Sunday 29 October 2017

நூல்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 2⃣9⃣

*நூலின் பெயர்:*  இந்தியா எதை நோக்கி...
*தொகுப்பு ஆசிரியர்* செ.நடேசன்

இது கட்டுரைகளின் தொகுப்பு..

உங்களுக்கு  இந்திய நாட்டின் பன்முகத்தன்மையில், மதசார்பற்ற கோட்பாடுகளில், ஜனநாயக மாண்புகளில் நம்பிக்கை இருக்கிறதா..?

இவற்றை காக்க வேண்டும் என்ற கனவு இருக்கிறதா ... ?

இவற்றை காப்பதற்கு குரல் கொடுத்தமைக்காக தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கௌரி லங்கேஷ் போன்றோர் துப்பாக்கி  தோட்டாக்களுக்கு பலியானபோது உங்களுக்கு கோபம் வந்ததா ?

ஆம் எனில் இந்த நூலை நீங்கள் வாசிக்க வேண்டும்..

4 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்...

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளரான ராமசந்திர குஹா எழுதிய " காணாமல் போன பழமைவாதிகள் "  கட்டுரை..

தி கேரவன் ஆங்கில இதழ் ஆசிரியர் லீனாகீதா ரெகுநாத்தின் "மதவெறி அடியாள் அசீமனந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம் " என்ற கட்டுரை..

தினேஷ் நாராயணண் எழுதிய
" RSS ன் மூன்றாவது பரிணாமம் " என்ற கட்டுரை...

வெங்கி ராமகிருஷ்ணணின் கட்டுரை...

இந்த நான்கு கட்டுரைகளும் RSS, பா ஜ க , இந்துத்துவா ஆகியன குறித்து பேசுகிறது..

இ்வற்றின் தாக்கம், விளைவுகள் குறித்து பேசுகிறது...

வாசியுங்கள்..

உங்களுக்கான தத்துவார்த்த போர்க்கருவி இதுவென அறிவீர்கள்...

*பக்கம்:* 190
*விலை:* ரூ 150
*வெளியீடு:* எதிர் வெளியீடு

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment