#கற்கை_நன்றே_174
இந்த நாளுக்காக மட்டும் வாழுங்கள். இந்த நாளின் வேலைக்காக மட்டும் வாழுங்கள். முன்னும் பின்னும் பார்க்கும் முட்டாள்தனமான பழக்கத்தால்தான் வாழ்வின் மோசமான கவலைகள் தோன்றுகின்றன.
-சர் வில்லியம் ஆஸ்லர்
கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்பது வழி வழியாக நாம்கேட்டுக் கொண்டு இருக்கும் வாழ்வியல் உண்மை.இதன் பொருள் இதனால் இதைச் செய்தால் எனக்கு புகழ் கிடைக்கும் பாராட்டு கிடைக்கும் என எண்ணினால் எந்த வேலையிலும் நம் திறமை வெளிப்படாது.கவனம் முழ்க்க இதை செய்தால் நம்மை பாராட்டுவார்களா என்பதாகவே இருக்கும்.எதனை எதிர்பாராமல் செய்யும் போது நமக்கு எல்லா நேரமும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. இருப்பினும் பலர் அதனை பொருட்டாக நினைக்காமல் பணியாற்றுகின்றனர்.இது குறித்து வலைப்பதிவர் பிச்சைக்காரன் பகிர்ந்த பகிர்வு
ஒரு பவுலர் பந்து வீச ஓடி வருகிறார். விக்கெட் எடுத்தால் அது ஹாட் ட்ரிக். ஒரு வரலாற்று தருணம். காரணம் அந்த அணிக்கு எதிராக பதிவாகும் முதல்ஹாட் ட்ரிக்காக இருக்கும்.
ரசிகர்கள் டென்ஷனாக காத்திருக்கின்றனர். ஃபீல்டர்கள் மிகவும் கவனமாக வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்
அவுட் ஆகிவிடக்கூடாது என கவனமாக இருக்கிறார் பேட்ஸ்மேன்
பந்து வீசப்பட அதை தடுத்தாட முயல்கிறார் பேட்ஸ்மான். பேட்டில் பட்டு பந்து ஸ்லிப் திசையை நோக்கி சென்றதுமே பவுலரும் ரசிகர்களும் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விடுகின்றனர். அந்த சிரமமான வாய்ப்பை ஃபீல்டர் கடும்,முயற்சி செய்து பாயந்து பிடித்து விடுகிறார். ஆனால்,அதுவரை காத்திராமல் கொண்டாட்டம் ஆரம்பித்து விடுகிறது
மற்ற நேரமாக இருந்தால் அந்த ஃபீல்டரின் தீரமும் முயற்சியும் வெகுவாக,பாராட்டப்பட்டு இருக்கும். ஆனால் அது பவுலரின் தருணம். எனவே அந்த பீல்டர் யார் என்றுகூட குறிப்பிடாமல் அந்த தருணத்தின் வீடியோ மில்லியன் கணக்கில் பார்வையிடப்பட்டும் பகிரப்பட்டும் வருகின்றன. இத்தனைக்கும் அந்த பீல்டர் டெண்டுல்கர் போல ஒரு ஹீரோதான். ஆனால்,அந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் ஒரு சைடு ஆக்டர் மாதிரிதான்.
இந்த யதாரத்தத்தை நாமும் பலமுறை சந்தித்து இருப்போம். நமக்கு எந்த கிரெடிட்டும் பாராட்டும் கிடைக்காது என தெரிந்தே நமது முழுமையான பஙககளிப்பை அளித்திருப்போம். யாரும் பாராட்டவில்லை என்றாலும் நமக்கு ஒரு நிறைவு இருக்கும்
காலம்
எப்போதும் நம்மை புதுப்பிக்க வைக்கும் சொற்களை யாரிடமாவது கொடுத்து வைத்து இருக்கும்.
அதை பெற்றுக் கொள்கிற வேளை வரும் வரை
அதற்காக காத்திருப்பதை தவிர வேற வழியில்லை என்கிறார் சில்வியா பிளாத்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment