நடுச்சாலையில் கிடந்தது
குழந்தைச் செருப்பு
முயன்று திருப்பியும் முடியாமல்
வண்டி
அதன்மீது ஏறி இறங்கிவிட்டது.
இன்னும் அடங்கவில்லை
படபடப்பு.
-------------------------------------------------------
மகுடேசுவரன்.
#இதை படித்தவுடன் நம் இந்திரஜித் சார் எழுதியது நினைவு வந்தது
"குழந்தையின் செருப்பு களவாடப்பட்டது.
எடுத்தது நிச்சயம் காலாக இருக்காது.கையாகத்தான் இருக்கும்
-குழந்தையின் செருப்பைப் பார்க்கும்போதெல்லாம் குழந்தை குறித்த கற்பனை வரும் சார்.பொம்மையில் அது வராது.செருப்பு சரியான சொல்லாட்சி என்றே கருதுகிறேன் சார்
#ஒரு கன்னத்தில் தந்தால்
மறுகன்னம் காட்டென்ற
கருத்தைப் பின்பற்றுவது
காதல் உலகமன்றோ?
-அப்துல்ரகுமான்
#சுமத்தப்பட்டிருக்கும் வாழ்க்கையின் நுகத்தடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, தளைகளை அறுத்துக் கொண்டு வெளியேற விரும்பும் மனோபாவம் எல்லா மனிதர்களின் ஆழ்மனத்திலும் புதைந்திருக்கிறது. சித்தார்த்தனை இந்த மனோபாவம்தான் புத்தனாக்கியது
-எம்.ஜி.சுரேஷ்
#எம்.ஜி.சுரேஸின் ஒரு கட்டுரையில்
ஃப்ரெஞ்சு அறிஞர் பொத்ரியார் டிவி பற்றிக் குறிப்பிடும் போது,
‘நமது இருண்ட அறைகளை இந்த ஊடகம் தனது குளிர்ந்த ஒளியால் நிரப்புகிறது. தனது ஒளிக்கதிர்களால் நம்மைத் துளைத்தபடியே இருக்கிறது. நாம் செயலற்றவர்களாக நம்மையே ஒப்புக் கொடுத்திருக்கிறோம்’
No comments:
Post a Comment