கடந்தகாலத்தை பற்றி நினைப்பதால் வருவது டிப்ரசன்
எதிர்காலத்தை பற்றிய எதிர்பார்ப்புகளால் வருவது anxiety
குழந்தைகளுக்கு இந்த இரண்டும் இல்லை. ஏனெனில் அவை இந்த நிமிடம் என்ன விளையடலாம் என மட்டுமே யோசிக்கின்றன.
இதை power of now என அழைக்கிறார்கள்.
நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்வது power of now.
எதிர்காலத்தை பற்றி திட்டமிட தனியாக ஒரு அரைமணி நேரம் ஒதுக்குங்கள்.
நாளின் பிற 23:50 மணிநேரத்தை நிகழ்காலத்துக்கு ஒதுக்குங்கள்.
காலை ஒரு கோப்பை தேநீரை பருகுகையில் நேற்றைய தோல்விகளும் நாளைய சவால்களும் உங்கள் மனதில் இல்லாமல் இருக்கட்டும்.
அப்போது தான் அந்த கோப்பை தேநீரை அனுபவித்து பருக முடியும். ஒரு கோப்பை தேநீரை ரசித்து பருகவும் power of now தேவைப்படுகிறது.
கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். அது ஒரு சிறை.
கடந்தகால நிகழ்வுகளுக்காக பழிவாங்கும், வருந்தும் எண்ணத்தை கைவிட்டு நிகழ்காலத்துக்கு நகர்கையில் நீங்கள் ஒருவரை மனச்சிறையில் இருந்தும், தாங்க முடியாத மன அழுத்ததிலும் இருந்து விடுவிக்கிறீர்கள். அவர் 👇🏻
—> நீங்கள் தான்
-மினிமலிசம்
No comments:
Post a Comment