#Reading_Marathon2025
#25RM055
Book No:103/100+
Pages:-175
சுகி சிவம் கேள்வி பதில்கள்
நாடறிந்த பேச்சாளர் சுகி சிவம்.. அவரின் பேச்சுக்கள் கருத்துகள் எல்லாமே ஆன்மிகத்தோடு பகுத்தறிவும் பேசுவார். மூடநம்பிக்கைகளை சாடுவார்.இந்த புத்தகத்தில் உள்ள பல கேள்வி பதில்கள் கருத்து செறிவுடனும், தன்னம்பிக்கை ஊட்டும் விதத்திலும் அமைந்திருந்தன.
*முதல் கேள்வியே உங்களை உலுக்கிய வரி பற்றி சொல்லச் சொல்லும் போது?
' ஒரு எருமையைப் புத்தராக்க முடியாது என்கிறார்.
*எல்லா நேரங்களிலும் புள்ளி விபரம் முக்கியமா எனும் கேள்விக்கு..
சாதாரண ஒருபென்சிலால் 58,கி.மீ கோடு போடலாம் என்பதை படிக்கும் போது சரியான புள்ளி விபரங்கள் மீது மதிப்பு வந்ததாக தெரிவிக்கிறார்.
*ஆசை என்பது எப்போது, எப்படி பிறக்கும்? புத்தர், எந்த ஆசையை இழக்கச் சொன்னார்?
ஆசைக்கு ஜாதகம் கிடையாது. அதன் பிறப்புக்கு நேரம் காலம் எப்படி சொல்ல முடியும். அது உங்கள் மனத்தின் சலனம். உள்ளிருந்து பிறக்கும் ஓர் எண்ண அசைவு... அல்லது உணர்ச்சி.. இந்தச் சலனத்தின்படி வாழ்க்கை நிகழும்போது துன்பம் துயரம் தோன்றிவிடுகிறது. அப்படி சலனம் ஏற்படும்போது அந்தச் சலனத்தைக் கூர்ந்து கவனிக்கும்படி புத்தர் சொல்கிறார். அப்படி விழிப்படைந்து கவனிக்கும் போது ஆசை ஆற்றில் தோன்றும் மணல் குவியல் நீரோட்டத்தில் மீண்டும் கரைவதுபோல் கரைந்து போய்விடும் என்கிறார்.
*கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பதற்கு..
பலனில் பற்று வையாதே என அறிவுறுத்துகிறது.பலன் மீது மட்டும் ஆசை வரும் தீய செயலையும் செய்து விடுவார்கள்.அல்லது கடமையை சரிவர செய்ய மாட்டார்கள்.
*என்னைப் பார் யோகம் வரும் என்ற வாசகங் களுடன் கழுதை படத்தை மாட்டி வைப்பது பற்றி தங்கள் கருத்து?
மானம் அவமானம் பாராது மிகவும் அதிகம் உழைக்கும் விலங்கு கழுதை. அடிக்கடி அதன் படத்தைப் பார்த்தாவது கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வந்தால் நல்லது. மேலும் உழைத்தால் யோகம் வரும் என்ற அர்த்தத்தில் அதைப் புரிந்து கொண்டால் நீங்கள் புத்திசாலி என்று பொருள். வெறும் கழுதை படத்தைப் பார்த்தால் யோகம் வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால் அவனைவிட கழுதை ஆயிரம் மடங்கு மேலானது என்று பொருள்.
*சுகமான கெட்டது எது? மோசமான நல்லது எது?
மவுனம்.
நாம் மவுனமாக இருப்பதன் மூலம் பிறரைச் சிக்கலில் மாட்டிவிட முடியும் அப்போது அது சுகமான கெட்டது. பிறர் ஏற்படுத்தும் சிக்கலில் இருந்து தப்பிக்கவும் நாம் மவுனமாக இருக்க முடியும். அப்போது அது மோசமான நல்லது.
*இன்றுள்ள அரசியல் தொண்டர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ஒரு கதை சொல்கிறேன் Please...
வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற ஹெலிகாப்டர் வந்தது. நீளமான நூலேணி கீழே தொங்க விடப்பட்டது. பத்துபேர் ஆண்கள் உயிரை ஒரு கையிலும், ஏணியை மறுகையிலும் பிடித்தபடி வரிசையாக ஏறி விட்டனர். ஆபத்தில்லை. அடுத்து பதினோராவதாக அழகான இளம்பெண் ஒருத்தி ஏறினார். ஆனால் ஹெலிகாப்டர் பாரம் தாங்காது தடுமாறியது காப்பாற்ற வந்த ராணுவ வீரர் "தயவுசெய்து யாராவது ஒருவர் விட்டு விடுங்கள்... ஒருவர் ஏணியை விடாவிட்டால் எல்லோருக்கும் ஆபத்து" என்று கத்தினார். ஒருவரும் கேட்கவில்லை.
முடிவில் கடைசியாக ஏறிய பெண் "நான்தான் தியாகம் செய்ய வேண்டும் பெண் தியாகத்திற்காகவே பிறந்தவள் என்னை அழித்தாவது உங்களை வாழ வைப்பது என் கடமையல்லவா... எனக்கு உயிர் பெரிதல்ல... கடமைதான் என் உயிர் மூச்சு...என் சகோதரர்களே நான் போய் வருகிறேன்" என்று உருக்கமாகப் பேசினார். உடனே எல்லா ஆண்களும் (ஏணியை விட்டுவிட்டு) ஜோராகக் கைத்ததட்ட ஆரம்பித்தனர். இனி அவர்கள் கதி..?
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment