#கற்கை_நன்றே_173
“தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது; பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது; அந்த பளுவைச் சுமக்கத் தயாரானவர்களே சவாலான வாழ்க்கையை வாழ்கிறார்கள்”
-மாவோ
நாம் அனைவரும் வாழ்க்கையின் பெரும்பாலான நேரத்தை வேலைக்காக செலவழிக்கிறோம். அந்த வேலை நமக்கு மகிழ்ச்சியும், ஊக்கமும் தர வேண்டிய ஒன்று. ஆனால் சில நேரங்களில் அதற்கு மாறாக நமது ஆரோக்கியத்தையும், உறவுகளையும், மன அமைதியையும் கெடுக்கும் சூழலாக மாறுகிறது. அதுவே Toxic Work Culture என்று அழைக்கப்படுகிறது.
தலைமை மற்றும் மேலாண்மை குறைபாடு, தவறான தகவல் பரிமாற்றம், நம்பிக்கை குறைவு, நேரமின்மை,முறையற்ற அதிகாரம், தொழிற்சங்கங்கள் இல்லாமை போன்றவை தொடர்ந்து காணப்படும் சூழலாக நடைமுறையில் உள்ளது.
அதிக மனஅழுத்தம், அநியாயமான எதிர்பார்ப்புகள், பாகுபாடு, மதிப்பளிக்காத மேலாண்மை, பணியாளர்களுக்குள் ஒத்துழைப்பு இல்லாமை போன்றவற்றால் உருவாகும் எதிர்மறை சூழலே toxic work culture ஆகும்.மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் இதன் காரணமாகவே பணியிலிருந்து விலகுகின்றனர்.நீ இல்லாவிட்டால் வேறு பலர் வருவார்கள் என்பதும் நிறுவனங்களின் மெத்தன போக்கிற்கு காரணமாக அமைகிறது.
People don’t leave bad jobs, they leave bad bosses” என்று Gordon Tredgold கூறுகிறார்.பல மேலதிகாரிகளால் வேலையை விடுகின்றனர்.
அவர்கள் கொடுக்கும் deadline என்றால் உயிரோடு இருக்கும் வரை line பிடிக்க வேண்டும் போல இருக்கிறது.மறுபுறம் அர்ப்பணிப்புடன் வேலை செய்பவர்கள் "நம்மை யாராவது பாராட்டிவிட மாட்டார்களா எனும் எண்ணம் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கிறது. ஆனாலும் அதை மேலதிகாரிகள் புறக்கணிக்கின்றனர்.சக ஊழியர்களும் போட்டியாளராக கருதுவதால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்
உடலின் உறுப்புகளுக்கும் வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? அதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டதற்கு அறிஞர் சொன்னார்:"நாம் வாழ்வதற்குத் தேவையான உறுப்புகள் மறைந்தே இருக்கின்றன. வெளியில் தெரியும் உறுப்புகள் இல்லா விட்டாலும் நாம் வாழ்ந்துவிட முடியும்.
ஆனால் மறைந்திருக்கும் உறுப்புகள் இல்லாவிட்டால் வாழவே முடியாது!" ஒவ்வொரு நிறுவனத்திலும், அதன் வெற்றிக்காகப் பாடுபடுகிற பலர் வெளியே தெரியாமல்தான் இருக்கிறார்கள். அவர்கள்தாம் அதற்குத் தோள்கொடுக்கிறார்கள், தூக்கி நிறுத்துகிறார்கள். ஆகவே, எல்லா இடங்களிலும் வெளியே தெரிகிற வெற்றி ஒன்று இருக்கிறது. வெளியே தெரியாமல், ஆழமாக, இதயத்தைப்போல, நுரையீரலைப் போல, கல்லீரலைப்போலப் பணியாற்றுபவர்களும் இருக்கிறார்கள் ஆனால்.முறையான அங்கீகாரமின்றி
Toxic Work Culture என்பது அமைதியான விஷம் போல. அது மனிதரை மட்டுமல்ல, நிறுவனத்தையும் பாதிக்கும். எனவே, வேலை இடத்தில் மரியாதை, நம்பிக்கை, ஊக்கம், வேலை-வாழ்க்கை சமநிலை ஆகியவை இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் வேலை செய்யும் இடம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறும்
நற்காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment