ஓர் உயரமான இடத்திலிருந்து கீழே போடப்படும் ஒரு பொருள் எவ்வளவு கனமானதாக இருக்கிறதோ, அவ்வளவு விரைவாக அது நிலத்தில் வந்து விழும் என்று அரிஸ்டாட்டில் கூறியதைப் பல நூற்றாண்டுகளாக மக்கள் நம்பி வந்துள்ளனர்.
அரிஸ்டாட்டில் எல்லாக் காலங்களிலும் மிகச் சிறந்த சிந்தனாவாதி என்று கருதப்பட்டவர். எனவே, நிச்சயமாக அவரது கூற்று தவறாக இருக்காது. ஆனால், அதைச் சோதித்துப் பார்க்க, ஒரு துணிச்சலான மனிதன் ஒரு கனமான பொருளையும் ஒரு லேசான பொருளையும் எடுத்துக் கொண்டுபோய், ஒரு பெரும் உயரத்திலிருந்து இரண்டையும் கீழே போட்டிருந்தால், கனமான பொருள் முதலில் தரையைத் தொட்டதா இல்லையா என்பதைக் கண்கூடாகப் பார்த்துத் தெளிவடைந்திருக்கலாம்.
ஆனால், அரிஸ்டாட்டில் இறந்து கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள்வரை யாரும் அதற்கு முன்வரவில்லை. 1589 இல், கற்றறிந்த பேராசிரியர்கள் சிலரைப் பீஸா கோபுரத்தின் அடியில் வந்து நிற்குமாறு கலீலியோ கேட்டுக் கொண்டார்.
பிறகு, அவர் கோபுரத்தின்மேல் ஏறிச் சென்று, பத்துப் பவுண்டுகள் கனம் கொண்ட ஓர் எடையையும், ஒரு பவுண்டு கனம் வாய்ந்த ஓர் எடையையும் அங்கிருந்து கீழே தள்ளினார். இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வந்து விழுந்தன. ஆனால், தாங்கள் கண்கூடாகப் பார்த்ததை மறுக்கும் அளவுக்கு அப்பேராசிரியர்கள் தாங்கள் கேள்விப்பட்டு வந்துள்ள பொதுவான அறிவில் நம்பிக்கை கொண்டிருந்தனர்.
அவர்கள் தொடர்ந்து அரிஸ்டாட்டில் கூறியதுதான் சரி என்று கூறி வந்தனர்.
உண்மைகளை விட கேள்விப்பட்டதையே நாம் அதிகம் நம்புகிறோம்
No comments:
Post a Comment