Saturday 21 October 2017

சதீஷின் பதிவிலிருந்து

*#SK_Reads_Collection*

வாழ்க்கை, இதுகாறும் இலக்கியம் காணாத, கண்டு முடிக்காத, இன்னும் இருளிலேயே உலவுகிற, வெளிச்சம் காணாத மனிதச் சுரங்கங்களைக் கொண்டே இருக்கிறது. தரிசிக்கும் கண்களுக்கு எப்போதாவது அவர்கள் தட்டுப்படுகிறார்கள்.

- பிரபஞ்சன்

கலையின் ஆதாரசக்தி என்பது அது தன் காலத்தை எவ்விதம் எதிர்கொள்கிறது என்பதைப் பொறுத்த விஷயம். சமூக நெருக்கடிகளை கலைஞன் தனக்கேயுரிய முறையில் எதிர்கொள்வதும், அதற்கு இலக்கியபூர்வமான பதில்களை அல்லது கேள்விகளைத் தேடி மக்கள் முன் வைப்பதுவுமே கலைஞன் பணி.

- தேவிபாரதி

எல்லோரிடமும் அன்பு காட்டவே மனம் விரும்புகிறது. ஆனால் நடைமுறையில் அது முடியாமல் போகிறது. கூடியவரை உண்மையே பேச வேண்டும் என்பதே மனதின் விருப்பம். ஆனால் பொய்யின் துணையின்றி ஒரு நாளைக் கூட ஓட்ட முடியாமலிருக்கிறது. விருப்புக்கும் இருப்புக்கும் இடையே விழும் இந்த வெளியை சாத்தியப்படுத்துகின்ற அந்தக் காரணிகளையும் அவற்றின் ஊற்றுக்கண்களையும் இனங்காணத் தேடுவதே எழுத்தின் வேலையாக இருக்கிறது.

- நாஞ்சில் நாடன்

எழுத்தாளனுக்கும் மக்களுக்கும் பொதுவான வாழ்க்கை உள்ளது. அந்த வாழ்க்கையைப் பற்றி மக்களுக்குத் திருப்தி இல்லை. குறையாக இருக்கும் வாழ்வை எழுத்தாளன் அம்பலப்படுத்துகிறான், விமர்சிக்கிறான். மேலான எண்ணங்களை உருவாக்க முயல்கிறான். அதனால் வாசகர்களுக்கு எழுத்தாளன் மீது அக்கறை பிறக்கிறது….. யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தயங்கித் தப்பித்துப் போகும் இயல்பு மனித பலவீனங்களில் மிக முக்கியமான ஒன்றாகும். இதற்கு எதிர்நிலையாக யதார்த்தத்தைக் கண்திறந்து பார்த்து எதிர்கொள்ள வைக்கும் மனித ஆற்றலை நல்ல இலக்கியங்கள் வளர்க்கின்றன.

- சுந்தர ராமசாமி

எழுத்தாளன் ஒருபோதும் ஒரு குறிப்பிட்ட மக்கள் குழுவின் குரலாக ஒலிக்க மாட்டான். அவை அவனுக்கு தற்செயலாக அமைந்தவை மட்டுமே. அவன் ஒரு பொது மானுடக் குரலையே முன்வைப்பான்.

- ஜெயமோகன்

ஒரு நல்ல படைப்பு மனிதனை மனிதனிடமிருந்து பிரிப்பதையோ, துவேசம் பாராட்டுவதையோ ஊக்குவிக்காது.

- பிரபஞ்சன்

சொல்லப்போனால் நாம் எல்லோரும் செக்குமாடுகள்தாம். செக்குமாட்டுத்தனத்தால் மரத்துப் போய்விடாமலிருக்க, உறைக்கும்படியாக கிள்ளிப்போவதுதான் நம் எழுத்தும் அதன் பயனும். இந்தக் கிள்ளல் அரிக்கும் மனதுக்குச் சுகமாகும்; மரத்த மனதுக்குச் சுரணையாகும்.

- கவிதாசரண்

No comments:

Post a Comment