Sunday 22 October 2017

ஸ்பைடர்

ஸ்பைடர் விமர்சனம்
*மணி

பொதுவாக ஒரு நடிகர் படம்னா எதிர்பார்ப்பு என்பது ஓபனிங் சாங் கொஞ்சம் பூ தூவி,லவ் சீன் அப்படி இருக்கும்.ஆனா ஒரு இயக்குநர் படம்னா கொஞ்சம் இன்டலிஜென்ஸ், ரசிகரை எதிர்பார்க்க வைப்பது,வேற கோணத்தில் யோசிக்க வைப்பது. பத்து பேர் சிந்திக்கிறதுக்கு முன்னாடி சிந்திச்சு ஸ்க்ரீன்ல கொண்டு வர்றது.இதை யதார்த்தமா வெளிப்படுத்தியிருக்கார் இயக்குநர் முருகதாஸ்.

ஓபனிங் சீனிலிருந்து கதைக்கான நாட் பிடித்து ஹீரோவின் இன்டலிஜென்ஸ் வேலையை சொல்லியிருக்கார்.அதே பணியில் அவர் கதாநாயகியை தேர்ந்தெடுப்பது, வில்லனுக்கு லூப் கிடைத்து தேடுவது என சினிமா முடிச்சை சிக்கனமா போடாமல் சீரியசா போட்டிருக்கிறார் முதல் பாதியில்..

கதை என்பது போன் கால் ஒட்டுக்கேட்டு க்ரைம் ரேட் குறைத்து மக்களுக்கு உதவும் காக்கிச்சட்டை போடாத நண்பன் மகேஷ் பாபு. முகம் தெரியாமல் உதவுவது என்பது மிஸ்ட் கால் கொடுத்து நதிகளை இணைப்பது மாதிரி சந்தோசத்தில் இருக்கிறார். அப்போது திடீர் திருப்பமா அலைன் பன்னி வைத்த சேனலை எல்லாம் தாறு மாறாக மாறிப்போன மாதிரி ஒரு ட்விஸ்ட்

வில்லன் யாருனு தேடுவது ட்யூப் லெஸ் டயர்ல பஞ்சர் எங்கேனு தேடுற மாதிரி கஷ்டமா இருக்கு.ஒரு கட்டத்தில் கிடைக்கும் பொறியை ஊத வச்சு, தொடர் கொலையில் துப்பு கிடைக்குது.  வில்லனை தேடி ஹீரோ சுத்தறாரு. அவன் பேக்ரவுன்ட் தெரிஞ்சி, அவன் தம்பியை  கொல்றாரு.

அப்பதான் வில்லன் இன்ட்ரோ. எல்லாரும் பாப்கார்ன் வாங்க பர்சை தேடும்போது, நான்தான் இருக்கேன்ல னு எஸ்.ஜே சூர்யா அறிமுகத்திலேயே முகத்தில் அத்தனை உணர்ச்சியையும் வெளிப்படுத்தறாரு.செம.

அப்புறம் வழக்கமா ஹீரோவோட குடும்பத்தை கொல்ல வர்றாரு.அதை ஹீரோ மைன்ட் மேப்ல மைனஸ் பண்ணி,வில்லனையே ஜீரோ ஆக்கினால் அடுத்த சீனில் வில்லன் ஹீரோவையே மட்டையாக்க, மீண்டும் வில்லன் சிரிக்க, பதிலுக்கு ஹீரோவும் வில்லனை சுட்டிடுறார்.அதுக்கப்புறம் மாஸ்டர் மைன்ட்ல உதுச்ச சிந்தனையை வச்சு ஹீரோவும் வில்லனும் செம டஃப் கொடுத்து, புதுமையாய் பொறி வைத்து வில்லனைப் பிடிக்க, மீண்டும் வில்லன் தப்பிக்க படம் ஒரு சோசியல் மெசேஜ் உடன் முடியுது.

ரமணா படத்தில் வரும் நிலநடுக்கத்தை என்லார்ஜ் செய்து ஆர்ட் டைரக்டருக்கு செம வொர்க்.பக்காவா செட் ஆகியிருக்கு.

இசை: ஆங்காங்கே துப்பாக்கி தீம் மியூசிக் தெரியுது. பீஜிஎம் மாஸ் படத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு. பாட்டுதான் பதினாறாம் வாய்ப்பாட்டை ஒப்பிப்பது மாதிரி இருக்கு.ஆனா பாட்டின் நடுவில் கதையும் கொஞ்சம் நகருது.ஒரு பாட்டில் அந்நியன் படத்தில் ரண்டக்க சரணத்தில் "உன்னை தேக்கடியில் யானை போல நெனச்சேன்,நாக்கடியில் கற்கண்டாக்கா ஒளித்தேன் என்பது மாதிரி ரிதம் வருது.இசை மிரட்டுது

சந்தோஷ்சிவன்-படம் ஆரம்பம் முதல் இறுதி வரை அந்த உற்சாக டெம்ளெட் குறையல.க்ளைமேக்ஸ் ஆஸ்பத்திரி காட்சிகள் அட ரகம்.கலரிங்,கலை அனைத்தும் ரகளை

முருகதாஸ் சார்- சீரியல் பெண்களை வைத்து திட்டம் தீட்டுவது, அம்மாவை கொலையாளியிடமிருந்து காப்பாற்றுவது, பரத்தை கண்டுபிடிப்பது, ஒரு பாதிப்பு வந்தாதான் மனிதாபிமானம் வருமானு கேட்கும் வசனம்,யூகித்தாலும் வேற பாதையில் செல்லும் திரைக்கதை.

(பஃபரிங்கே ஆகாம இவ்வளவு ஸ்பீடா கம்யூட்டரா? எந்த நெட்வோர்க் சார்)

குறிப்பா அடியாளே இல்லாத வில்லனைப் பார்ப்பது ஷேவிங் செய்த பிரபுதேவாவை பார்த்தது மாதிரி இருக்கு.வழக்கமா வில்லனுக்கு உதவ அரசியல்புள்ளி, மத்திய மந்திரி, வெளிநாட்டு வில்லன் என எந்த லிங்க்கும் இல்லாம ஒருத்தனின் வக்கிரத்தையே வில்லத்தனமாய் காட்டியது

படத்தலைப்புக்கு ஏற்ற மாதிரி சிலந்தி பூச்சியை அடைய பல வட்டம் தாண்டி பார்ப்பது (இன்டர்வல்லில் வில்லனை காட்டுவது), கிடைத்த பூச்சியை சிதைக்கும் சிலந்தியின் மனமாய் கொடூரமாய் கொல்லும் வில்லன் என படத்தலைப்பே ரெடிமேட் பேன்ட் செட் ஆன மனநிறைவு போல இருக்கு.

இந்தப்படத்திலிருந்து கற்றுக்கொடுப்பது மனிதாபிமானம். அடுத்தவனுக்கு அன்பை கொடுப்பது.
அதன்படி

*அடுத்தவனை அழ வைத்து தான்சிரிக்கும் சீரியலின் சென்டிமென்ட்டை குறைக்கலாம்
(குறிப்பா அந்த இடிச்சத்தம்)

*பெண்கள் ப்ஃரபைல் மாற்றினால் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண் மாற்றினாலும் கொடுக்கலாம்

*ரெட் சிக்னல் எரியும்போது ஹாரன் அடிக்காமல் அமைதியா இருக்கலாம்

*ட்ரையல் ரூமில் ட்ரஸ் மாத்தபோனால் எப்ப சார் கடையை திறப்பீங்கனு கதவை தட்டாம காத்திருக்கலாம்

*ஓவர் டேக் எடுக்கும்போது ஒன்னுக்கு போவதுபோல ஒத்த விரலை காட்டாம ஒதுங்கி போகலாம்

*லாரி க்ளினருக லெப்ட் திரும்பும்போது பட்டர்ஃப்ளை மாதிரி கையில் செய்கை செய்யாம திரும்பலாம்

*குட் மார்னிங்,குட் நைட் மெசேஜ் போடுவோரை இக்னோர் செய்து நல்ல பதிவு போடுவோரை ஊக்குவிக்கலாம்

*யாரு காசு கேட்டாலும் உடனே சில்லறை இல்லைனு சொல்லாம பர்சை தேடிப்பார்த்து ஒருநாளில் ஒருத்தருக்காவது ஒரு ரூபாய் போடலாம்

போட்டியை உருவாக்காதே
அன்பை உருவாக்கு

-மணிகண்டபிரபு

No comments:

Post a Comment