Saturday, 3 August 2024

பூமியும் வானமும்


பிலிப்பைன்ஸின் தகர கூரைகள் கொண்ட குடிசைகள் ஏராளம். அக்கம் பக்கம் நெரிசலான, இட நெருக்கடியில் சேரி பகுதியில் இவை அமைந்துள்ளன. அதனால் பிலிப்பைன்ஸ் நல்ல வெயில் அடிக்கும் நாடு என்றாலும், வீடுகளுக்குள் பகலில் கூட வெளிச்சம் வராது. மின்விளக்குகளை பகலில் போட்டுக்கொன்டு இருந்தார்கள்.

ஒரு எளிய தொழில்நுட்பம் மூலம் இதை மாற்றி மாதம் சில நூறு ரூபாய்கள் மின்கட்டணத்தை இக்குடும்பங்களுக்கு சேமித்து கொடுத்துள்ளனர்.

பிளாஸ்டிக் பெப்ஸி, கோக் பாட்டிலில் நீரை நிரப்புவார்கள். அதனுள் கிருமிகள் போகாமல் இருக்க இரு ஸ்பூன் ப்ளீச்சை போடுவார்கள். அதன்பின் மூடி போட்டு மூடிவிடுவார்கள்

தகர கூரையில் ஓட்டைபோட்டு பெப்ஸி பாட்டில் பாதி கூரைக்கு மேலும், பாதி கூரைக்கு கீழும் இருக்கும்படி வைப்பார்கள். அதன்பின் பாட்டிலை சுற்றி ஓட்டை உள்ள இடத்தில் மழைநீர் புகாமல் அடைக்கபடும்.

இப்போது சூரிய வெளிச்சம் பாட்டிலில் மேற்புறத்தில் உள்ள நீரில் பட்டு, கீழே வீட்டுக்குள் பிரகாசமாய் பாட்டில் ஒளிர்ந்து ஒளிகொடுக்கும். சுமார் 55 வாட்ஸ் பல்புக்கு சமமான வெளிச்சம் இதில் கிடைக்கிறது. பகலில் இதனால் ஏராளமான மின்சாரம் மிச்சமாகிறது. இரவில் மட்டும் மின்விளக்குகளை போட்டுக்கொண்டால் போதும்

பள்ளிகள், ஆபிஸிகள், கராஜ், கோடவுன்கள் என பல இடங்களில் இந்த பெப்ஸி பாட்டில் விளக்குகள் பயனாகின்றன

எளிய தொழில்நுட்பம். இங்கேயும் செய்து பார்க்கலாம்

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment