*திண்டுக்கல்லில் 6⃣ வது புத்தக திருவிழா*
_நவம்பர் 30 முதல் டிசம்பர் 10 வரை_
*நூல் அறிமுகம்:* 1⃣7⃣
*நூலின் பெயர்:* நிலா வரும் நேரம்
*நூல் ஆசிரியர்:* ஈரோடு தமிழன்பன்
*இது ஒரு கவிதை நூல்..*
*இது ஒரு காதல் கவிதை நூல்..*
*ஈரோடு தமிழன்பனின் சிறகுகளுக்கு தமிழ் இலக்கிய எல்லா திசைகளும் அறிமுகம்..*
*ஈரோடு தமிழன்பனின் முதலும் கடைசியுமான ஒரே காதல் கவிதை நூல்..*
*தமிழுக்கு காதல் கவிதைகள் புதிதில்லைதான்..*
*ஆனால் காதலுக்கு மிகமிக புதியன தமிழன்பனின் இந்த காதல் கவிதைகள்..*
*எழுச்சி கவிதைகளும் ஆவேச கவிதைகளுமே மீட்டி பழகிய தமிழன்பனின் இதய வீணை இங்கு மெல்லிய அன்பை மீட்டுகிறது..*
*23 காதல் கவிதைகள் இந்த நூலை காதலர்களின் கையேடாக மாற்றி இருக்கின்றன..*
*சில பருக்கைகள் :*
*" உன்*
*விழியோர மையில்*
*வழுக்கி விழுந்ததடி*
*என் வாலிபம் "*
*" காதல் கடிதம் எழுதி*
*அஞ்சல் பெட்டியில் போட்டாய்*
*ஊரிலுள்ள பெட்டிகள்*
*எல்லாம் வெட்கத்தில்*
*சிவந்துவிட்டன "*
*" தனிமையை*
*நானே தொடர்ந்து*
*சுமப்பேன் என*
*தப்புக்கணக்கு* *போட்டுவிடாதே*
*தோள் மாற்றி சுமக்க*
*எனது மரணம்*
*தயாராக இருக்கிறது "*
*இப்படி 23 நெடுங்கவிதைகள்...*
*வாசியுங்கள்...*
*ஆன்மாவின் பரிணாமத்தை அழகுபடுத்தும் காதலை அலட்சியபடுத்திவிடாத கவிஞனுக்கு சமூக மாற்றத்தின் மீதான அக்கறையும் அந்நியப்பட்டு போவதில்லை என்பது புரியும் !*
*பக்கம்:*92
*விலை:* ரூ 50
*வெளியீடு:* நர்மதா பதிப்பகம்
_வாசிப்பை சுவாசமாக்குவோம்_
நம்பிக்கையுடன்
ஸ்ரீதர்
திண்டுக்கல் 🦋
No comments:
Post a Comment