#Reading_Marathon2025
#25RM055
Book No:104/100+
Pages:-191
#12மாதம்_ஒரு_எழுத்தாளர்
பூக்குழி
-பெருமாள் முருகன்
முரண்பாடுகளை மனிதர்கள் அன்போடு கடந்து செல்ல முடியாதா?சிந்தனையின் குறுகலுக்கு காரணம் என்ன?பழைய தலைமுறையையோ வரும் தலைமுறைகளை பற்றியோ சரியாக ஊகிக்க முடியாத இன்று நம்மோடு உடன் இருக்கும் ஜீவன்களை பகைத்து வாழக் காரணம் என்ன? ஏன் இதெல்லாம் என கேட்கும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு பதிலஇதனை வாசிப்போரின் மனங்களில் எழும் என உத்தரவாதத்தோடு நாவலை துவஙகுகிறார் பெருமாள் முருகன்.
சினிமாவில் வருவது போல் ஆரம்பக்காட்சியில் காதலி சரோஜாவை காதல் திருமணம் புரிந்துகொண்ட குமரேசன்..காட்டூர் ஓடையூர் சாலையில் அமைந்துள்ள தன் குடிசை வீடு இருக்கும் ஆட்டூருக்கு நடக்க வைத்து அழைத்துச் செல்கிறான். பல்வேறு கற்பனைகளுடன் செல்லும் சரோஜாவிற்கு தன் வீட்டினர் யாரேனும் போலிசுடன் வருவார்களோ என எண்ணி பயந்து கொண்டே செல்கிறாள். குமரேசனின் அம்மா உற்றார் உறவினர் காதல் திருமணம் புரிந்ததை எண்ணி கலங்குகின்றனர்.
பக்கத்துவீட்டில் இப்படி ஒரு செயல் நடந்துருந்தால் ஊர்க்காரர்கள் எப்படியெல்லாம் இளகாரமாய் பேசுவார்கள் என்று சரோஜா வீட்டிலிருந்தபடியே கேட்டுக் கொண்டிருந்தாள். ரோஜா என்று அன்போடு அழைக்கும் தன் அண்ணனை நினைத்துக் கொண்டாள். சிறுவயதிலேயே தாயை இழந்தவள் என்பதால் குடும்பமே அவளிடம் பாசம் வைத்ததை நினைத்து பொறுமினாள். ஊராரின் ஏச்சுக்களை கேட்டுக்கொண்டே இருந்தாள்.ஆனால் அத்தனை கேள்விகளையும் குமரேசன் ஒருவாறு சமாளித்துக் கொண்டிருந்தான்.
இவள்.மீதி வசை மாறி பொழிந்து கொண்டே இருப்ப்பாள் மாமியார். கிராமமே அறியாத அவள் தான் காதலில் விழுந்த கதையும் தான் வீட்டில் இருந்தபோது அப்பாவுக்கும் அண்ணனுக்கும் சமைத்ததை எண்ணி குற்ற உணர்வில் இருப்பாள் சரோஜா.தான் குடியிருந்த வரிசைவீட்டில் தான் குமரேசன் சோடா கடை வைத்திருந்ததும் தான் காதலில் விழுந்த கதையுமநினைத்துக் கொண்டாள். பாறை மீது ஆடு ,கோழி மேய்க்கும் குடும்பத்திற்கு மருமகளாய் வருவேனென நினைக்க வில்லை என்றும் தன் அண்ணனின் கோப குணத்தை நினைக்கும் போது உடல் சில்லிடுவதையும் எண்ணி பயந்தாள்.ஆனாலும் குமரேசன் ஒருவனே ஆதரவு என எண்ணி சமாதானப்படுத்திக் கொள்வாள்.
ஒரு ஆண் ஒருவனை இழுத்து வந்துவிட்டான் என்பதைவிட ஒரு பெண் ஊரைவிட்டு ஓடிவந்து விட்டாள் என்று அவள்.ஒழுக்கத்தின் மீது வசை பாடும் சுற்றத்தார்,அண்டை வீட்டார்தான் அதிகம். இதுதான் ஒவ்வொரு நாளும் சரோஜாவின் மனதில் நெருஞ்சி முள்ளாய் குத்தியது.
அதற்குள் ஊர்க்காரர்கள் ஒன்று கூடி விசாரிக்கின்றனர். எந்த ஆளு அந்தப் பொன்னு என கேட்கின்றன்ர். ஊர்க்கட்டுப்பாடு குறித்து விளக்கமளிக்கின்றனர்.ஊரிலிருந்து தள்ளி வைப்பதாக சொல்கின்றனர்.பின்பு பத்து கிலோமீட்டர் தாண்டி ஒரு சோடாக்கடை பேசி முடித்து மனைவியுடன் அதிகாலை சைக்கிளில் வேலைக்கு செல்கிறான்.உறவின்ற்வீடுகளில் சண்டை கைகளப்பு ஒவ்வொரு நாளும் திகிலுடன் செல்கிறது.மறுநாள் தலைசுற்றல் இருக்கவே.. தனியே வேலைக்குச் செல்கிறான் குமரேசன்..
அதன் பின் அந்த நாளின் இறுதியில் என்ன ஆனது என்பதுவே நெஞ்சை நெகிழ வைக்கும் பூக்குழி நாவல்.
கதையின் மையம் சாதி தான். பொழஙகுற சாதியா என கேட்கும் போதே வன்மமும் கல்ந்து தான் ஒலிக்கிறது. நகரமயமாதலில் ஓரளவு ஒழிந்தாலும் கிராமத்தில் இயற்கையோடு இன்னும் சாதி வாழ்கிறது என்கிறார். இறுதியில் கனவு போல் முடிந்துவிடும் என எண்ணும் போது.. விழிக்க முயன்றாள்.திறந்திருந்த கண்கள் மூடத்தான் செய்தன.சரி வேறுவழியில்லை கனவை தொடரலாம் என எண்ணும் போது குமரேசனின் சைக்கிள் சத்தம்.. நெஞ்சை பிசைய வைத்தது படித்து முடிக்கும் போது..
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment