Sunday 29 October 2017

நூல்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 3⃣5⃣

*நூலின் பெயர்:* மாலிக்காபூர்.
*நூல் ஆசிரியர் :* திவான்.

*வரலாறு சில பெயர்களை ரத்தத்தில் எழுதி வைத்துள்ளது..*

*அந்த சில பெயர்களில் முக்கிய பெயர் மாலிக்காபூர்..*

*காம்பேயில் கைப்பற்றப்பட்ட ஒரு அடிமைதான் மாலிக்காபூர்..*

*மாலிக்காபூரின் திறமை அலாவுதீன் கில்ஜியை பிரமிக்கவைக்க அவரின் படைத்தளபதியாக உயர்கிறார் மாலிக்காபூர்..*

*பாண்டிய நாட்டில் குழப்பம் ஏற்பட, வாய்ப்பை பயன்படுத்த நினைத்த அலாவுதீன் தென்னகம் மீது படையெடுக்க மாலிக்காபூரை பணிக்கிறார்..*

*அலாவூதின் வழங்கிய செந்நிற குதிரையில் தென்னகம் விரைகிறான் மாலிக்காபூர் பெரும் படையோடு ஒரு சூறாவளியாக..*

*இந்த படையெடுப்புகள் பற்றிய உண்மை மற்றும் புரளிகள் பற்றி பேசுகிறது இந்த நூல்...*

*10 தலைப்புகளில் பல ஆதாரங்கள் மூலம் மாலிக்காபூர் மீது சுமத்தப்பட்டுள்ள பல குற்றசாட்டுகளை பல குறிப்புகள், நூல்கள் மூலம் மூலம் மறுக்கிறார் ஆசிரியர்...*

*1296 முதல் 1316 வரை மாலிக்காபூரின் ஆட்சித்திறன், போர் புரியும் வேகம், பல்வேறு அரசியல் சூழ்ச்சிகள் பற்றி பேசுகிறது..*

*ஸ்ரீரங்கம் மீது தாக்குதல்   தொடுக்கப்பட்டதாக மாலிக்காபூர் மீதான  குற்றசாட்டினை 21 ஆவணங்கள், நூல்கள், கல்வெட்டுகள் மூலம் மறுக்கிறார்...*

*திருப்பரங்குன்றம் மீதான தாக்குதல் தொடர்பாகவும் நூல் பேசுகிறது..*

*16, 17 ம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் வைணவம் பெற்றிருந்த உச்சத்தையும், அது தொடர்பான விளைவுகளையும் கூறுகிறார் ஆசிரியர்..*

*சமூகப்பிரிவுகள், மத நல்லிணக்க கோட்பாடு, இறையாண்மை தொடர்பான நடவடிக்கைகள் ஆகியவற்றில் இருக்கும் முரண்பாடுகளை பல்வேறு நூல்கள் மூலம் சுவராசியமாக விளக்குகிறார்..*

*வாசியுங்கள்..*

*வரலாற்றில் மறுவாசிப்பு அவசியம் என அறிவீர்கள்..*

*பக்கம்:* 119
*விலை:* ரூ 80
*வெளியீடு:* விகடன் வெளியீடு

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment