#கற்கை_நன்றே_169
Practice makes a man perfect என்பதைவிட நவீன காலத்தில்
Perfect practice makes a man perfect என்பது சரியானது.
எப்போதும் நாம் பல விஷயங்களில் பழைய கற்பிதங்களையே யோசிக்காமல் நம்புகிறோம். ஆராயும் மனமும் நமக்கு ஏற்படுவதில்லை. யார் அதில் உள்ள தவறுகளை சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அறிவுலகின் வழி திறக்கிறது சாதனைகளும் இவ்வாறுதான்.மனதிலுள்ள தடையே நமக்கு அச்சத்தை தோற்றுவித்து அதற்கு தடையாக இருக்கிறது.
ஊழையும் உப்பக்கம் காண்பர் என்னும் குறளில் வள்ளுவர்,மனம் தளராமல், சோர்வின்றி இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள், தங்கள் வழியில் வரும் தீய விதியைக் கூட புறமுதுகுகாட்டி ஓடச்செய்வார்கள் என்பதாகும். தக்க சமயத்தில் தக்கபடி முயற்சி செய்பவர்களே வெற்றி அடைகிறார்கள். அதற்கு உதாரணமாய் சிறு வரலாறு..
ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களில் ஓடிக் கடக்க வரலாறு முழுவதும் பலர் முயன்றுள்ளனர். பண்டைய கிரேக்கர்கள் காலந்தொட்டு, மக்கள் அதை அடைய முயன்று கொண்டிருந்தார்கள். உண்மையில், சிங்கங்களைக் கொண்டு துரத்தினால் மக்கள் இன்னும் வேகமாக ஓடுவார்கள் என்று நினைத்து, கிரேக்கர்கள் ஓடுபவர்களுக்குப் பின்னால் சிங்களை ஓடவிட்டுத் துரத்தியதாக ஒரு தகவல் கூறப்படுகிறது.
அவர்கள் புலிப் பாலையும் குடித்துப் பார்த்தனர். அவர்கள் முயற்சித்த எதுவும் வேலை செய்யவில்லை. எனவே, ஒரு மனிதனால் நான்கு நிமிடங்களில் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் ஒரு மைல் தூரம் ஓட முடியாது என்று அவர்கள் தீர்மானித்தனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எல்லோரும் அதை நம்பினர்.நமது எலும்பு அமைப்பில் கோளாறு உள்ளது; காற்றின் எதிர்ப்பு மிகவும் அதிகம்; நம்மிடம் போதுமான நுரையீரல் சக்தியில்லை; இப்படி அதற்கு இலட்சக்கணக்கான காரணங்கள் காட்டப்பட்டன.
பிறகு ஒரே ஒரு மனிதர் ஓடி முயற்சித்துத் தோல்விகண்ட பல இலட்சம் வீரர்கள் அனைவரது கருத்தும் தவறு என்று நிரூபித்துக் காட்டினார்.
அதிசயத்திற்கு மேல் அதிசயமாக, ரோஜர் பேனிஸ்டர், அந்த நான்கு நிமிட மைல் ஓட்டத்தை நிகழ்த்திக் காட்டியதற்கு அடுத்த ஆண்டு, முப்பத்தேழு தடகள வீரர்கள் முறியடித்தனர். அதற்கு அடுத்த ஆண்டு முன்னூறு வீரர்கள் அதை முறியடித்தனர். ஒரு சில வருடங்களுக்குமுன், நியூ யார்க்கில் நடந்த ஓர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்ட பதிமூன்று வீரர்களும் அந்த நான்கு நிமிட மைல் சாதனையை முறியடித்தனர்.
முயற்சித்ததால் இந்த இலக்கை அடைய முடிந்தது.நம்ம ஊர் காது கேட்காத தவளைக் கதையும் உண்டு.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment