Sunday 29 October 2017

நூல்

*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*

_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_

*நூல் அறிமுகம்:* 3⃣3⃣

*நூலின் பெயர்:* கேண்டீட்
*நூல் ஆசிரியர் :* வால்டேர்
( தமிழாக்கம் பத்ரி சேஷாத்ரி )

*இது ஒரு நாவல்..*

*எழுதியவர் வால்டேர்..*

*பிரெஞ்சு வரலாற்றை புரட்டி போட்ட வால்டேருக்கு அறிமுகம் தேவையில்லை..*

*ஆனால் கேண்டீட் நாவலுக்கு அறிமுகம் தேவை..*

*வால்டேரின் படைப்பில் உச்சம் என போற்றப்படுவது கேண்டீட்...*

*இது நாவல் வகையில் சேராது என்றும், இலக்கிய தரமற்றது என கத்திகள் வீசப்பட்டாலும் இலக்கிய உலகில் மிக முக்கிய நாவலாக சிலாகிக்கப் படுவது கேண்டீட்...*

*1759 ல் நாவலை வெளியிடுகிறார் வால்டேர்..*

*ஒரு நாவலுக்கு சமகால சம்பவங்களும், சரித்திரமும் வீரியமாக இயங்கிகொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நாவல் கேண்டீட்..*

*கேண்டீட் என்றால் பரிசுத்தமானவன் என்பது பொருள்...*

*1755 ல் லிஸ்பனையும்  போர்ச்சுகலையும் உலுக்கிய பூகம்பத்தில் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்த வால்டேர் " எல்லாம் ஒழுங்காக கடவுளால் அமைக்கப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட துயரங்களை மக்கள் ஏன் அனுபவிக்க வேண்டும் ? " என எழுப்பிய கேள்வியே கேண்டீட் நாவல்...*

*தேசியவாதம் என்ற பெயரில் அண்டை நாட்டவர்கள் மீது நடத்தும் அசுரத்தாக்குதல்களை கடுமையாக கேலி செய்கிறது நாவல்..*

*நாவல் முழுவதும் மதம், மத அறிஞர்கள், பாதிரியார்கள், அரசன், அரசு, ராணுவம், என அனைவரையும் ஒட்டுமொத்தமாக எள்ளிநகையாடினார் வால்டேர்..*

*வேற்றுமைகளை மறந்து சக மனிதனை நேசிப்பதுதான் மிக அவசியம் என வெளிச்சம் காட்டுகிறார் வால்டேர்..*

*வாசியுங்கள்..*

*பிரெஞ்சு இலக்கியத்திலேயே மிக அதிகமாக கல்லூரி பாடமாக வைக்கப்பட்டிருக்கும் நாவலை வாசித்த கர்வம் கொள்ளுங்கள்...*

*பக்கம்:*159
*விலை:* ரூ 125
*வெளியீடு:* கிழக்கு பதிப்பகம்

           _வாசிப்பை சுவாசமாக்குவோம்_

நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல்  🦋

No comments:

Post a Comment