Sunday, 24 August 2025

157

#கற்கை_நன்றே_157

சரியான சந்தர்ப்பத்தில் பேசப்படும் ஒரு வார்த்தை எவ்வளவு சிறந்ததாக இருக்கிறது

-பிராவர்ப்ஸ்

ஆங்கிலத்தில் கேட்கும் செய்கைக்கு இரண்டு சொற்கள் உண்டு.

Hearing-கேட்பது
Listening-புரிதலுடனும் கவனமுடனும் கேட்பது

புரிதலுடன் கேட்பதே கற்றலின் முதல் படி.அதனால் தான் Hear the news. Listen the lesson என்பார்கள். தற்காலத்தில் புரியும் வகையில் சொற்களை பிரயோகப்படுத்துவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். புரிதலின் போதாமை குறைவும் ஒரு காரணம். ஆனாலும் சொல்பவர்கள் எதிரில் இருப்பவர் புரிந்து கொள்கின்றனரா என நினைத்து பேசுவது அவசியம். கேட்பவர்களும் புரியலனு உடனே சொல்லாமல்..சொல்ல  வரும் கருத்துக்களை யூகித்து உறுதி செய்து கொள்ள வேண்டும்.

1990-களில் தட்டுவோர் மற்றும் கேட்பவர் எனும் ஒரு சோதனையை எலிசபெத் நடத்தினர்.

இது மிகவும் எளிய சோதனை தான். அதாவது தட்டுபவர்களுக்கு மிகவும் பிரபலமான ஒரு 25 பாட்டுகளை கொடுத்து அதில் ஒன்றை தேர்ந்தேடுத்து அந்த மெட்டுக்கு ஏற்றார் போல் ஒரு மேசையில் தட்ட வைத்து அதை கேட்பவர்களை கண்டுபிடிக்கும் படி பணித்தார்.

இந்த சோதனையில் மொத்தம் 120 பாட்டுகளின் மெட்டுக்களை தட்ட வைத்தனர். அதில் வெறும் 3-க்கு மட்டுமே கேட்பவர்கள் சரியான பாடலை கண்டுபிடிக்க முடிந்தது. கேட்போர் பாடலின் பெயரை யூகிக்குமுன், கேட்போர் சரியாக யூகிக்கும் முரண்பாடுகளை கணிக்க எலிசபெத் தட்டியவர்களிடம் கேட்டார். அதற்கு தட்டுபவர்கள், 50 சதவீதம் சரியாக யூகித்து விடுவார்கள் என்று பதில் தந்தனர். ஆனால் கேட்பவர்களோ 2.5 சதவீதம் தான் கணிக்க முடிந்தது. ஏன் இப்படி?

தட்டுவோர் தட்டும் பொழுது, அந்த மெட்டுக்கள் அவர்கள் மனதில் உள்ளது. அதாவது ஒரு பாட்டின் பெயரை கேட்டவுடன் அந்த மெட்டுக்கள் அவர்களின் மனதில் ஓட ஆரம்பித்து விடுகிறது. அவர்களும் அதற்கு ஏற்றார் போல் தட்டுவதாகவே எண்ணினார்கள். ஆனால் கேட்பவர்கள் கேட்கக்கூடியதெல்லாம் மிகவும் வினோதமான மற்றும் சீரில்லாத வெறும் சத்தங்கள் தான்.

கேட்பவர்கள் அந்த மெட்டுக்களை கண்டுபிடிக்க மெனக்கெடுவதை பார்த்து தட்டுபவர்கள் மிகவும் கோபமுற்றனர். ஏனென்றால் தட்டுபவர்கள் தங்களை ஒரு இளையராஜாவாகவே பாவித்து தட்டுகிறார்கள் ஆனால் கேட்பவர்கள் அதை கண்டுபிடிக்க திணறுகிறார்கள்.

தட்டுபவர்களுக்கு மெட்டுக்கள் (அறிவு) வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் கேட்பவர்கள்(குறிப்பிட்ட அறிவில்லாதவர்கள்) மனநிலையை புரிந்துகொள்ள முடியாது. இது தான் அறிவின் சாபம்(Curse of Knowledge). ஒரு விடயத்தை பற்றி அறிந்தவுடன், அந்த ஞானம் இல்லாமல் இருப்பது பற்றி ஒருவரால் யோசிக்க முடியாது.

இப்படி தான் தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் தங்கள் தொடர்பு ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறார்கள். ஒரு முதலாளிக்கு தனது தொழிலின் அனைத்து நுணுக்கங்களும் அத்துப்படியாக இருக்கும். ஆனால் ஒரு புதிய தொழிலாளி ஒரு சிறு தவறு செய்யும் பொழுது அந்த முதலாளி கோபம் கொள்கிறார். ஏனென்றால் அவர் அந்த தொழிலாளியின் இடத்திலிருந்து யோசிக்காமல் தன் அறிவு தந்த சாபத்தினால் யோசிக்கிறார்.

இது தான் ஒரு முதலாளி தொழிலாளி ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துகிறது. இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு முதலாளி, தொழிலாளி உறவில் மட்டும் இல்லை. ஆசிரியர்கள்-மாணவர்கள், அரசியல்வாதி-மக்கள், சந்தைப்படுத்துபவர்கள்-வாடிக்கையாளர்கள், எழுத்தாளர்கள்-வாசகர்கள், ஆண்-பெண் ஆகிய பல இடங்களில் இந்த தொடர்பு ஏற்றத்தாழ்வு உள்ளது.

இந்த ஏற்றத்தாழ்வை சரி செய்ய இரண்டு வழிமுறைகள் உள்ளன

*புதிதாக எதையும் கற்றுக்கொள்ளாமல் இருப்பது.
*அடுத்தவர் மன நிலையிலிருந்து யோசிப்பது.
இரண்டில்.ஒன்றை நீங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment