தற்போதைய வாசிப்பில்..
*மணி
படிக்க படிக்க இன்பம்
பதிவிட நேரமில்லை.இருப்பினும் ஒருகதை மட்டும் உலுக்கி எடுத்தது
எச்சம் என்ற சிறுகதை
படுத்த படுக்கையாய் இருந்த பலவேசம் பிள்ளை இறந்துபோனார்.மலத்தின் நடுவில் கிடந்த பிரேதத்தை மனைவி,மருமகள்கள் சங்கடத்தோடு முகம் சுழித்து அழுதனர். மூத்திர வாடை மூக்கில் தாக்கியது. சத்தம்போட்டு அழுததில் பக்கத்து வீட்டுப்பெண்கள் இறந்ததை அறிந்து சோறு வடித்து, கணவனை வேலைக்கு அனுப்பி, பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பி வருகின்றனர்.ஒப்பாரி பாடப்படுகிறது. தகவல் போய்க்கொண்டே இருக்கிறது. பிரேதம் எடுக்க தொலைவிலுள்ளவர்க்கு வெயிட்டிங்.இதற்கிடையில் அங்கு நடக்கும் உரையாடல்,வெத்தலை எச்சி,போட்டு எடுக்க ஆள் வருவது என ரணகளம்
இறுதியாத்திரை.மகன்கள் இறுதி சடங்கு முடிந்து கலைந்தனர்.நாவிதன் பீடி குடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
ஒரு நடுத்தரப்பெண்ணும் இரு மகள்களும் தயங்கி தயங்கி வந்தனர்.அச்சமும் சோகத்துடனும்.கண்டாங்கி முந்தானையால் கண்ணீரை துடைத்துக்கொன்டனர்.கிழிந்த பாவாடை அணிந்த சிறுமியின் கண்களும் சிவந்திருந்தன.எரிகின்ற சிதையினை கைகூப்பி தொழுதனர். புலம்பிக்கொண்டே திரும்பி நடந்த அக்குடும்பத்தை நாவிதன் இரக்கத்துடன் பார்த்தான்
*கதை வெளியானது 1975ல்
#அவங்க யாராய் இருப்பாங்கனு நம் முடிவுக்கு விட்டுட்டார்.யாராய் இருப்பாங்க சொல்லுங்க பார்ப்போம்
No comments:
Post a Comment