடும் இருப்பினும் இது எனக்கு மிகவும் பிடித்ததால் பகிர்கிறேன் இத்தாலியில் கடும் வேலையில்லாத திண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, போஸ்டர் ஒட்டும் வேலைக்கு சைக்கிள் வைத்திருந்தால் தான் வேலை என்ற நிபந்தனையுடன் படம் துவங்குகிறது. மனைவியின் நகைகளை பொருட்களை அடகு வைத்து பணம் வாங்கி சைக்கிள் ஒன்றை வாங்கி வேலைக்கு கிளம்புகிறான். முதல் நாள் போஸ்டர் ஒட்டும் போது மிதிவண்டி காணாமல் போகிறது அதன் பின் என்ன ஆனது என்பதே கதை. இறுதியில் மகனும் தந்தையும் இருக்கும் காட்சி மிகவும் நெகிழ்ச்சியானது.

மும்பை டப்பாவாலாக்கள் அந்நாளில் மிகவும் பிரபலம் .விருப்பமில்லாத கணவனுக்காக மனைவி சமைத்து தரும் உணவு ஒரு நாள் மாறிப் போகிறது. மாறிப்போன உணவை சாப்பிடும் ஓய்வு பெறும் வயதில் உள்ள சாஜன் பெர்னாண்டஸ் அந்த உணவினை சாப்பிட்டு அதன் ருசியில் மயங்கி சமைத்த இலாவுக்கு கடிதம் எழுதுகிறார். அதற்குப்பின் என்ன ஆனது தி லஞ்ச் பாக்ஸ் கதை.

குடும்பப் பிரச்சினைகளால் தனிமையில் வாழும் காரல். நண்பனின் வற்புறுத்தலால் எஸ் பட்டறைக்கு செல்கிறான். அங்கு பேசும் தலைவரின் பேச்சில் மயங்கி வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் எஸ் சொல்ல வேண்டும் நோ சொல்லக்கூடாது என சபதம் ஏற்கிறார். அன்று முதல் ஒவ்வொரு விஷயங்களுக்கும் எஸ் சொல்ல வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் காவலரிடம் ஒரு பிரச்சனையில் மாட்ட இந்த பயிற்சியை பற்றி கூறுகிறான். கல்யாணத்துக்கு விருப்பமில்லாமல் ஒரு பெண் இவரை மனம் புரிய வேண்ட இவரும் எஸ் சொல்லி சம்மதிப்பதை நினைத்து காதலி மனமடைந்து போகிறாள். இறுதியில் கண்மூடித்தனமாக எல்லாவற்றுக்கும் எஸ் சொல்ல வேண்டியதில்லை. மனமுவந்து புது அனுபவங்களை ஏற்க தயாராக வேண்டும் என்பதுதான் இந்த படத்தின் சாரமாக இருக்கிறது எஸ் மேன் கதை.

பீஸ்ஃபுல் வாரியர்- பிடிவாதமும் அவசரகமும் நிறைந்த அமெரிக்க இளைஞனின் கனவு  ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது. தினசரி காலை ஓட்ட பயிற்சியின்போது வயதான முதியோர் ஒருவரை காண்கிறான். துறவி போல் இருப்பதால் அவரைச் சாக்ரடீஸ் என அழைக்கிறான். அவரிடம் உள்ள விசேஷத் திறமை இவனை கவருகிறது. அவருடைய பேச்சு மன அமைதியை ஏற்படுத்துகிறது .தொடர்ந்து அவரிடம் இருந்து நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் போது தன்னுடைய முன்கோபத்தால் அவரிடமிருந்து விலகுகிறான் .அதன் பின் நடக்கும் விபத்தில் அவனுக்கு கால் முறிவு ஏற்பட்டு போட்டியில் கலந்து கொள்ளவே முடியாத நிலை. இருப்பினும் சாக்ரடீசின் உதவியால் மீண்டும் போட்டியில் பங்கேற்கிறான். இறுதிப் போட்டிக்கு செல்கிறான். வெற்றியும் பெறுகிறான். அப்போது அந்த நிகழ்வுக்கு முன்னர் வயதான முதியவரான சாக்ரடீஸ் மறைந்து போகிறார். அவர் பேசுவது போல் இவனுக்கு கேட்கிறது. எங்கு இருக்கிறாய்? இங்கு!" என்ன நேரம் இப்போது? இப்பொழுது!" நீ யார்? இந்த கணம்! இந்த கணத்தில் வாழ் எனும் ஜென் தத்துவத்தின் அடிப்படையில் இந்த கதை முடிகிறது.

இது போன்ற திரைப்படங்கள் ஒவ்வொன்றிலும் சுவாரசியமாய் சொல்லப்பட்டு அதில் தான் ரசித்த வசனங்களையும் ஆசிரியர் இதில் சொல்லி இருப்பார். ஒவ்வொரு திரைப்படத்தைப் பற்றியும் ஒன்றரை பக்கங்களே சொல்லி இருப்பதால் நாம் அந்த 31 திரைவிமர்சனங்களையும் ஒரே மூச்சில் படித்து விட இயலும். இதில் ஒரு சில திரைப்படங்கள் ஏற்கனவே நான் பார்த்ததால் அதனை பகிரவில்லை. இன்னும் பகிராத படங்களும் இதில் உள்ளன‌. இந்த படங்களை பார்க்கும் ஆர்வமும் இந்த புத்தகத்தின் மூலம் ஏற்பட்டது எனில் அது மிகையில்லை 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment