#கற்கை_நன்றே_175
Stay with the statement
"நகராதீர்கள். நான் சொன்ன வாக்கியத்தோடு இருங்கள்" இல்லையெனில் மனம் தத்துவத்தின் சாரத்தை உதிர்த்து விட்டு அதையும் Entertainment வகையறாக்களில் சேர்த்துக் கொள்ளும். இதயத்தில் எடுத்துக்கொள்ளாது மூளையில் வைத்து சமாதி கட்டிவிடிவோம்
-ஜே.கிருஷ்ணமூர்த்தி
பணிபுரியும் இடத்திலோ குடும்பத்திலோ வேலைப்பகிர்வு என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.ஆனால் சிலரோ எனக்கு இந்த வேலையை நான் செய்தால் மட்டுமே முழு திருப்தி என நினைத்து அனைத்து வேலைகளையும் தாமே செய்வர். இதன் அடுத்தகட்டமாய் பிறர் அதே வேலை செய்தாலும், தான் செய்வது மட்டுமே நேர்த்தி என நினைத்து குறை கண்டுபிடிப்பார்கள்.
இதன் மூலம் தான் மட்டுமே அக்மார்க் வேலைக்காரர் என மனதில் தோன்றும். அதற்குப் பின் செய்யும் அனைத்திலும் குறை காண்பதால் இவரே செய்யட்டும் என பலர் தானம் வழங்குவார்கள்.முடிவில் இவரே எல்லா வேலைகளையும் செய்யும் சூழல் உருவாகிறது. ஒரு கட்டத்தில் இவருக்கு சலிப்பு ஏற்படுகிறது. சலிப்பு ஏற்பட்டாலும் புலம்பிக் கொண்டே அத்தனை வேலைகளையுமே இவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாரும் எளிமையாக வேலையை முடிக்கிறார்கள்..நம்மால் மட்டும். அவ்வாறு இருக்க முடியவில்லையே என எண்ணி துயருறுகின்றனர். Smart work என்பதை உள்வாங்க பயப்படுகின்றனர்
பார்வையற்ற கோழி ஒன்று இருந்தது. பாவம், ஓயாமல் மண்ணை கிளறிக்கொண்டே இருக்கும். புழுவோ, பூச்சியோ, தானியமோ அதன் பார்வையற்ற கண்ணுக்கு படவே படாது. இன்னொரு கோழி மகா கூர்மையான கண். அது கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளாது. அக் கோழி கிளறிய இடங்களில் அதன் கண்ணுக்குப் படாத தானியங்களைத் தின்றுவிட்டு ஆனந்தமாகத் திரியும்.
இந்த இரண்டாவது கோழியைப் பின்பற்றுங்கள். எல்லாவற்றையும் நாமேதான் செய்யவேண்டும் என்று தலையில் இழுத்துப் போட்டுக் கொண்டால் முன்னேறமாட்டீர்கள். உங்களிடம் எந்தத் திறமை இல்லையோ,அதைபிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள். திறமையுள்ளவரை வேலைக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்.
"நான் மகத்தான அறிவாளிகளின் மீது நின்றுதான் என் அறிவைப் பெற்றேன்" என்றார் நியூட்டன்.
மற்றவர்களிடம் நாம் வேலையை பகிரும்போது.. நம்மைவிட சிலர் சிறப்பாக செய்வார்கள் அல்லது அவர்களை நம்மை போல் வேலை நேர்த்தி பின்னாளில் உருவாகலாம்.
முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுபவர்கள், கற்றுக் கொள்ளும் வழிமுறைகளை எவ்வளவு எளிதாக்கிக் கொள்கிறார்கள் .அந்த அளவு விரைவில் இலட்சியத்தை அடையலாம்.தமக்கு ஏற்ற வகைகளை, மனப்பாங்கிற்கு துணை நிற்பவைகளை தேர்ந்தெடுப்பது போல வழிகளை பின்பற்றி நடக்க வேண்டும்.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment