Wednesday, 30 September 2026

ராமச்னுஜ்ச்ம்


கவனம் குவிக்கும் கலை

அபாரத் திறமைசாலிகள், மேதைகள் எப்படி மற்றவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்?

Expert Psychology என்னும் உளவியல் துறை இதற்குப் பல விடைகளைத் தருகிறது.
முக்கியமாகக் கடின உழைப்பு, விடாப்பிடித்தனம் ( Grit ), தணியாத ஆர்வம் ( Passion), நம்பிக்கை மனப்பாங்கு ( Mindset) எனப் பல இருக்கின்றன.
(Angelina Duckworth எழுதிய Grit , மற்றும் Carol Dweck இன் Mindset ஆகியவை மிக முக்கியமான நூல்கள்).

ஆனால் ஒரே வார்த்தையில் இவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்த வேண்டுமென்றால் அது கவனிக்கும் திறன் எனலாம் (Focus).

தாங்கள் செய்வதை மிகக் கவனமுடன் செய்வார்கள். சாதாரண பயிற்சியைவிட அதீத தீவிரமான Deliberate Practice தான் திறமையை வளர்க்கும் என்பது Peak என்ற நூலில் Anders Ericsson என்னும் இந்தத் துறையின் அத்தாரிட்டி அறிஞர் சொல்லும் கருத்து.

தீவிரப் பயிற்சியின் முதல் அம்சமே அர்ஜுனன் குறிபார்ப்பதுபோல் வேறெதையும்விட தங்கள் இலக்கு மட்டுமே பயிற்சியின் போது மேதைகளுக்குத் தெரியும். மேலும் மிகத் தெளிவாக எதனைப் பயிற்சி செய்யப் போகிறோம் , எதை முன்னேற்ற வேண்டும் என்பதைப் பற்றி எல்லாம் மிகத் தெளிவான இலக்குகள் வைத்திருப்பதுதான் Deliberate பயிற்சி.

வேறெதையும் மறந்து கவனம் குவிக்கும் நிலையை Flow என்கிறார்கள் . ( இந்தத் துறையின் பிஸ்தா Mihali Csikszentmihali என்னும் அறிஞர் எழுதிய Flow என்னும் நூல் மிக முக்கியம்).

அதே போல மிகக் கூர்மையாகக் கவனத்தைக் குவிப்பதை Deep work என்கிறார் Carl Newport.  அப்படிக் கவனம் குவித்து வேலை செய்பவர்களே போட்டிகள் அதிகரித்து வரும் இக்காலத்தில் வெற்றி பெற முடியும் என அவர் தனது Deep work என்னும் நூலில் குறிப்பிடுகிறார். 

Chris Bailey எழுதிய Hyperfocus என்னும் நூலும் முக்கியமானது.

இவை பற்றி எல்லாம் எனது மனசுக்குள் ஒரு ஜிம் நூலில் விளக்கி இருக்கிறேன்.

இந்த இணைய உலகில் அதீதமான தூண்டுதல்களால் நமது கவனம் சிதறுகிறது. படிக்க வாசிக்க முடியவில்லை. இதனை Digital Distraction என்கிறார்கள்.

இது பற்றி The Shallows by Nicholass Carr, Digital minimalism by Carl Newport ஆகிய நூல்கள் விரிவாகச் சொல்கின்றன.
இவை பற்றி தமிழ் இந்து திசை நாளிதழில் நான் எழுதிய ' உள்ளங்கையில் ஒரு சிறை " என்னும் தொடரில் சொல்லி இருக்கிறேன்.

சமீபத்தில் இது தொடர்பாக இன்னும் இரண்டு நூல்களை வாசித்தேன்.

1. Stolen Focus by Johan Hari

2. Daniel Goleman எழுதிய Focus

Daniel Goleman தான் Emotional Intelligence என்ற மிகப் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர்.

கவனம் குவிப்பது ஒரு கலை . அதற்கு இவை நல்ல வழிகாட்டிகள்

டாக்டர் ஜி ராமானுஜம்

No comments:

Post a Comment