#கற்கை_நன்றே_167
உச்சியில் இருக்க வேண்டும் என்றால் மென்மையாக இரு. பலவீனமாக இரு.ஒரு புல்லைப் போல மென்மையாக இரு. பெரிய மரத்தைப் போல பலமாக அல்ல
-ஓஷோ
குழு உணர்வு தற்போது குறைந்து வருகிறது.தன் முனைப்பு தான் மட்டும் புகழடைய வேண்டும் என்ற எண்ணமே இதற்கு முட்டுக்கட்டையாக விளங்குகிறது. இது குறித்து டாக்டர் மெ.ஞானசேகர் பகிர்ந்த செய்தி சிந்திக்க வைக்கிறது.
கூஸ் என்னும் பறவையானது முட்டாள் தனமான பறவை என்று கருதப்படுகிறது. எனவே, இந்தப் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்யலாம் என்று விரும்பினார் மில்டன் ஆஸ்லன் என்பவர்..இந்தப் பறவைகளின் செயல்பாடுகளைப் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பல அரிய தகவல்களைக் கொடுத்தார்.
உண்மையில் கூஸ் (Ghoose) பறவைகள் முட்டாள்கள் அல்ல என்பதும் அதனிடமிருந்து நாம்தான் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதும், இவரது ஆராய்ச்சியில் தெளிவானது.
இந்தப் பறவைகள் கூட்டமாகப் பறக்கின்ற போது 'V' அதாவது இந்த வடிவத்தில் இதன் பறக்கும் எல்லை 70% அதிகமாகக் கிடைக்கின்றது. இதனால் எளிதாகப் பறக்க முடிகின்றது.“வரித்தலை வாத்து” இனத்தவை 12,000 முதல் 14,000 அடி உயரத்தில், மிக அதிக வேகத்துடன் பறக்கும் திறன் கொண்டவை.
கூட்டமாக இந்தப் பறவைகள் பறக்கின்றபோது ஒருவேளை ஒரு பறவை தவறுதலாக இந்த வடிவமைப்பிலிருந்து விலகிவிட்டால் தன்னுடைய பழைய இடத்துக்கே மீண்டும் வராது. அதற்கு மாறாக வடிவமைப்பின் பின்னால் போய்விடும். அங்கே சென்றதும் அதற்கு முன்னால் பறக்கும் பறவைகளின் முயற்சியால் ஈர்க்கப்பட்டு மீண்டும் வரிசைக்குள் வந்துவிடும்.ஆரவார ஒலி எழுப்பி உற்சாகப்படுத்திக் கொள்ளும். ஏதேனும் பறவைக்கு அடிபட்டாலோ பறக்க முடியாமல் போனாலோ அப்பறவையை மற்ற இரு பறவைகள் கீழே பத்திரமாக கூட்டி வருகிறது.
கடைசி வரை அதனை கவனித்துக் கொள்கின்றன.நாம் செய்ய தயங்குவதை கூஸ் பறவைகள் செய்கின்றன.பறவைக் கூட்டத்தின் ஒற்றுமையும் கூட்டு முயற்சியுமே நமக்கு ஞானத்தைப் போதிக்கின்றன.கூட்டு உழைப்பின் சுயநலம் இருக்காது. குழு உணர்வுதான் ஒரு நிறுவனத்யையே வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது.
ஒருவரால் வெற்றி பெற முடியும், ஆனால் அனைவராக இணைந்தால் அதிசயம் செய்ய முடியும்."
சிறந்த குழு வெற்றி பெறுவது, ஒருவரின் திறமையினால் அல்ல; அனைவரின் ஒற்றுமையினால் தான்."அனைத்து வெற்றிக்களும் ஒரு சிறந்த குழுவின் அர்ப்பணிப்பினால் சாத்தியமாகின்றன." என்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment