#Arvind Gupta
நூலைப் பற்றிய சிறு விளக்கம்:
இரண்டாம் உலக யுத்த களத்தில் டோக்கியோவில் உள்ள் ஒரு முன் மாதிரியான பள்ளியைப் பற்றிய கதை இது. அந்தப் பள்ளியில் பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், அவர்கள் கற்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பள்ளியை நிறுவகிக்கும் தலைமை ஆசிரியரான திரு.கோபயாஷி ஒரு வித்தியாசமானவர். அவர், கருத்துக்கள் வெளியிடுவதிலும், செயல்படுவதிலும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டுமெனத் திடமாக நம்பியவர்.
இந்நுலில் வரும் சிறுமி டோட்டோ-சான் உண்மை வாழ்வில் டெட்சுகோ குரோயாநாகி என்ற ஜப்பானிய தொலைக் காட்சியில் தோன்றும் புகழ்பெற்றவராவார். இவர் தனது வெற்றிக்குக் காரணம் அற்புதமான அப்பள்ளியும், அதன் தலைமை ஆசியரும் தான் எனக் கூறுகிறார்.
பல்வேறு பட்ட வயதுடைய மக்களின் மனதைக் கவர்ந்த இந்நூலில் ஜப்பானில் மிகச் சிறந்த விற்பனையைப் பெற்றுள்ளது. இந்நூல் வெளிவந்த முதல் ஆண்டிலேயே அதன் விற்பனை 4.5 மில்லியன் மார்க்குகளை எட்டியுள்ளது.
குறிப்பாக ஆசிரியர் தவறாமல் படிக்க வேண்டிய நூல்.
No comments:
Post a Comment