#Reading_Marathon2025
#25RM055
Book No:100/100+
Pages:-250
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும்
குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு
-ராபின் ஷர்மா
வாழ்க்கையின் மிக சோகமான பகுதி இறப்பதில் இல்லை. மாறாக உண்மையாக வாழ முடியாமல் போவதில் தான் உள்ளது. டால்ஸ்டாய் அவர்கள் கூறியது போல "நாம் எப்பொழுது பிறருக்காக வாழுகிறோமோ அப்பொழுதுதான் நாம் நமக்காக வாழ்கிறோம்". ஏனெனில் பிறருக்காக நன்மை செய்வதில் நமக்கும் அதில் ஒரு நன்மை ஏற்படுகிறது நேர்மறை எண்ணங்களின் உற்பத்தி நம்மை வளர்ச்சிப் பாதைக்கு இழுத்துச் செல்கிறது.
நம் வாழ்க்கையை உன்னதமாக நம்மால் மட்டுமே முடியும்.
நான் மீண்டும் வாழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நான் உன்னிடம் அதிகமாக ஓய்வெடுத்துக் கொள்வேன். இந்த பயணத்தின் போது உண்மை காட்டிலும் அதிக அளவு சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்வேன். அதிக மலைகளின் மீது ஏறுவேன். எனக்கான முழுமையான முழு நிறைவான தருணங்கள் கிடைப்பதற்கு பாடுபடுவேன்.நான் மீண்டும் வாழ்வதற்கு நேரம் கிடைத்தால் இவற்றையெல்லாம் அதிகமாகிக் கொள்வேன். வேறு எதனையும் விரும்ப மாட்டேன். ஒன்றன்பின் ஒன்றாக நிறைய பூக்களை பறித்துக் கொள்வேன் என்று நாடின் ஸ்டெயர் 89 ஆவது வயதில் கூறுவதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம் தொலைத்து விட்ட சந்தோசங்கள் எளிமையான வாழ்க்கை முறைகள் போன்றவை நமக்கு அதிக மன அழுத்தம் உள்ள வாழ்க்கையே பரிசாக கொடுக்கிறது.
மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஒருவரின் எண்ண ஓட்டங்கள் எவ்வாறு இருக்கும்.. கொரோனா தாக்கிய நோயாளி சாவின் இறுதி நொடியை அனுபவிக்கும் போது அவருடைய எண்ண ஓட்டங்கள் என்னவாக இருக்கும் என்பதை குறித்த நேரடி அனுபவத்தை எடுத்துக்காட்டின் மூலம் நமக்கு தந்துள்ளார். அப்போதுதான் வாழ்க்கை நமக்கு எவ்வளவு பெரிய பரிசு என்பதை உணர முடிகிறது.
வாழ்க்கையிலான தலைமை பண்பு என்பது குடும்பத்திலான தலைமை பண்பில் இருந்து துவங்குகிறது. எனது வாழ்வின் நிரந்தர அர்த்தம் எனது வேலையில் எனக்கு கிடைக்கும் வெற்றியில் இல்லை. மாறாக அது என் குழந்தைகளின் நற்பண்புகளை உருவாக்கும் பண்பில் உள்ளது என்பதுதான் உண்மை. குழந்தைகளின் சிறுவயதில் தென்படும் அறிகுறிகளின் படியே அவர்கள் வளர்ந்தால் மேதைகளை தவிர வேறு எவரும் நம்மிடையே இருக்க இயலாது என்பதனை ஆணித்தரமாக கூறுகிறார். ஏனெனில் அவர்களின் இயல்பிலிருந்து மடைமாற்றி நாம் நினைக்கும் மனிதர்களாக மாற்றும்போது தான் அவர்கள் வழி தவறி விடுகின்றனர் என்பதனை கூற வருகிறார்.
பொதுவாகவே வீட்டில் உள்ள உறவுகளுக்கும் குழந்தைகளுக்கும் கொடுக்கக்கூடிய மிகச்சிறந்த அன்பளிப்பு என்னவென்றால் அது நாம் அவர்களுக்கு ஒதுக்கும் நேரம் தான் என்பதை சுட்டிக்காட்டுகிறார். ஏனெனில் தலைமை பண்பு என்பது வீட்டில் இருந்து தான் துவங்குகிறது. பலரும் செய்யக்கூடிய ஒரு தவறு என்னவென்றால் எந்தவித நோக்கமும் விருப்பமும் இல்லாமல் திட்டமிடாமல் எதெச்சையாக வாழ்வது போல் வாழ்ந்தால் எல்லாம் சரியாகிவிடும் சிறந்ததாகிவிடும் என்று நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது போல் இல்லை. ஒரே மாதிரியான செயல்களை தினமும் செய்துவிட்டு வித்தியாசமான பலன்களை மட்டும் நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று எடுத்துக்காட்டுடன் கூறுகிறார்.
குழந்தைகளின் திறன்களை மேம்படுத்தவும் குடும்பத்திற்கான பண்புகளை வளர்க்க உதவும் நடைமுறைகளை ஆழமாய் சுட்டிக்காட்டுகிறது
வாழ்க்கையில் முக்கியமானவற்றை உணர்த்தும் கதை, பொதுவாக பணம் மற்றும் வேலை மேல் அதிக கவனம் செலுத்தும் வாழ்க்கையின் முடிவில் குடும்பத்துடன் அதிக நேரம் செலவழிக்காமை குறித்து கவலை உணர்வை விவரிக்கிறது.குடும்ப உறுப்பினர்களுடன் அன்பும் நம்பிக்கையும் கொண்ட உறவை வளர்ப்பது. அவர்கள் உணர்வுகளை, கனவுகளை, தேவைகளை பூர்த்தி செய்வது முக்கியம் என்கிறார்.
நிறைய மனிதர்கள் யோசிப்பதில் காலத்தை கழிக்கின்றனர். ஆனால் உணர்வதில் அவர்கள் தங்கள் நேரத்தை செலவழிக்க தயாராய் இல்லை .ஏனென்றால் அந்த உள்ளுணர்வு தான் ஞானத்துடன் தொடர்பு கொள்ள தொடங்கும். ஆழமாக சிந்திக்கும். வாழ்க்கையில் இப்படி அளவு கடந்த அர்ப்பணிப்பை நமக்குள் ஏற்படுத்தும். அடுத்த எதிர்கால திட்டத்திற்கான அமைதியும் இன்பமும் இன்றைய நம்முடைய பக்குவத்தில் தான் அடங்கி இருக்கிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான தருணம் வரும். அத்தருணத்திற்காகவே அம்மனிதன் பிறந்துள்ளான். அந்த அருமையான சந்தர்ப்பத்தை அவன் கையகப்படுத்தியபின் அவனது வாழ்க்கையின் இலட்சியநோக்கம் நிறைவேறுகிறது. அந்த இலட்சிய நோக்கத்திற்காகத்தான் அவன் தனிப்பட்ட தன்மையுடன் தேர்ச்சியுறுவான். அந்தத் தருணத்தில் அவன் தன் மேன்மையைக் காண்பான். அதுதான் அவனுடைய மிக அருமையான சமயம் என்பார்
வின்ஸ்டன் சர்ச்சில்
*மற்றவர்களை விட சிறப்பாக இருப்பது என்பது மேன்மை இல்லை. உனது முந்தைய குணத்தை விட இப்பொழுது சிறப்பாக இருக்கிறாய் என்பது தான் உண்மையான மேன்மை இருக்கிறது.
*உனது சூழல் உனது எண்ணங்களை உருவகப்படுத்துகின்றன
*எது உணர்வுகளாக்கப் படுகின்றன லோ அவைகள் உண்மையாக்கப்படுகின்றன
*யாராவது உனக்கு கை கொடுக்க வேண்டும் என்றால் நீ முதலில் அவர்கள் இதயத்தை தொட வேண்டும்
*நீங்கள் உங்கள் குழந்தைகளை வளர்க்கும் போது உங்கள் தலைமுறைகளை வளர்க்கிறீர்கள்.
*குழந்தைகளின் பலங்களை கவனியுங்கள். அவர்களின் பலவீனங்களை அல்ல
இந்த புத்தகத்தில் குடும்பத் தலைவர்களின் ஆளுமை பற்றி சொல்லும் போது ஒவ்வொருவரின் குணங்களைப் பற்றியும், எவ்வாறெல்லாம் திட்டமிட்டால் சாதனை செய்ய முடியும் என்பதனை குடும்பங்களில் இருந்து தொழில் நிறுவனங்கள் வரை நாம் புரிந்து கொள்ளக்கூடிய உளவியல் பண்புகளை இந்த புத்தகம் பேசுகிறது.
தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment