#கற்கை_நன்றே_147
“உங்கள் முயற்சியைப் பாதியிலேயே கைவிட நீங்கள் கற்றுக் கொண்டுவிட்டால், பிறகு அது ஒரு பழக்கமாக ஆகிவிடும்,”
-வின்ஸ் லொம்பார்ட
(கால்பந்து பயிற்றுவிப்பாளர்)
நாம் பயன்படுத்தாத எதையும் நாம் இழந்துவிடுவோன் என்கிறார் ஆண்ட்ரு மேத்யூஸ்.நமக்கு உட்கார்ந்திருப்பது தான் பிடிக்கும் என்று எண்ணி சில ஆண்டுகள் சக்கர நாற்காலியில் செலவிடுவது என்று முடிவு செய்தால் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உங்களால் நடக்க முடியாது. உங்கள் கால்கள் தம் இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. இது எந்த ஒரு திறமைக்கும் மிகவும் பொருந்தக் கூடியது.
ஒரு வீணை வாசிப்பதை நீங்கள் சில ஆண்டுகள் நிறுத்தினால் பிறகு அதனை உங்களால் சுலபமாக வாசிக்க முடியாது. படைப்புத்திறன் மிக்க உங்கள் கற்பனையை பயன்படுத்துவதை நீங்கள் நிறுத்தினால் அது மாயமாய் மறைந்து விடும். ஆகவே நாம் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்
நீங்கள் ஒரு விஷயத்தை ஒரு கலையில் தொடர்ந்து பயிற்சி செய்யும் போது நீங்கள் அதிக துணிச்சல் கொண்டவராக மாறிவிடுகிறீர்கள். நம்மை நாமே சோதனைக்கு உட்படுத்தும் போது மிகவும் வலிமை அடைந்தவராக ஆகிவிடுகிறோம்.ஒன்றில் ஈடுபடும் போது நாம் தொடர்ந்து அதில் அக்கறை காட்டுகிறோம். எதுவும் தேவையில்லை எதுவும் முக்கியமில்லை என்று நாம் நமக்கு சொல்லிக் கொள்ளும் போது
நாம் ஒரு பிரச்சனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று அர்த்தம்.
நம் மனதை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். மனதின் ஆற்றல் முழுமையாக பயன்படுத்தும் போது நம் மனம் நமக்காக தொடர்ந்து செயல்பட்டு கொண்டே இருக்கும்.
ஜப்பானில் ஒரு பிரபல சொற்றொடர் உண்டு. "Win Win Method"
அதாவது தினம்தினம் ஒரு செயலை முன்புஇருந்ததைவிட சிறப்பாக செய்வது.
இன்று ஒரு படம் வரைகிறீர்கள் என்றால் அது எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் இதைவிட இன்னும் சிறப்பாக நாளை வரையவேண்டும் என்று முடிவெடுப்பதான் Win Win Method
தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பது முக்கியமானது தொடர்ந்து பயிற்சி செய்யும் போதும் நாம் சிறப்பு வருகிறோம் நம்மிடம் இருப்பவற்றை நம்மால் இயன்ற அளவு தொடர்ந்து சிறப்பாக பயன்படுத்தவில்லை என்றால் அவை நம்மிடம் நீண்ட காலம் தங்காது ஆகவே பயிற்சி செய்வோம் தொடர்ந்து இயங்குவோம்
நற்காலை
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment