" தீபம் " நா பார்த்தசாரதி எழுதிய சிறுகதை"மினிஸ்டர் வாறாரு..!" தாமரை இலக்கிய இதழில் கல்லூரியில் படிக்கிற போது (52 ஆண்டுகளுக்கு முன்னர் ) படித்ததாக நினைவு .
அரசு விழாவுக்கு மந்திரி வரும் போது கூட்டம் இருக்க வேண்டும் (அக்காலத்திலும்.) உச்சிவெயில் மண்டையைப் பிளக்கும் நேரத்தில்தான் அவர் வரப்போவதாக தகவல்.
பொதுமக்கள் அந்நேரத்தில் வேலைகளை விட்டுப்போட்டு வரமாட்டார்கள் . கூட்டமின்றிப் போனால் அமைச்சர் கோபத்துக்கு ஆளாவோம் என்ற பயத்தில் அதிகாரிகள் அவசரமாகக் கூடினர் . கூட்டம் சேர்க்க 'புதிய வழி 'கண்டுபிடித்தார்கள் .
கல்விஅதிகாரிகளுக்கும் தலைமையாசிரியர்களுக்கும் தாக்கீது பறந்தது. பள்ளிக்குழந்தைகளை ஆசிரியர்கள் விழாவுக்கு அழைத்துவரவேண்டும் என்று.
ஆசிரியர்கள் தனது வகுப்புப் பிள்ளைகளை கத்திரி வெயிலில் அழைத்துச்சென்றனர். மந்திரி வெகுநேரமாக வரவில்லை . பிள்ளைகள் மணிக்கணக்கில் குடிக்கத் தண்ணீரின்றி குடைகளின்றி வெயிலில் வாடிவதங்கி மயங்கி விழக்கூடிய நிலையிலிருந்தார்கள் .
கடமை உணர்ச்சியுடனும் மேலதிகாரிகள் மீதிருந்த பயத்துடனும் ஆசிரியர்கள் மந்திரியின் காருக்காக தவமிருந்தனர், இடையிடையே பிள்ளைகளை அரட்டி உருட்டிக்கொண்டு.
ஒரேயொரு ஆசிரியர் மட்டும் முதலிலிருந்தே இந்த ஏற்பாட்டை எதிர்த்து வந்தார் . மந்திரி வருகை தாமதமாகவும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பிள்ளைகளின் முகங்களையும் தனது கடிகாரத்தையும் மாறிமாறிப் பார்த்துவிட்டு முடிவெடுக்கிறார்.
தனது வகுப்புப் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு பள்ளியை நோக்கி நடையைக் கட்டுகிறார் .
" அவர் ஒரு .........ஸ்ட் ..!!" என்று கூட்டத்தில் ஒருவர் பக்கத்திலிருப்பவரிடம் கிசுகிசுப்பார்.
50 ஆண்டுகள் கழிந்த பின்னும் இன்றைக்கும் பொருந்தக்கூடிய சிறுகதையாக அமைந்துள்ளது.
எம் ஜி ஆர் நூற்றாண்டுவிழாக் கூட்டத்துக்கு பள்ளிப் பிள்ளைகளை கட்டாயம் அழைத்துச் செல்ல உயர்நீதிமன்றத்தில் தடை கிடைத்துள்ளது. மகிழ்ச்சி .. நிம்மதி..!!
ஆளவந்த அரசியல்வாதிகளும்
அதிகார வர்க்கமும் மாறவில்லை
இன்னமும் ..!!
--- ஆர் எஸ் மணி
No comments:
Post a Comment