#கற்கை_நன்றே_168
நம் மனம் எப்போதெல்லாம் தத்தளிக்கிறது?
தோல்விகளின் போது..
பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாதபோது..
பிறர் நம்மைக் குறை சொல்லும்போது..
நம்மைவிடத் திறமை குறைவானவர்கள் உயர்வடைந்ததாக நினைக்கும் போது...
என்ன செய்வதென்று தெரியாத குழப்பத்தின்போது..
ஏதாவது பயம் நம்மை ஆட்டுவிக்கும்போது...
பொதுவாகவே பிரச்சனைகளை எதிர்கொள்ள பயம்.பிரச்சனைகள் அறிதல், அது குறித்து சிந்தித்தல், மூலகாரணம் அறிதல், வழிகளை காணுதல், அதிலிருந்து சிறந்ததை தேர்ந்தெடுத்தல் இவ்வாறு உள்ளன.
இதற்கு நாமே அறியலாம் அல்லது நலம்விரும்பிகளிடம் சொல்லி தீர்வு காணலாம். நம் பெரிய பிரச்சனையே யாரிடமும் அது குறித்து பேசாமல் ஒரு மூளையால் மட்டும் சிந்திப்பது. ஆலோசனைகள் மற்றவர்கள் அனுபவ அறிவின் மூலமும் அறியலாம்.
ஒரு நாள் மூன்று நண்பர்கள் நடந்து சென்றவர். வழியில் ஐம்பது ரூபாய் பணம் கிடக்கிறது. அதை மூவரும் எடுக்கின்றனர்..
முதலாமவன் சொன்னான், "எனக்கு இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் போல் உள்ளது" என்றான். இரண்டாமவன், "எனக்கு தாகம்" என்றான். மூன்றாவது நண்பன் "எனக்கு நல்லபசி. ஏதாவது தாகமாக உள்ளது. எனவே நீர் நிறைந்த ஏதாவது கிடைத்தால் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்" என்றான். இருக்கும் ஐம்பது ரூபாயில் இவ்வளவும் சாத்தியமா? எனவே, இவர்கள் தங்களுக்குப் பணம் கிடைத்ததையும், தங்களுக்கு இப்போது என்ன தேவை? என்பதையும் சற்றுத் தொலைவில் அமர்ந்திருந்த ஒரு பெரியவரிடம் சொன்னார்கள்.
பெரியவர் அவர்களிடமிருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு பழக்கடைக்குச் சென்றார். ஐம்பது ரூபாய்க்கும் கூடை நிறைய திராட்சைப் பழங்களை வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தார்.
முதலாமவன் திராட்சையைச் சாப்பிட்டு அதன் இனிப்பில் மகிழ்ந்தான். இரண்டாமவன் திராட்சையைச் சாப்பிட்ட போது அதன் நீர்ச்சத்து அவன் தாகத்தைத் தணித்தது. மூன்றாமவன் நிறையத் திராட்சைகளைத் தின்று பசியாற்றிக் கொண்டான். பிரச்சனையும் தீர்ந்தது; மகிழ்ச்சியும் கிடைத்தது.
பல சமயங்களில் குடும்பத்தில், தொழிலகத்தில், நிர்வாகத்தில் இதுபோன்ற சில வித்தியாசமான சிக்கல்கள் உருவாகும். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் அங்கே பிரிவுகள் தொடரும்; வேதனைகள் நிறையும்.
மாறாக, அங்கே நிதானமாக யோசித்துப் பணி செய்யும் ஒவ்வொரு நபரையும், பலன்பெறும் ஒவ்வொரு நபரையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் ஒற்றுமை வளரும்; சாதனைகள் பெருகும்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment