#Reading_Marathon2025
#25RM055
Book No:102/100+
Pages:-175
A Perfect day
-Craig Ballantyne
“First say to yourself what you would be; and then do what you have to do.” Epictetus
"முதலில் நீங்கள் என்னவாக இருப்பீர்கள் என்று உங்களுக்குள் சொல்லுங்கள்; பின்னர் நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்." எபிக்டெட்டஸ்
ஒரு நாள் எப்படி அமைய வேண்டும் என நினைத்துள்ளீர்களா? அதிகாலையில் வரும் ஒரு போன் கால்..அந்நாளில் நீங்கள் வழக்கமான அவசர உலகில் அடியெடுத்து வைக்கிறீர்கள்.அடுத்த நாள் நன்றாக அமையவேண்டுமென இன்றைய நாள் முடிகிறது.நாளையை நினைத்து திட்டமிடுவதற்கு பதிலாக அச்சமடைகிறோம். நேற்றைய நினைத்து வருந்துகிறோம். ஆனால் இன்று குறித்து நாம் ஒரு போதும் எண்ணிப் பார்ப்பதில்லை.
கடந்த காலங்களை நாம் மாற்ற முடியாது. ஆனால் கடந்த கால தவறுகளிலிருந்து கற்றுக் கொள்ளலாம்.நேற்றைய நாளைவிட
இன்று அதக நேரமும் அதிக பணியும் முடிக்க வேண்டிய கடமையும் இருப்பதாக எண்ணி இன்றைய நாளை துவங்க வேண்டும்.வெளி உலக தூண்டல்களாம் நாம் அதிக்ச்ம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளோம். இதனால் நம்முடையவ்சுயசிந்தனை, படைப்பாற்றல் அத்தனையும் இரையாக்கிக் கொண்டிருக்கிறோம். எந்தவித திட்டமும் இல்லாமல் கும்பலோடு கும்பலாய் ஓடிக்கொண்டு இருக்கிறோம். தனித்துவத்தை வளர்க்கவும் ஆசைப்படுவதில்லை.
எண்ணங்களை ஒழுங்குபடுத்துஙகள் என்கிறார். காலையில் சற்று எழுவதன் மூலம் சிறிய வேலையில் திட்டமிட நேரம் கிடைக்கும். நடிகர் சத்யராஜ் ஒரு பேட்டியில் சொல்வார்.. காலை கொஞ்சம் முன்பு எழுந்தால் நிதானமாய் பல் துலக்கலாம், மெதுவாக அலுவலகம் செல்லலாம் அதுவே தாமதமாய் எழுந்தால் எல்லாமே அவசரம். அடித்தி பிடித்து அலுவலகம் சென்று அன்றைய நாளே அவசரமாகிவிடும்.அதிகாலை எழுவதே அன்றைய நாளின் வெற்றிதான்.
நன்றான ஒருவிதியை நீயே உருவாக்கு. அதை நீயே பின் தொடர்.
இந்நூலாசிரயர் சொல்லும் கருத்துகள் காலையில் எழுவது மனச்சோர்வின்றி..இமெயில்,ஆன்லைன் வரமாட்டேன்.யாரையும் போனில் அழைக்கமாட்டேன். காலையிலேயே நேர்மறை எண்ணத்தை எனக்கு வரவழைப்பேன். அரைமணிநேரம் எழுதுவேன்.இன்று நடக்கும் சரி தவறுகளுக்கு நானே காரணம். யார்மீதும் பழி சொல்லமாட்டேன்.
*ஒரு நாளில் செய்யவேண்டிய செயல்களை ஒட்டுமொத்தமாய் செய்து மன உளைச்சல் அடையாமல் முதலில் செய்யவேண்டியமைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.
*பழக்கவழக்கங்களில் உள்ள எந்திரத்தன்மை உயிரற்றதாக, வறண்ட மனமாக்கிவிடுகிறது. இதனைக் கொஞ்சம் மாற்றுவேன்.
*திட்டமிடத்தவறும் போது தவறு செய்ய திட்டமிடுகிறோம். கோடு போட்டது போல வாழவும் முடியாது. ஆனால் தவிர்க்க விரும்பும் விசயத்தை தவிர்த்து செய்ய வேண்டிய முக்கிய வேலைகளை செய்ய மெனக்கெடலாம்.
*பொறுமையினால் ஒரு நாளை வெற்றி கொள்ளலாம். அவசரத்தினால் அல்ல.எந்த ஒரு வேலையையும் சந்தோசமாக செய்யும் போது அந்த சுமை தெரிவதில்லை.
*உன் பாதையை ஒளிர வைக்காமல், பிறரின் பாதையை நீ ஒளிரச் செய்ய முடியாது. தேவையற்ற விஷயங்களில் செலவிடும் நேரத்தை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது நாம் இழந்த ஒன்றிற்கு ஈடாக வேறொன்று நமக்கு கிடைக்கும்.
முடிவெடு, திட்டமிடு, திட்டமிட்டதை நண்பர்களிடம் நலம்விரும்பிகளிடம் பகிர். அதன் மூலம் பிரச்சினைகள் தீர்மானமாக தீர்த்து விடு என்கிறார்.
தான் மேற்கொண்ட தொழிலில் அலுவலகத்தில் மேற்கொண்ட புதிய விஷயங்கள் அனைத்தையும் பகுதி பகுதியாக நமக்கு சொல்லியிருக்கிறார். அவர் சொல்வது அனைத்தும் அவர் வாழும் சூழலில் சொல்லியிருந்தாலும்.. அதில் நமக்கு விருப்பமானதை செய்யக்கூடிய நல்ல விஷயங்களில் நாம் தேர்ந்தெடுத்து பயணிப்போம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment