வாழை விமர்சனம்
*மணி
ஒரு படம் வருவதற்கு முன் எதிர்பார்ப்பாகவும், வந்தபின் அதிக பேசு பொருளாகவும் இருக்கிறது வாழை.மக்கள் மறந்த அல்லது கடந்து சென்ற ஒரு விபத்தை துல்லியமாக, எளிமையாய், உணர்வுரீதியாய் மனதை கனப்படுத்தும் விதத்தில் சொல்லிய படம் வாழை
கதை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள புளியங்குளம் கிராமத்தில் கணவனை இழந்த மனைவி மகள், மகன் சிவனைந்தனும் வாழ்ந்து வருகின்றது ஒரு குடும்பம்.கிராமமே வாழை தார் அறுத்து லோடு ஏற்றும் கூலிகளாய் வாழ்ந்து வருகின்றனர்.வாங்கிய கடனை அடைக்க விடுமுறை நாளில் பள்ளிக்கு செல்லும் சிறுவர்களும் இந்த வேலை செய்ய வேண்டும்.
விடுமுறையில் வேலை செய்யாமல் இருக்க பல்வேறு திட்டமிடுகின்றனர் சிவனைந்தனும் அவன் கூட்டாளி சேகரும்.
கூலி உயர்வு கேட்கும் கனி, முதலாளியின் சாதுர்யம் போன்றவை சினிமாத்தனம் இல்லாமல் படம் நகர்கிறது.ஒருகட்டத்தில் விடுமுறை நாளில் சிறுவன் பள்ளியிக்கு செல்லும் சூழல்?, வாழை எடுக்க வேலைக்கு போகனும்? என்ன செய்வது? என்ன ஆனது என்பது மீதிக்கதை
#ப்ளஸ்
*பள்ளியில் முதல் மதிப்பெண் மாணவன்,டீச்சர் விமலா சேகரிடம் ஈர்ப்பு,அக்காவின் காதலுக்கு தூதுவன், தாய்ப்பாசம் என அனைத்து இடங்களிலும் ரஜினி ரசிகரான சிறுவன் ஸ்கோர் அள்ளுகிறார்.
*கமல் ரசிகரான கூட்டாளி சேகரின் நடிப்பு.. நடிப்பென்று சொல்ல இயலாது.நான் குணா கமல், டீச்சர் அடிச்சாலும் வலிக்காதுடானு சொல்வது ரசனை.கமல் டாலர், ரஜினி டாலர், என அந்நாளின் நினைவுகளை படரவிட்டிருப்பார்
*நான் இல்லனாலும் வாழனும் அவனுக்கு உழைப்பை கத்துக் கொடுக்கிறேன்..உழைச்சு தான் வாழனும், கொடுப்பதற்கு உழைப்பைத்தவிர என்னிடம் என்ன இருக்குனு சொல்லும் வசனம் இதம் பதம்
*கிராமிய இளைஞனுக்கே உரிய தோற்றத்தில் கனி கலையரசன். தந்தையின் கம்யூனிஸ்ட் அட்டையை கனிக்கு கொடுக்கும் சிறுவன்.. தன் தந்தையின் வீரத்தை கனியிடம் காண்கிறான்
*நெல்லையின் இயற்கையையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளை கண்முன் கொண்டு வந்திருக்கிறார் தேனி ஈஸ்வர்.இசையும் படத்தொகுப்பும் நன்று. பஞ்சுமுட்டாய் பாட்டு சிச்சுவேசன் சாங்
*90களில் இருந்த பாடபுத்தகம், நூறு ரூபாய் நோட்டை எண்ணிக் கொடுப்பது, ராமராஜன் போட்டியிட்டதை சொல்லும் சுவர் விளம்பரம்,பள்ளிச்சூழல் என கலை இயக்குநர் உழைப்பு பாராட்டுக்குரியது.
*எல்லாவற்றையும் சாமியிடம் வேண்டிக் கொள்ளும் சிறுவன்.. இறுதியாக துயரத்தை பார்த்து நிற்பது போலவும் காட்டியிருப்பார்.
முதல் பாதியில் இடைவேளைக்கு பதில் அம்மா இளைப்பாறுகிறாள் என்று இருப்பது பாராட்டு. இறுதியில் அத்தனை துயருக்கு நடுவில் வரும் பசி..ஜெயகாந்தனின் ஒரு பிடிச் சோறு படிக்கும் போது வரும் வலியை உண்டாக்கும். ஆனால் அதில் சாப்பிடுவார். இதில் சாப்பிடுவதில்லை.அந்தக் கதையின் தாய் உயிருடனிருந்தால் இந்த தாயை நினைவூட்டுவார்
வாழை சுகமான சுமை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment