மற்ற நாடுகளில் பல் வரிசை சீராக இருக்கவேண்டும் என சொல்லி பல் மருத்துவரிடம் போய் கம்பி கட்டிக்கொண்டு பல்லை சீர்படுத்திக்கொண்டு வருவார்கள்
ஆனால் ஜப்பானில் பெண்களுக்கு தெற்றுப்பல் இருந்தால் தான் அழகு என்ற கருத்தாக்கம் உண்டு. வாழ்நாள் முழுக்க தெற்றுப்பல்லுடன் இருப்பவர்கள் ஜப்பானுக்கு போனால் பலரும் "தெற்றுப்பல் சூப்பர்" என பாராட்டுவார்கள். அவர்களும் "என்னங்கடா, கிண்டல் எதாச்சும் பண்றாங்களா"னு கன்பியூஸ் ஆகிடுவாங்க
தெற்றுப்பல் தான் இயற்கை, இளமை, குறும்புத்தனம் என ஜப்பானில் சொல்கிறார்கள். இந்த ஸ்டைலை "யயேபா (Yaeba)" என சொல்வார்கள். பல்வரிசை சீராக இருக்கும் ஜப்பான் பெண்கள் போலி பற்களை பொருத்திக்கொண்டு பல்லை தெற்றுப்பல் ஆக்கிகொள்வது உண்டு. சிலர் டென்டிஸ்டிடம் போய் அறுவை சிகிச்சை எல்லாம் செய்து நல்ல பல்லை தெற்றுப்பல் ஆக்கிக்கொள்வார்கள்.
இரானியர்களுக்கு அது போல மூக்கு மிக முக்கியம். பல இரானியர்களுக்கும் மூக்கு புடைப்பாக இருக்கும். அதை நேராக, சீராக, சின்னதாக ஆக்கிக்கொள்ள மெனகெடுவார்கள். உலகின் மூக்கு சர்ஜரியில் முதலிடத்தில் இருக்கும் நகரம் டெஹ்ரான் தான். மூக்கு சர்ஜரி செய்தபின் மூக்கின் மேல் பிளாஸ்திரி ஒட்டிக்கொள்வது இரானில் ஸ்டேட்ட்ஸ் சிம்பல். ஏழைகள் சர்ஜரி செய்யாமலே மூக்கில் பிளாஸ்திரி ஒட்டிக்கொண்டு வருவதுண்டு
யூதர்களுக்கும் அதேபோல கூர் மூக்கு தான். ஆனால் "கூர் மூக்கு" என்பது யூதர்களை ஸ்டிரியோடைப் செய்ய பயன்படுத்தப்பட, கூர் மூக்குடன் பிறக்கும் யூதர்கள் சில சர்ஜரி செய்து அதை சரிப்படுத்திக்கொள்வதும் வழக்கம்.
நைஜிரியாவில் பல பழங்குடிகள் உண்டு. ஒருவர் இன்ன இனம் என்பதை எப்படி தெரிந்துகொள்வது? அதனால் பிறந்தவுடன் அந்த இனத்தின் அடையாளத்தை முகத்தில் கீறலாக போட்டு, தழும்பு வரும்படிக்கு செய்துவிடுவார்கள். சாலையில் போனாலே "இவன் இன்ன இனம்" என கண்டுபிடித்துவிடலாம். நகரத்தில் பிறந்து தழும்பு போடாமல் எஸ்கேப் ஆகிறவர்களுக்கு பெண் கிடைக்காது. சிலர் கல்யாணம் ஆகவேண்டுமெனில் தழும்பு போட்டே ஆகவேண்டும் என்பதற்காக, கல்யாணத்துக்கு முன் வேண்டா வெறுப்பாக தழும்பு போட்டுக்கொள்வார்கள்.
பச்சை குத்துவது பல பூர்வகுடிகளின் வழக்கம். ஆனால் யூதர்கள் காலத்தில் அவர்களை சுற்றியிருந்த பிலிஸ்தினியர்கள் அவர்களின் கடவுளரின் உருவங்களை பச்சை குத்திக்கொள்ள ஆரம்பித்ததும், யூதர்கள் டக் என பச்சை குத்திக்கொள்வதை நிறுத்திவிட்டார்கள். அவர்களின் புனித நூலான தனக்கில் இந்த தடை உள்ளது. பின்னாளில் கிறிஸ்தவ்ர்களும் அதை பின்பற்றி பச்சை குத்தாமல் இருந்தார்கள். ஆனால் ரோமானிய பேரரசில் போர்களில் இறந்தவர்களுக்கு எந்த முறையில் சவ அடக்கம் செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. முகம் சிதைந்து எல்லாம் மரணம் நிகழும். யார் எந்த மதம் என எப்படி கண்டுபிடிப்பது?
அதனால் கிறிஸ்தவ்ர்கள் சிலுவையை பச்சைகுத்திக்கொள்ள ஆரம்பித்தார்கள். ஆனால் இன்னும் சில கிறிஸ்துவ பிரிவுகளில் பச்சை குத்துவது ஒப்புக்கொள்ளபடவில்லை. அமெரிக்கா உருவானபின் உலகெங்கும் போன அமெரிக்க வீரர்கள், மாலுமிகள் அங்காங்கே ஸ்டைலான உருவங்களை பச்சை குத்திக்கொன்டு வர, அமெரிக்காவில் மீண்டும் பச்சை குத்துதல் பிரபலமானது. அங்கே கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க அடிமைகள் மூலமும் பச்சை குத்துதல் பரவியது
மூக்கு, பல்லு, சூடு, பச்சைன்னு என்ன கொடுமை இது எல்லாம்? ஆண்டவன் நம்மை எப்படி படைச்சானோ, அப்படியே இருக்கலாம்னு பலருக்கும் தோன்றுவது இல்லை
#History_is_his_story
~ நியாண்டர் செல்வன்
No comments:
Post a Comment