Friday, 24 July 2026

45


இப்படித்தான் உருவானேன்

-பழ.கருப்பையா

பழ கருப்பையா எனும்
 பெயர் என் அப்பா சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஜனதா கட்சியில் பிடிப்பானவராய் இருந்தவர்.
பல கட்சிகள் மாறினாலும் தான் கொண்ட கொள்கையில் தீவிரமாய் இருப்பவர். அங்காடித் தெரு படத்தில் அண்ணாச்சியாக அவரின் நடிப்பு அசாத்தியமாய் இருக்கும். தனித்தமிழில் அவர் எழுதும் கட்டுதைகள் தனித்துவமானவை. துக்ளக் விழாவில் கேட்ட அவரின் உரையை பல முறை கேட்டுள்ளேன்.

தமிழ் இலக்கியம், அரசியல், சமூகச் சிந்தனை ஆகிய துறைகளில் தனித்துவமான குரலாகத் திகழ்பவர் பழ. கருப்பையா. அவரது எழுத்துகள் நேர்மையும் துணிவும் நிறைந்தவை. சமூக நிகழ்வுகளை விமர்சனப் பார்வையுடன் அணுகும் அவரது பாணி வாசகர்களிடையே தனி வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்த வரிசையில் வெளிவந்துள்ள "இப்படித்தான் உருவானேன்" என்ற நூல்வாழ்க்கைப் பயணத்தையும், சிந்தனை வளர்ச்சியையும், அனுபவங்களையும் பதிவு செய்யும் சுயசரிதைத் தன்மையுடைய படைப்பாகும்.மனிதனை உருவாக்குவது பிறப்பு அல்ல; அவன் தேர்ந்தெடுக்கும் பாதையும் தாங்கும் போராட்டங்களுமே என்பது நூல் முழுக்கத் தெரிகிறது.

காரைக்குடி குடிநீர் போராடத்தில் 19 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து குடிநீர் காவலனாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.காந்தி, வள்ளலாரை படித்த பின் வாழ்வில் திருப்புமுனை உண்டாக்கியதாக கூறுகிறார்.காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டவர்.எமர்ஜென்சி காலத்தில் ஜனதாவில் இணைந்தார்.

சோசலிச அடையாளங்களுடன் அன்றைய இளைஞராய் காரைக்குடி சட்டமன்றத் தொகுதில்  நின்று அதிமுக வேட்பாளரிடம் தோற்றுப் போனார்.தோல்வி முடிவு அல்ல; தன்னை மறுபடியும் உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என்பதுபோல

'பகடையை வீசு அதுவரைதான் நம் வேலை! தாயம் விழுபதில் என் பங்கு இல்லை என அன்றைய ஜனதா தலைவர் பா.ராமச்சந்திரன் உடனான நட்பை பற்றியும் விவரித்துள்ளார்.

ஒரு சாதாரண மனிதராக தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாசிப்பு, சமூக அக்கறை ஆகியவற்றின் மூலம் எவ்வாறு தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார் என்பதை பழ. கருப்பையா மனம் திறந்து பதிவு செய்கிறார். எமர்ஜென்சி கால கட்டத்தில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், அரசியல் தலைவர்களின் நிலைபாடுகள் குறித்து விரிவாக எழுதியுள்ளார்.

சிறுவயது நினைவுகள், குடும்பச் சூழல், கல்வி, அரசியல் ஈடுபாடு, பொதுவாழ்வு, இலக்கிய உலகில் ஏற்பட்ட அனுபவங்கள் ஆகியவை இயல்பான நடையில் சொல்லப்பட்டுள்ளன.வெற்றியையோ சுயதம்பட்ட புகழையோ சொல்லாமல் தான் சந்தித்த தோல்விகள் தவறான முடிவுகள் ஆகியவற்றையும் மறைக்காமல் பகிர்ந்து கொள்கிறார்.

பெரியார், செழியன், ஜனதா கட்சி அனுபவம் மற்றும் சோசலிச தலைவர்களுடனான நட்பு, அரசியல் ரீதியான தொடர்பினையும் கூறியுள்ளார்.இப்படிப்பட்ட அரசியல்வாதி சினிமா துறையில் இன்று நீ நாளை நான் படம் மூலம் திரைத்துறையில் நுழைகிறார்.கமல், நளினி, மோகன்,விஜயகாந்த் என அடுத்தடுத்த நட்சத்திரங்களுடன் திரைப்பட பணியை சொல்லி தன் சரிவையும் வெளிப்படையாக சொல்லியிருப்பார்.தமிழறிஞர்களுடன் உடன் இருந்த தருணம் மற்றும் கண்ணதாசன் இறந்தபோது.. அழுதும் தொழுதும் ஆகப் போவதென்ன?
தமிழ்க் கவியையுலகம் வறுமையுற்றது என முடித்திருப்பார்.

பொருத்தமான் இடங்களில் நல்ல மேற்கோள்களை சூழலுக்கு தகுந்தபடி பயன்படுத்தி இருப்பார்.

வளம்பட வேண்டாதார் யார்யாரும் இல்லை
அளந்தன போகம் அவரவர் ஆற்றான்

எல்லார்க்கும் எல்லாவற்றையும் அடையத்தான் ஆசை.ஆனால் எதுவரையில் அடைய வேண்டும் என்பது ஒருவனால் வரையறுக்கப்பட்டிருப்பதாய் நாலடியார் கூறுவதாய் மேற்கோள் சொல்லியிருப்பார் பொருத்தமாய் இருந்தது அவர் சொன்ன இடத்தில்.

"விதியை ஊழ் என்பார் வள்ளுவர். உனக்கு உரியதல்லாத செல்வத்தை எவ்வளவு வருத்திக் காத்தாலும், அது உன்னைவிட்டு போய்விடும் என்று"

"தூய யோவானாக இருப்பது வாழ்க்கைக்குக் உதவாது. அரசியலுக்கும் உதவாது

காரைக்குடியில் இவர் இளையாராஜாவுக்கு நடத்திய பாராட்டு விழாவில் தான் கலைஞர் இசைஞானி பட்டம் கொடுத்தார் என்பது புதிய செய்தியாக இருந்தது.

சமூக நீதி, மொழிப்பற்று, அரசியல் நேர்மை, மனிதநேயம், சுயமரியாதை போன்ற கருத்துகள் வலியுறுத்தி இருப்பார். ஒருவரின் வாழ்க்கையை வடிவமைப்பதில் குடும்பம், ஆசிரியர்கள், நண்பர்கள், புத்தகங்கள் மற்றும் சமூக அனுபவங்கள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும் ஆசிரியர் பல நிகழ்வுகளின் மூலம் எடுத்துரைக்கிறார்.தான் 2011 முதல் 2016 வரை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் செய்த பணிகள் சட்டமன்ற நிகழ்வுகள் ஆகியவற்றை சுவைபட எழுதியுள்ளார்.துக்ளக் ஆண்டுவிழாவில் எம்.எல்.ஏ வாக இருந்தால் என்ன செய்யலாம்? இலஞ்சம் வாங்கலாம், பெஞ்சை தட்டலாம் ,வேறென்ன செய்யலாம் என பேசியதால் கோபத்துக்கா ஆளாகி என்ன ஆனது என்றும் அதனை அவர் எதிர்கொண்ட விதமும் துணிச்சல்

எளிமையான மொழி, நகைச்சுவை உணர்வு, கூர்மையான விமர்சனப் பார்வை மற்றும் சிந்திக்க வைக்கும் சம்பவங்கள் ஆகியவை இந்நூலின் வாசிப்பு அனுபவத்தை செழுமைப்படுத்துகின்றன. இது வெறும் சுயசரிதை அல்ல; ஒரு காலகட்டத்தின் சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு வரலாற்றையும் பதிவு செய்யும் ஆவணமாக அமைகிறது.

"வாழ்க்கை கற்றுத் தரும் பாடங்கள் எந்தப் பல்கலைக்கழகமும் கற்றுத் தர முடியாது.ஒரே கட்சியில்  பலர் தொடர்ந்து இருக்கிறார்கள்! சிலர் ஏன் இருக்க முடிவதில்லை? 

வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு அல்ல; அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் தொகுப்பு என புரிந்து கொள்ளலாம்

 குறித்த பார்வையையும் பதிவு செய்கிறார்.தான் விரும்பி கேட்ட உரைகள் ஓஷோ மற்றும் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்கிறார். அறிவின் தொகுப்பாக கடைசி அத்தியாயத்தை பதிவு செய்துள்ளார்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment