Sunday, 31 August 2025

101


#Reading_Marathon2025
#25RM055

#12மாதம்_ஒரு_எழுத்தார்

Book No:101/100+
Pages:-238

ஆளாண்டாப் பட்சி
-பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகனின் புத்தகத் தலைப்புகள் பெரும்பாலும் வித்தியாசமானவை. இந்நாவலின் தலைப்பு ஒரு பறவையின் பெயர். இது மனிதர்களைத் தம்மருகே அண்ட விடாது.தனித்து வாழும் இயல்புடையது.தீயவர்களை அழித்து நல்லவர்களுக்கு உதவி செய்யும் குணமுடையது.இந்நாவலின் கதைக்கரு இதனை மையமாகக் கொண்டது.

 பறவைகளைப் போல் மனிதர்களும் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்கிறார்கள்.குடும்பத்திற்காக,பொருளாதாரத்திற்காகவும் நவீன காலங்களில் இடபெயர்வு என்பது சாதாரணமாய் நிகழக் கூடியது என்றாகிவிட்டது.

தற்காலத்தில் கூட்டுக்குடும்பம் என்பது அரிதாகிவிட்டது.அஞ்சு வயசில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி என்பது முதுமொழி. அண்ணன் தம்பி உறவு எப்போது சீர்குலைகிறது என்றால் முதலில் திருமணம் முடிந்தவுடன் இரண்டாவது குடும்ப சொத்து பிரிக்கப்படும் போதுதான்.

ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த நான்காவது மகனான முத்துவிற்கு
அவர்களின் சொந்த நிலம் பங்கு பிரித்து தரப்படுகிறது.அதில் அவரின் மூத்த அண்ணனுக்கு அதிக பங்கு ஒதுக்கப்படுகிறது. அடுத்தவர்களுக்கு அதிகம் ஒதுக்கப்பட்டு..முத்துவின் பங்கு குறைவாக தரப்படுகிறது.அந்த நிலமும் நீர்வரத்து இல்லாத நிலமாய் கொடுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றமடைகிறான்.

தன் மனைவியின் சொல்லால் குழப்பமடையும் முத்து ஒரு கட்டத்தில் குடும்பத்தில் நடக்கும் ஒரு கசப்பான அனுபவம் அவன் அந்த ஊரைவிட்டு குடும்பத்தைவிட்டு,நிலத்தை விற்று வெளியேற முடிவு செய்கிறான்.புதிய நிலத்தை வாங்க தயாராகிறான். தன் மாமனாரின் தோட்டப் பணியாளாக இருக்கும் குப்பண்ணா எனும் குப்பனுடன் சேர்ந்து புதிய நிலத்தை வாங்க புறப்படுகிறான் முத்து. அதிலிருந்து தான் நாவல் துவங்குகிறது.முத்து மேல் சாதி சமூகத்தினராக இருந்தாலும், குப்பண்ணா தாழ்த்தப்பட்ட சமூகத்தினராக இருந்தாலும் இருவரின் மனநிலையும் சமூகம் குறித்த புரிதலும் நாவலில் வெளிப்படுகிறது.இதுவரை வெளியுலகமே தெரியாமல் அண்ணனே உலகமாய் இருந்தவனின் வாழ்க்கை எங்கிருந்தோ வரும் குப்பண்ணாவின் அன்பு வாழ்வில் புதிய வெளிச்சத்தை தருகிறது.
குப்பனும் முத்து தன்னை நடத்தும் விதம்.குறித்து நெகிழந்து கொண்டே இருப்பான்.

இவர்கள் செல்லும் வழியில் பேசும் உரையாடல்கள், உணவு, நாடோடி வாழ்க்கை,குப்பனின் நிலம் குறித்த அறிவு,பணம் வைத்திருக்கும் பதைபதைப்பு, திருடர் பயம் ஆகியவை சொல்லப்படுகிறது.ஒரு இடத்தில் மாடு சுருண்டு படுக்க..வடமலையில் கரட்டை ஒட்டிய அந்த  இடத்தை வாங்க முற்படுகிறான்.முத்துவின் உழைப்பின் மீதான ஆர்வம் விளையாத காட்டை மேம்படுத்தி விளைவிக்கிறான். முத்துவின் மனைவி பெருமாயின் பாட்டி, அவனின் மகளும் அதற்கு உதவுகிறார்.உறவுகளின் முன்னே தன்னை ஏமாற்றியவர் முன்னே வாழ்ந்து காட்ட வேண்டும் எனும் வைராக்கியம் அவனிடம் அதிகம் இருக்கிறது.இறுதியில் பாட்டி அவனுக்கு சொல்லும் செய்தியுடன் முடிகிறது.

*பானைத் தண்ணிய முகத்தில் அடித்துக் கொண்டால் உடல் முழுக்க குளிர்ச்சி பரவிவிடும்.

ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நாவலின் ஓட்டத்திற்கு துணை புரிகின்றன.சொந்தங்களை விட எங்கிருந்தோ வரும் உறவு பிணைப்பு அனைவரின் வாழ்வையும் எண்ணிப் பார்க்க வைக்கிறது.ஒரு இடத்தில் குப்பண்ணாவை சரிசமமாக நடத்த விரும்பி..நீங்கள் காலம்.முழுக்க அடிமையாகவே இருந்து உழைக்கனுமா.. தங்களுக்கு ஒரு இடத்தை தருகிறேன்..உழைத்து முன்னுக்கு வாருங்கள் என்று சொல்லும் இடம் ஒதுக்கப்பட்ட சமூக மேலே உயர்த்தும் சமூக நீதி வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிலைகொள்ள நினைப்பது தான் வாழ்க்கை..ஆனால் எங்கோ ஒரு ராட்சச கை வந்து நம் புலம் பெயர வைக்கிறது. புலம் பெயர்ந்து வாழும் மனிதர்களின் மனநிலையை சொல்லும் நாவல்

தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment