#கற்கை_நன்றே_177
ஆயுள் முழுக்க இந்த வாழ்வு நமக்கு பல்வேறு தேர்வுகளை வைத்துக் கொண்டே இருக்கிறது.நாமும் பல்வேறுவிஷயங்களைத் தேத்ந்தெடுத்துக் கொண்டே இருக்கிறோம். தேர்வுக்கும், தேர்ந்தெடுப்புக்கும் வேறுபாடு உண்டு. தேர்வு நம் முடிவல்ல, தேர்ந்தெடுப்புகளை நாம் முடிவு செய்கிறோம்
-சாம்ராஜ்
Black Swan Events என்பது மிக அரிதான, எதிர்பார்க்கப்படாத, ஆனால் நடந்தால் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் ஆகும்.இந்தக் கருத்தை நசீம் நிக்கோலஸ் தலேப் (Nassim Nicholas Taleb) என்பவர் தனது “The Black Swan” (2007) என்ற புத்தகத்தில் பிரபலப்படுத்தினார்.
Black Swan நிகழ்வுகள் முன்னதாக யாருக்கும் தெரியாது, ஆனால் நடந்த பிறகு அனைவரும் அதை விளக்க முயற்சிப்பார்கள்.”பெரிய ஆபத்து என்பது நீங்கள் ஆபத்துகளைப் புரியாமல் இருப்பதுதான்.” Black Swan நிகழ்வுகள் மறைந்திருக்கும் ஆபத்துகளை வெளிப்படுத்தும்
இதுவரை நாம் கற்பனைகூட செய்துபார்த்திராத மிக அபூர்வமான நிகழ்வு ஒன்று நம் வாழ்க்கையில் நிகழும். அதற்கு நாம் தயாராகவே இருந்திருக்கவே மாட்டோம்.
அதனால் அரிதான, முன்னெப்போதும் நடந்ததில்லாத சம்பவங்களை மனம் ஏற்க மறுக்கும்.
அது நடக்கும்போது நிலை குலைந்து போவார்கள்.
மனிதர்கள் எதிர்காலத்தை கணிக்கும்போது முந்தைய அனுபவங்களின் அடிப்படையில் தான் சிந்திப்பார்கள்.எதிர்பாராத நிகழ்வு நடந்த பிறகு தான் மக்கள் அதற்கான காரணங்களைச் சொல்லி “இதுவும் சாத்தியமே” என்று கூறுவர்.
பளுதூக்கும் வீரர் ஒரு ரவுடியிடம் சண்டை போட நேர்ந்தால், சண்டை ஐந்து நிமிடம்கூட நீடிக்காது. ரவுடி கைக்குக் கிடைத்ததை வைத்து வேலையை முடித்துவிடுவான். பளுதூக்கும் வீரருக்கு உடல்வலு இருந்தாலும் இம்மாதிரிச் சூழலில் சண்டை போட்டுப் பழகவில்லை என்பதால் தோற்றுவிடுவார்.
Ready to face இம்மாதிரி முறைசாராத, டிஸ்ரப்டிவ் முறை பயிற்சிகளைத்தான் ராணுவ வீரர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். ஒருநாள் மலை ஏறச் சொல்வார்கள், அடுத்த நாள் கயிறு, அடுத்த நாள் பாலைவனத்தில் ஓட்டம், பனியில் கேம்ப்பிங். எனப் பல இடங்களில் பல சூழல்களில் அவர்களால் போரிட முடிகிறது.
உதாரணத்திற்கு எவ்வகை ஆபத்து வரும் என தீயணைப்பு வீரர்களுக்குத் தெரியாது. அதனால் அனைத்து வகை ஆபத்துகளையும் எதிர்நோக்கித் தயார் நிலையில் இருக்கிறார்கள்.
வணிகம் செய்யும்போது தினம் தினம் புதிய மனிதர்கள், புதிய சூழல்கள், புதிய சவால்கள். ஒரு நாளைக்கு வேலை செய்யும் உத்தி அடுத்த நாள் பயனாகாது. புதிய மனிதர்கள், புதிய உக்திகள் மூலம், அனுபவம் பெறுங்கள். அதன்பின் வாழ்க்கையில் மற்றவர்களை அடித்து வீழ்த்தும் ப்ளாக் ஸ்வான் நிகழ்வுகள் உங்களைப் பாதிக்காது.
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment