மறுபிறவி பற்றி சுஜாதா (கற்றதும் பெற்றதும்)
“எனக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை. ஆனால், எதற்கும் ஒரு செட் பனியன், அண்டர்வேர் எடுத்துச் செல்லப்போகிறேன்”
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது — உங்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உண்டா ? இதன் கிளையாக ஆத்மா என்று ஒன்று இருக்கிறதா ?அது உடலில் எங்கு இருக்கிறது ? சாவை வெல்ல முடியுமா ? நாம் சாசுவதமாக வாழ முடியுமா என்பவை அந்தக் கேள்வியின் பல வடிவங்கள். நாற்பது வயசுக்குப்புறம் பலர் மனத்தை இது குடைகிறது. இதற்கெல்லாம் பதில் தரும் விதத்தில், Immortality பற்றி ஒரு விஸ்தாரமான கட்டுரை சமயம் கிடைக்குபோது நிச்சயம் எழுதுகிறேன். அதைப்பற்றி எனக்கு தெளிவான கருத்துக்கள் உள்ளன. இப்போதைக்கு Edward Young என்பவரின் ‘Night Thoughts on Life , Death and Immortality ‘ என்னும் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள் கொடுக்கிறேன் –
“நீங்கள் சாசுவதமாக வாழ முடியும் என்பதை ஏன் சந்தேகிக்கிறீர்கள்? நீங்கள் உயிர் வாழ்வதே ஒரு அதிசயம் அல்லவா, வியப்பல்லவா ? உயிரெனும் அற்புதத்தைக் கொடுத்தவனால் அதன் முடிவை ரத்து செய்ய முடியாதா ? இதில் என்ன அதிசயம் !”
கேள்வி: மனித வாழ்க்கையில் இன்னமும் புரியாத புதிராகத் தோன்றுவது எது?
சுஜாதாவின் பதில்: மரணத்துக்குப்பின் என்ன என்பதை அறிந்து கொள்ள மரணம் சம்பவிக்க வேண்டியிருக்கிறதே அதுதான்.
கேள்வி: எல்லாவற்றிற்கும் ஒரு Saturation point இருப்பது போல் விஞ்ஞான வளர்ச்சிக்கும் உண்டா?
சுஜாதாவின் பதில்:உண்டு. உயிரின் ரகசியமும் மரணத்துக்குப் பின் என்ன என்பதும் தெரியும் போது விஞ்ஞானம் முற்று பெறும்.
சுஜாதா விஞ்ஞானம் முற்று பெறும் என்று சொல்லி சென்று விட்டார்.ஆனால் முற்று பெறாது. உயிரின் உண்மையை அறிய அன்றும் நமது பேரன்களின் காலத்திலும் ஆராய்ச்சிகள் நடைபெறும். கடைசி வரையில் உயிரின் உண்மையை அறியாமலேயே பூமியில் வாழும் மனித குலமும் அழியத் தொடங்கும்.
இந்த தளத்தில் சென்று மேலும் சில விபரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்.
http://www.quran-m.com/firas/en1/index.php?option=com_content&view=article&id=437:quran-punches-hole-in-atheism-the-dreams&catid=35:universe&Itemid=91
உயிர் என்றால் என்ன? அது கருப்பா சிவப்பா? மூளையின் செயல்பாட்டில் உந்தப்படுவதுதான் உயிரா? அல்லது காதலன் காதலியிடம் 'என் உயிரையே உனக்காக தருகிறேன்' என்று பொய்யுரைக்கும் போது காதலியும் நம்பி விடுகிறாளே அதுதான் உயிரா? ஆத்மா ஒரு உடலை விட்டு பிரிகிறதே அதை உயிர் என்று சொல்லலாமா? உயிர்களின் அடிப்படை அமினோ அமிலமாகும். இது புரதங்களுடன் ஒரு குறிப்பிட்ட தட்பவெப்ப நிலையில் இணையும்போது இயக்கமுள்ள உயிருள்ளதாக மாறுகிறது. இதனை ஒருசெல் உயிரி என்கிறோம். இந்த ஒரு செல் உயிரி புறச்சூழ்நிலையிலிருந்து உணவைப்பெற்று வளர்கின்றன. வளர்ச்சிபெற்ற இந்த ஒரு செல் உயிரி தன்னைத்தானே இரண்டாக பிரித்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின்றன. ஒரு செல் உயிரி காலப்போக்கில் புறத்தாக்குதல்களால் பல செல் உயிரிகளாக ஊர்வன, பறப்பன, நடப்பன என்று பரிணாமம் அடைந்தன என்று அறிஞர்கள் கூறுகின்றனரே அதுதான் உயிரா? இதயத்தில் லப்டப் லப்டப் லப்டப் என்று சதா வந்து கொண்டிருக்கும் அந்த சப்தம்தான் உயிரா? என்று மனிதன் மூளையை கசக்கி ஒரு முடிவை இனி வரும்காலத்திலும் எடுக்க முடியாது. ஏனெனில் அதை புரிந்து கொள்ளும் அறிவு மனிதனுக்கு கொடுக்கப்பட வில்லை.
No comments:
Post a Comment