நமது வீட்டில் இருக்கும் பிளாஸ்டிக் நாற்காலிகளின் பின்புறத்தில் துளை இருக்கும். பலர் இதை வெறும் டிசைன் என்று நினைக்கிறார்கள். ஆனால், இதற்கு பின்னால் பல சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன.
நாற்காலிகளில் துளை இருப்பதற்கு மிக முக்கியமான காரணம்.. நாற்காலிகள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் போது, காற்று அவற்றுக்கிடையே சிக்கிக் கொண்டு இறுக்கமாக ஒன்றாக ஒட்டிக் கொள்ளும்.
இதனால் அவற்றை எடுக்கும்போது கடினமாக இருக்கும். ஆனால், இந்த துளை இருப்பதால், காற்று எளிதில் வெளியேறும். ஆகையால், எத்தனை நாற்காலிகளை அடுக்கி வைத்தாலும், அவற்றை எளிதாக எடுக்க முடியும்.
அதேபோல், இந்த சிறிய துளை நாற்காலியின் எடையை குறைக்கிறது.
நாற்காலியின் பின்புறத்தில் துளை இருப்பதால், காற்று சுழற்சி எளிதாக இருக்கிறது. இதன் காரணமாக, அதில் அமர்ந்திருப்பவருக்கு வியர்வை போன்ற அசௌகரியம் ஏற்படாது.
அதேபோல், தண்ணீர் எதுவும் நாற்காலியில் விழுந்தால் அந்த துளை வழியாக தண்ணீர் எளிதாக வெளியேறுகிறது. இது நாற்காலியில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது.
இதன் மூலம், எந்த ஒரு வடிவமைப்பும் வெறும் டிசைன் மட்டுமல்ல. அதன் பின் பல நன்மைகள் மற்றும் காரணங்கள் உள்ளன என்று தெரிய வருகிறது.
-படித்தது
No comments:
Post a Comment