Thursday, 28 August 2025

159


#கற்கை_நன்றே_159

இன்புற்றிரு

இன்புற்றிருக்க முனை!

சுகம் சுலபம்

-ருத்ரன்

நமக்கு இருக்கும் மிகப்பெரிய தடையே நம் மனதுக்குள் நாம் வைத்திருக்கும் சில நம்பிக்கைகள் தான் என்கிறார் ருத்ரன் அவர்கள். மேலும் அவர் நம்பிக்கையும் உண்மையையும் பற்றி சொல்லும்போது.. உண்மைக்கு ஆதாரங்கள் தேவைப்படாது. நம்பிக்கைகளுக்கு தான் அவ்வப்போது ஆமாம் ஆமாம் என்று கூற வேண்டி இருக்கும். அவநம்பிக்கையும் சந்தேகத்தின் மேல் உள்ள நம்பிக்கை தான் என்கிறார்.

 நம்முள் நாம் உருவாக்கிக் கொண்டுள்ள நம்பிக்கையை பலவும் பிறரின் கணிப்பின் கருத்தின் அடிப்படையிலேயே உருவானவை. பல நேரங்களில் சரியா தவறா என்று யோசிக்காமலேயே நாம் ஏற்றுக் கொண்ட நம்பிக்கைகள் தான் நம் வழியை அடைகின்றன.ஆகவே ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் நம்பிக்கையை நாம் முதலில் அறிய வேண்டும்.

பூனைக்கும் நாய்க்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று தெரியுமா?

நாய் இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், கொஞ்சுகிறார், என்னை கவனிப்பவர் ராஜா போன்றவர், இவரை நான் மகிழ்விக்க வாலாட்டுவேன், இவருக்காக காத்திருப்பேன், இவரோடு விளையாடுவேன்.

நாய்க்கு அன்பு கொடுக்க கொடுக்க, அது உயிரையே கொடுக்கும் தன் எஜமானருக்கு, சோர்ந்து போகும் அன்பில்லாவிடில். நாய் ஒரு Team player

பூனை இப்படி நினைக்குமாம்- இவர் என் மீது அன்பாக இருக்கிறார், தூக்கி வைத்து கொஞ்சுகிறார், உணவளிக்கிறார், இவ்வளவு கவனம் கிடைக்கிறது என்றால் நான் ராஜா போன்றவன்.

பூனைக்கு அன்பு கிடைக்க கிடைக்க, அது தன்னைப்பற்றி மிகையான பிம்பம் வளர்த்துக்கொள்ளும். நீங்கள் சேவை செய்ய கடமைப்பட்டவர் என நினைக்கும். பூனை ஒரு Solitary Hunter.

மனிதர்களுள் நாய்குணம் உடையவரும் உண்டு, பூனை குணம் உடையவரும் உண்டு.

நாம் என்ன குணம் என்பதை நம்மை சார்ந்தோரை கேட்டு அறியலாம்.
பெரும்பாலும் பேய் குணம் என்று தான் சொல்வார்கள் எனவே நல்ல நண்பர்களை கேட்டு அறியவும். 

நற்காலை 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment